உரோமனெசுக் கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ரோமனெசுக் கலை''' (Romanesque art) எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''ரோமனெசுக் கலை''' (Romanesque art) என்பது, ஏறத்தாழ கிபி 1000 தொடக்கம், 12 ஆம் நூற்றாண்டில் அல்லது அதற்குச் சற்றுப் பின் கோதிக் பாணியின் எழுச்சி வரை ஐரோப்பாவில் நிலவிய கலைப்பாணி ஆகும். இதற்கு முன்னிருந்த காலப்பகுதி முன்-ரோமனெசுக் காலம் எனப்படுகின்றது. இப்பெயர் 19 ஆம் நூற்றாண்டுக் கலை வரலாற்றாளர்களால் கட்டிடக்கலை தொடர்பில் முதலில் பயன்படுத்தப்பட்டது. குறித்த கட்டிடக்கலைப் பாணி உரோமக் கட்டிடக்கலைப் பாணியின் பல அடிப்படை அம்சங்களைத் தன்னகத்தே கொண்டிருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது. வட்டவடிவ வளைவுகள், வில்வடிவ வளைகூரைகள், அரைவட்ட முகப்பு அமைப்பு, இலை அலங்காரம் என்பன இந்த அம்சங்களில் குறிப்பிடத் தக்கவை. ஆனால், இப்பாணியில் முற்றிலும் வேறான பல அம்சங்களும் அடங்கியிருந்தன. தெற்கு பிரான்சு, இசுப்பெயின், இத்தாலி போன்ற நாடுகளின் பாணியில் பிந்திய "அன்டிக்" காலக் கட்டிடக்கலையின் தொடர்ச்சி காணப்பட்டது. ஆனால் சிசிலி தொடக்கம் இசுக்கண்டினேவியா வரையான கத்தோலிக்க ஐரோப்பா முழுவதும் பரவிய முதல் பாணி ரோமனெசுக் பாணியே ஆகும். ரோமனெசுக் பாணியில், பைசண்டியக் கலையின் செல்வாக்கும், பிரித்தானியத் தீவுகளின் தீவுக்குரிய கலையின் செல்வாக்கும் காணப்படுகின்றன.
 
[[பகுப்பு:கலை வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/உரோமனெசுக்_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது