தங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
== தங்கத்தின் தன்மை ==
தங்கத்தை மிக மெல்லிய தகடாக அடிக்கலாம்; கம்பியாக நீட்டலாம்;<ref>{{cite book |doi=10.5772/62288 |isbn=978-953-51-2252-4 |chapter=Combined Transmission Electron Microscopy – In situ Observation of the Formation Process and Measurement of Physical Properties for Single Atomic-Sized Metallic Wires |author=Masuda, Hideki |title=Modern Electron Microscopy in Physical and Life Sciences |editor=Janecek, Milos |editor2=Kral, Robert |publisher=InTech |year=2016}}</ref> வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்தும்; காற்றில் இதன் நிறம் மங்குவதில்லை. இதில் துருப் பிடிக்காது. எனவே, எப்போதும் பளபளப்பாகவே இருக்கும். ஒருபங்கு [[நைத்திரிக் அமிலம்|நைத்திரிக் அமிலமும்]] மூன்று பங்கு [[ஐதரோகுளோரிக் அமிலம்|ஐதரோகுளோரிக் அமிலமும்]] சேர்ந்த '''இராஜ திரவம்''' என்ற கலவையில் மட்டுமே தங்கம் கரையும்.<ref>{{Cite book|url=https://books.google.com/?id=E0gYDQAAQBAJ&pg=PA113&dq=gold+valued+because+of+resistance+to+corrosion+historically#v=onepage&q=gold%20valued%20because%20of%20resistance%20to%20corrosion%20historically&f=false|title=The Crystal Guide: Identification, Purpose and Values|last=Polk|first=Patti|date=2016-12-29|publisher="F+W Media, Inc."|isbn=9781440247187|language=en}}</ref> தங்கம் சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களை வெகுவாகத் தெறிக்கவிடும் தன்மையைக் கொண்டுள்ளது.<ref>{{cite web|url = http://www.webexhibits.org/causesofcolor/9.html|title=Gold: causes of color|accessdate=6 June 2009}}</ref> அத்துடன் இது [[செங்கீழ்க்கதிர்|செங்கீழ்க்கதிர்களை]]த் தெறிக்கவிடும் ஆற்றலையும் கொண்டுள்ளது. இத்தன்மையின் காரணமாக வெப்பத் தடுப்பு உடைகள், சூரியக் கண்ணாடிகள், விண்வெளி உடைகளில் இது பயன்படுத்தப்படுகின்றது.<ref>{{Cite book |title=Suiting up for space: the evolution of the space suit |last=Mallan |first=Lloyd |date=1971 |publisher=John Day Co. |isbn=978-0-381-98150-1 |page=216}}</ref>
== தங்கத்தின் வேதியியல் ==
 
உயர் உலோகங்களில் தங்கம் ஒர் உன்னதமான உலோகமாக இருந்தாலும், அது பல வேறுபட்ட சேர்மங்களை உருவாக்குகிறது. தங்கத்தின் சேர்மங்களில் தங்கமானது -1 முதல் +5 வரையிலான ஆக்சிசனேற்ற நிலைகளில் காணப்படுகிறது. ஆனால் Au(I) மற்றும் Au(III) சேர்மங்கள் தங்கத்தின் வேதியியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. Au(I) ஆரசு அயனி என்று அழைக்கப்படுகிறது. இதுவே தயோ ஈதர்கள், தயோலேட்டுகள், மூவிணைய பாசுபீன்கள் போன்ற மென்மையான ஈந்தணைவிகள் உடன் பொதுவாக காணப்படும் ஆக்சிசனேற்ற நிலையாகும். Au(I) சேர்மங்கள் குறிப்பாக நேர்கோட்டு அமைப்பில் உள்ள சேர்மங்களாகும். Au(CN)2− இதற்கு சரியான உதாரணமாகும். சுரங்கங்களில் காணப்படும் கரையும் நிலையில் உள்ள தங்கத்தின் சேர்மம் இதுவாகும். AuCl போன்ற தங்க ஆலைடுகள் கோணல் மாணலான பலபடி சங்கிலிகளாக உருவாகின்றன. இவையும் தங்கத்துடன் நேர்கோட்டு ஒருங்கிணைப்பை கொண்டுள்ளன. தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட பெரும்பாலான மருந்துகள் Au(I) அயனியின் வழிப்பொருள்களாகும்.
