பி. டி. பர்னம்
பைனியசு டெய்லர் பர்னம் (Phineas Taylor Barnum, சூலை 5, 1810 – ஏப்ரல் 7, 1891) அமெரிக்க காட்சிச்சாலை உரிமையாளரும் அரசியல்வாதியும் வணிகரும் ஆவார். இவர் கொண்டாடப்படும் ஏமாற்றுக் காட்சிகளை ஊக்குவித்ததற்காகவும் பர்னம் & பெய்லி வட்டரங்கை (1871–2017) நிறுவியதற்காகவும் நினைவு கொள்ளப்படுகிறார்.[1] எழுத்தாளர், பதிப்பாளர், வள்ளல், அரசியல்வாதி என்ற பன்முகத் திறன் கொண்டிருந்தாலும் அவருடைய கூற்றுப்படி, "நான் தொழில்முறையாக ஒரு காட்சியாளர்...அனைத்துப் பிற முலாம்பூச்சும் என்னை வேறாக்காது"[2]. தனது தனிக் கொள்கை "தன் பேழைகளில் பணத்தை நிரப்புவதுதான்" எனவும் கூறியுள்ளார்.[2] "ஒவ்வொரு நிமிடமும் ஒரு ஏமாளி பிறக்கிறான்" என்ற புகழ்பெற்ற சொற்றொடர் பர்னமினுடையதாக குறிப்பிடப்படுகின்றது;[3] ஆனால் இதனை அவர்தான் கூறியது என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை.
பி. டி. பர்னம் | |
---|---|
கனெடிகட் மாநிலத்திலுள்ள பிரிட்ஜ்போர்ட் நகரத் தந்தை | |
பதவியில் 1875–1876 | |
Member of the கனெடிகட் House of Representatives from the ஃபெயர்பீல்டு district | |
பதவியில் 1866–1869 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பைனியசு டெய்லர் பர்னம் சூலை 5, 1810 பெதல், கனெடிகட், ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | ஏப்ரல் 7, 1891 பிரிட்ஜ்போர்ட், கனெடிகட், ஐக்கிய அமெரிக்கா | (அகவை 80)
இளைப்பாறுமிடம் | மவுன்டன் கிரேவ் கல்லறைப் பூங்கா, பிரிட்ஜ்போர்ட் |
அரசியல் கட்சி | மக்களாட்சி (1824–1854) குடியரசு (1854–1891) |
துணைவர்(கள்) | சாரிடி ஆலெட் (தி. 1829; இற. 1873) நான்சி ஃபிஷ் (தி. 1874) |
வேலை | வணிகர் (கேளிக்கை) |
அறியபட்டது | பர்னம் & பெய்லி சர்கசு நிறுவனர் 1879இல் கருத்தடை எதிர்ப்புச் சட்டத்தை கனெடிகட் சட்டமன்றத்தில் கொணர்ந்தவர் |
கையெழுத்து | |
நியூயார்க் நகரத்தில் இரண்டு அமெரிக்க அருங்காட்சியகங்களை நிறுவினார்; பிராட்வேயில் ஒன்றும் ஆன் சாலையில் ஒன்றுமாக இருந்தன. 18ஆம் நூற்றாண்டில் நகர மன்றத்தில் வைக்கப்பட்டிருந்த இயற்கை வரலாறு பொருட்களை இந்த அருங்காட்சியகங்களில் வைத்திருந்தார். இங்கு பிஜி மெர்மெய்டு போன்ற சட்டத்திற்குட்பட்ட ஏமாற்றுக் காட்சிகளை நடத்தினார். இங்குதான் மிகக் குள்ளமான ஜெனரல் டாம் தம்பை காட்சிகளில் அறிமுகப்படுத்தினார். ஓபரா பாட்டுக்களைப் பாடி சுவீடிய நைட்டிங்கேல் எனப் பெயரெடுத்த ஜென்னி லின்டும் அமெரிக்காவில் இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவரே. பர்னமின் இரண்டாவது அருங்காட்சியகம் தீக்கிரையானபோது பர்னம் வட்டரங்கை நிறுவினார். இதில்தான் ஜம்போ எனப் பெயரிட்ட யானையைக் காட்சிப்படுத்தினார்.
