உடலை துளையிடுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 4:
 
==தமிழரும் உடல் துளையிடுதலும்==
[[படிமம்:Woman wearing court dress and Indian jewelry LCCN2001705685.jpg|thumb| '''மூக்குத்தி அணிந்த இந்திய பெண்''']]
தமிழ் மக்களிடையே மத நம்பிக்கை சார்ந்ததாகவும் கலாச்சார பண்பாடு சார்ந்ததாகவும் உடல் துளையிடும் பழக்கம் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.
 
===காது குத்துதல்===
[[படிமம்:Ear with earring.jpg|thumb|right|90px|'''தோடு''']]
தமிழர் மரபில் குழந்தை பிறந்த பதினோராம் மாதம் அல்லது ஒன்று மூன்று ஐந்து என ஒற்றைப்படை வயதில் காது குத்துதல் என்ற சடங்கை இருபாலருக்கும் செய்விக்கின்றனர்.காதணி விழா என்பது இந்து தமிழர்களிடையே காணப்படும் ஒரு சடங்காகும். இந்த சடங்கில் குழந்தைகளுக்கு காதில் துளையிட்டு தங்கக் காதணி அணிவிக்கப்படுகிறது. இச்சடங்கின் முறைகள் சாதி சமயத்திற்கு தக்கவாறு மாறுபடுகிறது.நல்ல நாள் மற்றும் நேரத்தினை கணக்கிட்டு காதணி விழாவிற்கு ஏற்பாடு செய்கின்றனர். தமிழ்ச் சாதிகளில் பெரும்பாலும் குலதெய்வ கோயில்களில் முடி எடுத்தல் மற்றும் காதுகுத்தல் நடைபெறுகிறது. சிலர் வீடுகளிலும், மண்டபங்களிலும் விழா நிகழ்த்துகின்றனர். இடம் மற்றும் காலம் பற்றிய முடிவு எடுக்கப்பட்டதும்,. முக்கிய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கு வாய்மொழியாகவோ, பத்திரிக்கை அடித்து கொடுத்தோ செய்தியினை தெரிவிக்கின்றனர்.தோடு (earring) காதில் அணியப்படும் ஓர் ஆபரணமாகும். பெண்களால் அதிகமாகவும் ஆண்களால் ஓரளவும் அணியப்படுகிறது. ஆண்கள் அணியும் தோடு கடுக்கன் எனப்படுகிறது. காதுச் சோணையில் துவாரமிட்டே தோடு அணியப்படுகிறது. உலோகம், நெகிழி, கண்ணாடி போன்ற பலதரப்பட்ட பொருட்களால் தோடு செய்யப்படுகிறது. தமிழர் உட்பட்ட பல இனத்தவரால் பெண் குழந்தைகளுக்கு மிகச் சிறு வயதிலேயே காது குத்தப்பட்டுத் தோடு அணிவிக்கப்படுகிறது. இதனை ஒரு சடங்காகவும் கொண்டாடுவதுண்டு. திருமணத்தின்போது ஆணுக்குக் கடுக்கன் பூட்டும் வழக்கம் சில பிரதேசத் தமிழர் திருமணங்களில் வழக்கமாக இருந்தது. இப்போது அவ் வழக்கம் அருகிவிட்டது.
 
===மூக்கு குத்துதல்===
பெரும்பாலும் சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் இந்த சடங்கை செய்கின்றனர். மூக்குத்தி (Nose-jewel) என்பது மூக்கில் துளையிட்டு அணியும் நகை. இப்போது, துளையிடாமலே அணியக் கூடிய மூக்குத்திகளும் கிடைக்கின்றன. பொதுவாக திருமணமான பெண்களே மூக்குத்தி அணிகிறார்கள். பெரும்பாலும் மூக்குத்தி உள்ளிட்ட மூக்கணிகள் தங்கத்திலேயே செய்யப்படுகின்றன. வெள்ளி, பித்தளையும் பயன்படுவதுண்டு.மூக்கின் எந்த பகுதியையும் தோலை அல்லது குருத்தெலும்புகள் மூடியிருக்கும் இடத்தில், பொதுவாக நகைகளை அணிந்து கொள்வதற்காக, மூக்குத்தி (மூக்கு குத்துதல்-நகை) என அழைக்கப்படுகின்றன. பல்வேறு வகையான மூக்கு துளையிடல் வகைகளில் இது பொதுவானது. ஆனால் குழந்தை மூன்றாவதும் ஆண் வாரிசாகவே பிறந்தால் சிலர் மூக்கை துளைத்து மூக்குத்தி அணிவித்து சடங்கை செய்கின்றனர்.
[[படிமம்:Nose double piercing Both women nostrils Desi Indian girl Tamilnadu Traditional village dress Jpg photo Tamil feature story Etan Doronne Myindiaexperience.jpg|thumb|'''மூக்குத்தி அணிந்திருக்கும் தமிழ்ப் பெண்''']]
 
===அலகு குத்துதல்===
[[படிமம்:Cheek Piercing.jpg||thumb|'''அலகு குத்துதல்''']]
அலகு குத்துதல் என்பது தமிழ்க் கோயிற் திருவிழாக்களில் பாற் செம்பு, காவடி போன்றன எடுப்போர் தம் வாயில் கூரிய உலோக ஊசிகளால் குத்திக் கொள்ளுவது ஆகும். இந்த அலகு குத்துதல் காவடி, பால் செம்பு எடுக்கு முன்னர் பூசை செய்து தீபாரதனை காட்டிய பின் நடைபெறும். பக்தரின் வாயில் ஒரு கன்னத்திலிருந்து மற்றொரு கன்னத்தை நோக்கி சிறிய ஊசியால் குத்தி விடுவார்கள். ஊசியின் ஒரு முனை திரிசூலம் அல்லது வேல் போல் இருக்கும். மற்றொரு முனையை ஒரு கன்னத்தில் குத்தி, மற்றக் கன்னத்தின் ஊடாக எடுப்பார்கள்; அந்த முனையில் வேல் அல்லது திரிசூலம் சொருகுவார்கள். சில நேரங்களில் நாக்கை வெளியே எடுத்து மேலிருந்து கீழ் நோக்கிக் குத்துவதுமுண்டு.
 
"https://ta.wikipedia.org/wiki/உடலை_துளையிடுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது