பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - டெட் மேன்ஸ் செஸ்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Copyvios
வரிசை 47:
 
''டெட் மேன்ஸ் செஸ்ட்'' 2006 சூலை 7 அன்று அமெரிக்காவில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தில் இடம்பெற்ற ஸ்பெசல் எபக்ட் மற்றும் நடிப்பு ஆகியவற்றுக்கு பாராட்டையும், கதையமைப்பு மற்றும் படத்தின் நீளம் ஆகியவற்றுக்காக விமர்சிக்கப்பட்டது. இப்படமானது வெளியான முதல் மூன்று நாட்களில் பல சதனைப் பதிவுகளைச் செய்தது. அமெரிக்காவில் முதல் வார இறுதியில் $ 136 மில்லியன் வசூலையும், அந்த நேரத்தில், உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் $ 1 பில்லியனுக்கும் மிகுதியான வசூலை விரைவாக ஈட்டியது.<ref>{{Cite news|last=Bresnan|first=Conor|date=September 11, 2006|title=Around the World Roundup: 'Cars' Dethrones Billion-Dollar 'Pirates'|archiveurl=https://web.archive.org/web/20130511144755/http://boxofficemojo.com/news/?id=2156&p=.htm|deadurl=no|url=http://boxofficemojo.com/news/?id=2156&p=.htm|accessdate=October 18, 2011|archivedate=May 11, 2013}}</ref> இது உலகளவில் மிக கூடுதலாக வசூலித்த 23 வது படமாகவும், வால்ட் டிஸ்னி ஸ்டூடியோவின் படங்களில் இதன் வசூல் சாதனனையை முறியடித்த படமாக ஆறு ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்ட படமான [[தி அவேஞ்சர்ஸ்|தி அவெஞெசர்ஸ்]] (2012) வெளியானது. இந்தப் படமானது சிறந்த கலை இயக்கம், ஒலித் தொகுப்பு, ஒலிக் கலவை ஆகியவற்றுக்கான [[அகாதமி விருது]] பரிந்துரைகளையும், சிறந்த காட்சி நுட்பத்துக்காகன அகதமி விருதையும் பெற்றது. இதன் அடுத்தத் தொடர்ச்சியாக ''அட் வோல்ட்ஸ் எண்ட்'' படம் 2007 ஆண்டு வெளியானது.
== கதை ==
போர்ட் ராயல் துறைமுகத்தின் புதிய நிவாகியான லார்ட் பெக்கட் திருமணக்கோலத்தில் இருக்கும் வில் டானரையும் எலிசபெத்தையும் ஜாக்கிற்கு உதவிய குற்றத்திற்காக கைது செய்கிறார். பின்னர் வில் டானரை மட்டும் விடுவித்து ஜாக்கிடம் இருக்கும் அதிசய திசைமானியை கொண்டுவந்தால் எலிசபெத்தை விட்டுவிடுவதாக கூறி விடுகிறார்.
 
உலகில் இணையில்லாத வலிமையும் வேகமும் கொண்ட கப்பலான ஃபிளையிங் டச்மேனின் கப்பல் தலைவன் டேவி ஜோன்ஸ். இந்த டேவி ஜோன்ஸின் முகத்தில் சாக்குக்கணவாய் போன்ற தோற்றமுடைய விசித்திரமான தாடி இருக்கும். இந்தக் கப்பலுக்கு தலைவனாக இருப்பவரின் இதயத்தை எடுத்து ஒரு பெட்டகத்தில் வைத்துவிட வேண்டும் என்பது இந்த கப்பலின் விதி. அந்த இதயத்தை யார் கொல்கிறாரோ அவரே கப்பலின் அடுத்த தலைவன். ஃபிளையிங் டச்மேனில் உள்ள மாலுமிகள் அனைவரும் நூறு ஆண்டுகளுக்கு அடிமையாய் இருப்பவர்கள். அவர்களுள் ஒருவர் வில் டானரின் தந்தையான பூஸ்ட்ரப் டானர்.
 
ஜாக் ஸ்பேரோ ஒரு சிறைச்சாலையில் இருந்து ஒரு சாவியின் வரைபடத்தை கைப்பற்றி வருகிறான். அந்த சாவியின் மூலம் டேவி ஜோன்சின் இதயம் இருக்கும் பெட்டகத்தை திறக்கலாம். அதை வைத்து அவனது நூற்றாண்டு அடிமைக் கடனை அடைக்க திட்டமிடுகிறான். பிளாக்பியர்ல் கப்பலை கிழக்கு இந்திய கம்பெனி மூழ்கடித்த போது அதனை மீட்டுக் ஜாக்கிடம் கொடுத்தவன் டேவி ஜோன்ஸ். அதன் பிரதிபலனாக ஜாக் பதிமூன்று ஆண்டுகள் கேப்டனாகவும் பின்னர் நூறு ஆண்டுகள் ஃபிளையிங் டச்மேன் கப்பலில் மாலுமியாகவும் இருக்க வேண்டும் என்பதே ஜாக் ஸ்பேரோவின் ஒப்பந்தம்.
 
சாதாரண திசைமாணிகள் வடதிசையைக் காட்டுக்கூடியன ஆனால் ஜாக் ஸ்பேரோவின் திசைமாணியோ செல்ல நினைக்கும் இடத்தின் திசையை காட்டக்கூடியது. இதைக்கொண்டு டேவி ஜோன்ஸின் இதயம் இருக்கும் இடத்துக்குச் சென்று அதைக் கைப்பற்றுவதன் மூலம் ஃபிளையிங் டச்மேனை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அதை வைத்து கடற்கொள்ளையர்களை அழிக்க லார்ட் பெக்கெட்டின் திட்டமிடுகிறான்.
 
எலிசபெத்தை காப்பாற்ற ஜாக்கைதேடி வரும் வில் டானரிடம் வரைபடத்தில் இருக்கும் சாவியை எடுத்து வந்தால் திசைமாணியை தருவதாக சொல்கிறான் ஜாக். சாவியை தேடி ஃபிளையிங் டச்மேன் கப்பலிற்கு செல்கிறான் வில். அங்கு தன் தந்தையை சந்திக்கிறான். டேவி ஜோன்ஸ் அசந்த நேரத்தில் அவனிடமிருந்து சாவியை திருடிச் செல்கிறான். அதை பயன்படுத்தி தன் தந்தையை விடுவிப்பதே வில் டானர் திட்டமிடுகிறான்.
 
அவன் திட்டமிட்டபடி தன் தந்தையையும், மனைவியையும் மீட்டானா, டேவி ஜோன்ஸின் இதயம் யாருக்கு கிடைத்தது என்பதே மீதிக்கதை.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|30em}}