வாழ்க்கை வரலாறு
தொகுபர்னம் கனெடிகட்டின் பெதல் நகரில் பிறந்தார். தனது இருபதாம் அகவையிலேயே சிறிய வணிகங்களை மேற்கொண்டு வந்தார். வாரமொருமுறை இதழையும் நடத்தி வந்தார். 1834இல் நியூயார்க் நகரத்திற்கு குடிபெயர்ந்தார். மனமகிழ் கலைகளில் ஈடுபாடு கொண்டு முதலில் பல்வகை நிகழ்ச்சிகள் கொண்ட பர்னமின் அறிவியல் மற்றும் இசைக்கான பெருமேடையை நடத்தினார். இசுகட்டர் நடத்திவந்த அருங்காட்சியகத்தை விலைக்கு வாங்கி தனது பெயரில் நடத்தினார். இந்த அருங்காட்சியகத்தை மேடையாகக் கொண்டு பலவித ஏமாற்று வித்தைகள், ஆர்வத்தைக் களரும் பிஜி மெர்மெய்டு போன்ற காட்சிகளை அறிமுகப்படுத்தினார்.[4] In 1850இல் பாடகி ஜென்னி லின்டின் அமெரிக்க சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைத்தார். இதற்காக ஓரிரவிற்கு $1,000 வீதம் 150 இரவுக் காட்சிகளை நடத்தினார். 1850களில் தவறான முதலீடுகளால் பொருளியல்நிலை சரியத் தொடங்கியது. மோசடி வழக்குகளையும் பொதுமக்கள் ஏளனத்தையும் எதிர்கொண்டார். கடன்களிலிருந்து மீள அடக்கமான பேச்சுரைகளில் ஈடுபட்டார். அவரது அருங்காட்சியகத்தில் அமெரிக்காவில் முதன்முறையாக ஓர் மீன் காட்சியகம் சேர்க்கப்பட்டது. மெழுகுச்சிலை பகுதியை விரிவாக்கினார். நியூயார்க்கில் இருந்தபோது சர்வமயவாதத்தைத் தழுவினார். நியூயார்க் நகரின் நான்காவது சர்வமய சமூகத்தில் உறுப்பினரானார்.
அரசியல் வாழ்க்கை
தொகுபர்னம் கனெடிகட் சட்டமன்றத்திற்கு குடியரசுக் கட்சி வேட்பாளராக ஃபெயர்பீல்டிலிருந்து இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிமைத்தன ஒழிப்பு மற்றும் ஆபிரிக்க அமெரிக்கர்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கான ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்பதற்காகக் கூடிய கனெடிகட் சட்டமன்றத்தில் பர்னம் பேசியபோது, ", 'கடவுள் உருவாக்கியதும் கிறிஸ்து இறந்ததுமான' மாந்த உயிரை அற்பமாக எண்ணக்கூடாது. அது எந்த சீனர், துருக்கியர், அரபு, அல்லது ஆட்டென்டாட் உடலில் குடியிருந்தாலும் அது இன்னமும் அழிவில்லா ஆவியாகும்".[5] என்றார். 1875இல் கனெடிகட்டின் பிரிட்ஜ்போர்ட்டின் நகரத் தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்; நகரத்தின் குடியீர் வழங்கல், சாலைகளுக்கு எரிவளி விளக்குகள் போன்ற கட்டமைப்புகளை மேம்படுத்தியதோடன்றி மது, பால்வினைத் தொழில் சட்டங்களையும் செயல்படுத்தினார். 1878இல் நிறுவப்பட்ட பிரிட்ஜ்போர்ட் மருத்துவமனை உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினார். அவரே அதன் முதல் தலைவராகவும் பொறுப்பாற்றினார்.[6]
இறப்பு
தொகுபர்னம் 1891இல் தமது வீட்டில் பக்கவாத தாக்கத்தால் இறந்தார். பிரிட்ஜ்போர்ட்டில் அவரே வடிவமைத்திருந்த மவுன்டன் குரோவ் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.[7]
மேற்சான்றுகள்
தொகு- ↑ North American Theatre Online: Phineas T. Barnum
- ↑ 2.0 2.1 Kunhardt, Kunhardt & Kunhardt 1995, ப. vi
- ↑ Shapiro, Fred R. The Yale Book of Quotations. New Haven: Yale UP, 2006. p. 44
- ↑ Kunhardt, Kunhardt & Kunhardt 1995, ப. 73
- ↑ Barnum, Phineas (1888). "The life of P.T. Barnum". Ebook and Texts Archive – American Libraries. Buffalo, N.Y.: The Courier Company. p. 237.
- ↑ Kunhardt, Kunhardt & Kunhardt 1995
- ↑ Rogak, Lisa (2004). Stones and Bones of New England: A guide to unusual, historic, and otherwise notable cemeteries. Globe Pequat. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7627-3000-5.
வெளி இணைப்புகள்
தொகு- பைனியசு டெய்லர் பர்னம் ஆவணங்கள், 1818-1993 பரணிடப்பட்டது 2015-09-09 at the வந்தவழி இயந்திரம்
- பி.டி. பர்னமின் மரபுவழி பரணிடப்பட்டது 2018-05-24 at the வந்தவழி இயந்திரம் @ பர்னம் குடும்ப மரபுவழி இணையதளம்
- பி. டி. பர்னம் at Find a Grave
- தி பர்னம் அருங்காட்சியகம்
- பர்னமின் வட்டரங்கு இணைப்புகள்
- பர்னம் அமெரிக்க அருங்காட்சியகம்