Au(III) என்ற குறியீடு குறிக்கும் ஆரிக் என்பது பொதுவான ஒரு ஆக்சிசனேற்ற நிலையாகும். தங்கம்(III) குளோரைடைக் கொண்டு இது விவரிக்கப்படுகிறது. (Au2Cl6). Au(III) அணைவுச் சேர்மங்களில் மற்ற d8 சேர்மங்கள் போல தங்க அணு மையமாக இருக்கிறது. குறிப்பாக இவை சகப்பிணைப்புத் தன்மையும் அயனித் தன்மையும் கொண்ட சதுரதள கட்டமைப்பில் காணப்படுகின்றன.
எந்த வெப்பநிலையிலும் தங்கம் ஆக்சிசனுடன் வினைபுரியாது. மற்றும் 100 ° செல்சியசு வெப்பநிலை வரை ஓசோன் தாக்குதலை இது எதிர்க்கும்.
சில தனி ஆலசன்கள் தங்கத்துடன் வினைபுரிகின்ரன. இளம் சிவப்பு வெப்பநிலையில் தங்கம் புளோரினால் கடுமையாகத் தாக்கப்பட்டு தங்கம்(III) புளோரைடு உருவாகிறது. .
180 ° செல்சியசு வெப்பநிலையில் தூளாக்கப்பட்ட தங்கம் குளோரினுடன் வினைபுரிந்து AuCl3 சேர்மத்தை உருவாக்குகிறது.
140 ° செல்சியசு வெப்பநிலையில் தங்கம் புரோமினுடன் வினைபுரிந்து தங்கம் (III) சேர்மத்தை உருவாக்குகிறது.
ஆனால் அயோடினுடன் மிக மெதுவாக வினைபுரிந்து ஒற்றை அயோடைடை உருவாக்குகிறது.
தங்கம் நேரடியாக கந்தகத்துடன் வினைபுரிவதில்லை. ஆனால் குளோரோ ஆரிக் அமிலத்தின் வழியாக அல்லது நீர்த்த தங்கம்(III) குளோரைடு வழியாக ஐதரசன் சல்பைடு வாயுவை செலுத்தினால் தங்கம்(III) சல்பைடு உருவாகிறது.
அறை வெப்பநிலையில் தங்கம் உடனடியாக கரைந்து இரசக் கலவையையும், உயர் வெப்பநிலைகளில் பல உலோகங்களுடன் சேர்ந்து கலப்பு உலோகங்களையும் தருகிறது. இக்கலப்புலோகங்கள் கடினத்தன்மையை திருத்தவும், உலோகவியல் பண்புகளை மாற்றவும் உருவாக்கப்படுகின்றன. மேலும் இவை உருகுநிலையை கட்டுபடுத்தவும், கவர்ச்சிகரமான நிறங்களை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
தங்கம் பொட்டாசியம், ருபிடியம், சிசியம், அல்லது டெட்ராமெத்திலமோனியம் போன்றவற்றுடன் வினைபுரிந்து அவற்றுடன் தொடர்புடைய ஆரைடு உப்புகளைக் கொடுக்கிறது. இவ்வுப்புகளில் Au− அயனி இடம்பெற்றுள்ளது. சீசியம் ஆரைடு அநேகமாய் ஒரு பிரபலமான ஆரைடு உப்பு ஆகும்.
