செமிட்டிய மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''செமிட்டிய மக்கள்''' (Semitic people) என்னும் தொடர் செமிட்டிய மொழிகளில் ஒன்றைப் பேசிய அல்லது பேசுகின்ற இன, பண்பாட்டுக்கு குழுவைச் சேர்ந்த மக்களைக் குறிக்கும். 1770 ஆம் ஆண்டில் கொட்டின்சென் வரலாற்றுப் பள்ளி உறுப்பினர்களால் முதலில் பயன்படுத்தப்பட்ட இச்சொல், ஆதியாகமத்தில் உள்ள நோவாவின் மூன்று மகன்களில் ஒருவனான "செம்" என்பவனின் பெயரைத் தழுவி உருவானது. இச்சொல், இப்போது மொழியியலாளர்களின் வட்டத்துக்கு வெளியே பெரிதும் பயன்படுவதில்லை. ஆனாலும், தொல்லியலில் இச்சொல், "பண்டைய செமிட்டிய மொழி பேசும் மக்கள்" என்பதன் ஒருவகைச் சுருக்கமாகப் பயன்படுகின்றது.
 
== இனத்துவமும் இனமும் ==
கார்லெட்டன் எசு. கூனின் இனம் சார்ந்த வகைப்பாட்டில், செமிட்டிய மக்கள் காக்கேசிய இனத்தின் உறுப்பினர்களாகக் கருதப்படுகின்றனர். இவர்கள் இந்தப் பகுதியில் உள்ள இந்திய-ஐரோப்பிய, வடமேற்குக் காக்கேசிய, கார்த்தெவெலிய மொழிகளைப் பேசும் மக்களிடம் இருந்து தோற்றத்தில் வேறுபட்டவர்கள் அல்ல. மொழி சார்ந்த ஆய்வுகள் பண்பாட்டு ஆய்வுகளுடன் நெருக்கமாகப் பின்னப்பட்டிருப்பதால், இச்சொல் மதம், செமிட்டிய மொழி பேசும் இனத்துவம் ஆகியவற்றுடன், நெருங்கிய புவியியல், மொழிப் பரம்பலால் தொடர்புகொண்டுள்ள வேறுபட்ட பண்பாடுகளின் வரலாற்றையும் விளக்கும் ஒன்றாக ஆகியுள்ளது.
 
சில மரபியல் ஆய்வுகள் (செமிட்டிய மொழிகளைப் பேசும் மக்களின் டி.என்.ஏயின் பகுப்பாய்வு மூலம்) இவர்களிடையே ஒரு பொதுக் குல மரபு இருப்பதைக் கண்டறிந்துள்ளன.
குறிப்பிடத்தக்க பொது ஊன்குருத்து முடிவுகள் எதுவும் கண்டறியப்படாவிட்டாலும், மத்திய கிழக்கைச் சேர்ந்த செமிட்டிய மொழி பேசும் மக்களான அரேபியர், யூதர், மண்டாயீன்கள், சமரித்தான்களசிரியர்/ சிரியாக்குகள் என்பவர்களிடையே Y-நிறமூர்த்த இணைப்புக்கள் காணப்பட்டுள்ளன. யூதர்களினதும், பெதூன்களும் உள்ளிட்ட பாலத்தீன அரேபியர்களதும் ஒரு டி.என்.ஏ ஆய்வு இவர்கள் அயல் அரேபியர்களைவிட ஒருவருக்கு ஒருவர் நெருக்கமானவர்கள் என்பதைக் காட்டுகின்றது.
 
[[பகுப்பு:இனக் குழுக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/செமிட்டிய_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது