கால்சியம் கார்பனேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
வரிசை 119:
=== புவிக்கப்பாலான மூலங்கள் ===
புவிக்கு அப்பாலும் கால்சியம் காா்பனேட்டின் மூலங்கள் காணப்படுகின்றன. மிகவும் நம்பத்தகுந்த சான்றுகள் செவ்வாய் கோளில் கால்சியம் காா்பனேட்டின் இருப்பை உறுதிப்படுத்துகின்றன. செவ்வாய் கோளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் (குறிப்பாக குசேவ் மற்றும் ஹைஜென்ஸ் பள்ளங்களில்). இதுவே கடந்த காலங்களில் செவ்வாய் கோளில் திரவ வடிவிலான நீா் இருந்தமைக்கான சான்றாக இருக்கிறது.
 
== பயன்கள் ==
 
# கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படுவது கால்சியம் கார்பனேட்டின் முக்கிய பயன்பாடாகும். ஒரு கட்டுமானப் பொருளாக அல்லது சாலை கட்டுமானத்திற்கான சுண்ணாம்பு குழம்பாக அல்லது ஒரு சிமெண்ட் கலவையின் பகுதிப் பொருளாக அல்லது ஒரு சூளையை எரியச் செய்யும் தொடக்கப் பொருளாக என பல்வேறு வகைகளில் கால்சியம் கார்பனேட்டு பயன்படுகிறது. கால்சியம் கார்பனேட் சுண்ணாம்பு வடிவில் தற்போது பயன்படுத்தப்படுவதில்லை, ஆனால் கட்டுமான பொருட்களுக்கான ஒரு மூல / முதன்மை பொருளாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
# கால்சியம் கார்பனேட்டு ஊது உலையில் இரும்புத் தாதுவிலிருந்து இரும்பைப் பிரித்தெடுக்க உதவுகிறது. கால்சியம் ஆக்சைடைத் தருவதற்காக இக்கார்பனேட்டு தளத்திலேயே உருவாக்கப்படுகிறது. இது இரும்பைச் சுத்திகரிப்பதற்கு பெரிதும் உதவுகிறது.
# எண்ணெய் தொழிற்சாலைகளில் துளையிடும் திரவமாக கால்சியம் கார்பனேட்டு பயன்படுத்தப்படுகிறது.
# சர்க்கரை தயாரிப்பில் சர்க்கரையை சுத்திகரிப்பதில் ஒரு மூலப்பொருளாக இது பயன்படுத்தப்படுகிறது. ஆந்த்ரசைட்டுடன் சேர்த்து சூளையில் இட்டு இதை நீற்றுவதன் மூலம் கால்சியம் ஆக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றை உற்பத்தி செய்ய முடியும். இவை இச்சுத்திகரிப்பில் பயன்படுகின்றன.
# கால்சியம் கார்பனேட் பாரம்பரியமாக கரிம்பலகைச் சுண்ணாம்பின் ஒரு முக்கிய கூறாக இருந்து வருகிறது. இருப்பினும் நவீன உற்பத்தி முறைகள் பெரும்பாலும் கிப்சம் உப்பு, நீரேற்று கால்சியம் சல்பேட் (CaSO4 • 2H2O) ஆகியனவற்றைப் பயன்படுத்துகின்றன.
# நுண் துகளாக உருவாக்கப்படும் கால்சியம் கார்பனேட்டு [[அணையாடை]]களின் ஒரு முக்கிய பகுதிப்பொருள் ஆகும்,
# வண்ணம் மற்றும் சாயத் தொழில், பீங்கான் தொழில் ஆகிய துறைகளிலும் கால்சியம் கார்பனேட்டு பயன்படுத்தப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/கால்சியம்_கார்பனேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது