பி. டி. பர்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3,595 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
→‎வாழ்க்கை வரலாறு: *விரிவாக்கம்*
(→‎top: *விரிவாக்கம்*)
(→‎வாழ்க்கை வரலாறு: *விரிவாக்கம்*)
==வாழ்க்கை வரலாறு==
பர்னம் கனெடிகட்டின் பெதல் நகரில் பிறந்தார். தனது இருபதாம் அகவையிலேயே சிறிய வணிகங்களை மேற்கொண்டு வந்தார். வாரமொருமுறை இதழையும் நடத்தி வந்தார். 1834இல் [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரத்திற்கு]] குடிபெயர்ந்தார். மனமகிழ் கலைகளில் ஈடுபாடு கொண்டு முதலில் பல்வகை நிகழ்ச்சிகள் கொண்ட ''பர்னமின் அறிவியல் மற்றும் இசைக்கான பெருமேடை''யை நடத்தினார். இசுகட்டர் நடத்திவந்த அருங்காட்சியகத்தை விலைக்கு வாங்கி தனது பெயரில் நடத்தினார். இந்த அருங்காட்சியகத்தை மேடையாகக் கொண்டு பலவித ஏமாற்று வித்தைகள், ஆர்வத்தைக் களரும் பிஜி மெர்மெய்டு போன்ற காட்சிகளை அறிமுகப்படுத்தினார்.<ref name="Philip B. Kunhardt, et al., p. 73">{{harvnb|Kunhardt|Kunhardt|Kunhardt|1995|p=73}}</ref> In 1850இல் பாடகி ஜென்னி லின்டின் அமெரிக்க சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைத்தார். இதற்காக ஓரிரவிற்கு $1,000 வீதம் 150 இரவுக் காட்சிகளை நடத்தினார். 1850களில் தவறான முதலீடுகளால் பொருளியல்நிலை சரியத் தொடங்கியது. மோசடி வழக்குகளையும் பொதுமக்கள் ஏளனத்தையும் எதிர்கொண்டார். கடன்களிலிருந்து மீள அடக்கமான பேச்சுரைகளில் ஈடுபட்டார். அவரது அருங்காட்சியகத்தில் அமெரிக்காவில் முதன்முறையாக ஓர் மீன் காட்சியகம் சேர்க்கப்பட்டது. மெழுகுச்சிலை பகுதியை விரிவாக்கினார். நியூயார்க்கில் இருந்தபோது சர்வமயவாதத்தைத் தழுவினார். நியூயார்க் நகரின் நான்காவது சர்வமய சமூகத்தில் உறுப்பினரானார்.
==அரசியல் வாழ்க்கை==
பர்னம் [[கனெடிகட்]] சட்டமன்றத்திற்கு [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசுக் கட்சி]] வேட்பாளராக ஃபெயர்பீல்டிலிருந்து இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிமைத்தன ஒழிப்பு மற்றும் ஆபிரிக்க அமெரிக்கர்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கான ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்பதற்காகக் கூடிய கனெடிகட் சட்டமன்றத்தில் பர்னம் பேசியபோது, ", 'கடவுள் உருவாக்கியதும் கிறித்து இறந்ததுமான' மாந்த உயிரை அற்பமாக எண்ணக்கூடாது. அது எந்த சீனர், துருக்கியர், அரபு, அல்லது ஆட்டென்டாட் உடலில் குடியிருந்தாலும் அது இன்னமும் அழிவில்லா ஆவியாகும்".<ref name="Barnum 1888">{{Cite web|first=Phineas |last=Barnum |title=The life of P.T. Barnum |url=https://archive.org/details/lifeofptbarnum00barn |work=Ebook and Texts Archive – American Libraries |publisher=Buffalo, N.Y.: The Courier Company. p. 237 |year=1888}}</ref>என்றார். 1875இல் கனெடிகட்டின் பிரிட்ஜ்போர்ட்டின் நகரத் தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்; நகரத்தின் குடியீர் வழங்கல், சாலைகளுக்கு எரிவளி விளக்குகள் போன்ற கட்டமைப்புகளை மேம்படுத்தியதோடன்றி மது, [[பால்வினைத் தொழில்]] சட்டங்களையும் செயல்படுத்தினார். 1878இல் நிறுவப்பட்ட பிரிட்ஜ்போர்ட் மருத்துவமனை உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினார். அவே அதன் முதல் தலைவராகவும் பொறுப்பாற்றினார்.<ref name="kunhardt"/>
==இறப்பு==
பர்னம் 1891இல் தமது வீட்டில் [[பக்கவாதம்|பக்கவாத]] தாக்கத்தால் இறந்தார். பிரிட்ஜ்போர்ட்டில் அவரே வடிவமைத்திருந்த மவுன்டன் குரோவ் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.<ref name="Rogak, Lisa 2004">{{cite book |last=Rogak |first=Lisa |year=2004 |title=Stones and Bones of New England: A guide to unusual, historic, and otherwise notable cemeteries |publisher=Globe Pequat |ISBN=0-7627-3000-5}}</ref>
 
==மேற்சான்றுகள்==
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2525914" இருந்து மீள்விக்கப்பட்டது