பல அமிலங்களால் தங்கம் பாதிக்கப்படுவதில்லை. கந்தக அமிலம், நைட்ரிக் அமிலம், ஐதரோபுரோமிக் அமிலம், ஐதரோகுளோரிக் அமிலம், ஐதரோபுளோரிக் அமிலம், ஐதரோ அயோடிக் அமிலம் போன்ற அமிலங்களுடன் தங்கம் வினைபுரிவதில்லை.செலீனிக் அமிலத்துடனும் தங்கம் வினைபுரிவதில்லை. நைட்ரிக் அமிலமும், ஐதரோகுளோரிக் அமிலமும் 1:3 என்ற விகிதத்தில் கலந்து உருவாகும் இராச திராவகத்தில் இது கரைகிறது. நைட்ரிக் அமிலம் மிகக் குறைவான அளவில் தங்கத்தை ஆக்சிசனேற்றம் செய்து +3 அயனியாக மாற்றுகிறது. வினையின் வேதிச்சமநிலை காரணமாக தூய அமிலத்தில் இதைக் கண்டறிய முடியாது. எனினும் சமநிலையிலிருந்து அயனிகள் ஐதரோ குளோரிக் அமிலத்தால் நீக்கப்படுகின்றன. AuCl4− அயனிகள் அல்லது குளோரோ ஆரிக் அமிலம் உருவாகி வினையை மேலும் தொடர்ந்து நடக்கத் துணைபுரிகிறது.
பலவகையான காரங்களாலும் தங்கம் பாதிக்கப்படுவதில்லை. நீரிய, திண்ம அல்லது உருகிய சோடியம் அல்லது பொட்டாசியம் ஐதராக்சைடுகளுடன் இது வினைபுரிவதில்லை. இருப்பினும், கார நிபந்தனைகளுடன் ஆக்சிசனின் முன்னிலையில் சோடியம் அல்லது பொட்டாசியம் சயனைடுடன் வினைபுரிந்து கரையக்கூடிய அணைவுச் சேர்மங்களைக் கொடுக்கிறது.
நன்கு வரையறுக்கப்பட்ட எண்ணற்ற தொகுதிச் சேர்மங்கள் அறியப்படுகின்றன. இது போன்ற இனங்களில் தங்கம் பின்ன ஆக்சிசனேற்ற நிலைகளில் காணப்படுகிறது. எண்முக இனமான {Au(P(C6H5)3)}62+இதற்கு சரியான எடுத்துக் காட்டாகும். தங்க சல்பைடு போன்ற தங்க சால்கோசனைட்டுகள் சம அளவில் Au(I) மற்றும் Au(III) அயனிகளைக் கொண்டுள்ளன.
===நச்சுத்தன்மை===
தூய தங்கம் நச்சுத்தன்மை அற்றதாகும். ஆதலாலேயே தங்கம் [[தங்க இலை]] போன்ற உணவுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.<ref>{{cite web |last=Dierks |first=S. |title=Gold MSDS |url=http://www.espi-metals.com/msds's/gold.htm |publisher=Electronic Space Products International |date=May 2005}}</ref> and is sometimes used as a food decoration in the form of [[gold leaf]].<ref>{{Cite book|url=https://books.google.com/?id=4zK6CgAAQBAJ&pg=PA5&dq=gold+leaf+food+decoration#v=onepage&q=gold%20leaf%20food%20decoration&f=false|title=Gold Nanoparticles for Physics, Chemistry and Biology|last=Louis|first=Catherine|last2=Pluchery|first2=Olivier|date=2012-01-01|publisher=World Scientific|isbn=9781848168077|language=en}}</ref> அதுமட்டுமன்றி [[கோல்ட்ச்லாஜர்]]., [[கோல்ட் ஸ்ரைக்]], [[கோல்ட் வாஜர்]] போன்ற மதுசாரங்களிலும் உலோக நிலைத் தங்கம் பயன்படுகின்றது.அத்தோடு, உலோகத் தங்கம் உணவு சேர்பொருளாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனினும் தங்கத்தின் அயன் நச்சுத்தன்மை கொண்டதாகும். [[தங்க உப்புகள்]] மற்றும் [[தங்கம்(I,III) குளோரைட்|தங்கக் குளோரைட்]] ஆகியவையும் ஈரலுக்கும், சிறுநீரகத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/தங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது