சந்திர குலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 122.252.246.181 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2513249 இல்லாது செய்யப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''சந்திர குலம்''' அல்லது '''சந்திர வம்சம்''' என்பது கலியுக அரசப் பரம்பரையில் ஒன்றாகும். வைணவர்களின் கடவுளான [[திருமால்]] சந்திர குலமான [[யது குலம்|யது குலத்தில்]] [[கிருஷ்ணன்|கிருஷ்ணராக]] அவதாரம் எடுத்ததாக [[புராணங்கள்]] கூறுகின்றன. <ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=}}</ref>.
 
== சந்திர குலத் தோற்றம் ==
சந்திர குலம் தோன்றியதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. அது [[புரூரவ சரிதை]] என்னும் நூலில் உள்ளது. பிரகஸ்பதியின் மனைவி தாரை. இவள் சந்திரனைக் கூடினாள். புதன் என்னும் மகனைப் பெற்றாள். வைவச்சுத மனு என்பவனின் மகன் இளன். இளன் வேட்டையாடிக்கொண்டுவேட்டையாடிச் சென்றபோது ஒரு காட்டை அடைந்தான். அந்தக் காட்டுக்கு யார் வந்தாலும் பெண்ணாக மாறும்படி ஒரு சாபம் இருந்தது. அதன்படி இளன் ‘இளை’ ஆனான். புதன் இளையை மணந்தான். இவர்களுக்குப் பிறந்த குழந்தை புரூரவன்.
 
தேவ மகளிர் நீராடினர். அவர்களில் அழகில் சிறந்த ஊர்வசியைக் ‘கேசி’ என்பவன் கவர்ந்துசென்றான்கவர்ந்துச் சென்றான். மகளிர் அலறினர். புரூரவன் ஊர்வசியை மீட்டுத் தேவேந்திரனிடம் ஒப்படைத்தான். தேவேந்திரன் மகிழ்ந்து ஊர்வசியைப் புரூரவனுக்கே தந்துவிட்டான்.
 
ஊர்வசி தேவலோகம் மீள வழி கேட்டாள். ஆடை இல்லாத நிலையில் புரூரவனைப் பார்க்க நேர்ந்தால் திரும்பலாம் என இந்திரன் வரமளித்தான். ஒருநாள் புரூரவன் ஊர்வசியோடு உறவு கொண்டிருக்கும் வேளையில் புரூரவனின் ஆடையைக் கவர்ந்துவருமாறு இந்திரன் கந்தர்வர்களை அனுப்பினான். அவர்களும் அதனைச் செய்தனர். புரூரவன் தன் ஆடையை மீட்டுவரப் புறப்பட்டான். அப்போது ஒரு மின்னல். ஊர்வசி புரூரவனை அம்மணத்தில் பார்த்துவிட்டாள். உடனே தேவலோகம் சென்றுவிட்டாள்.
வரிசை 10:
தேவலோகத்தில் ஊர்வசி நடனமாடிக்கொண்டிருந்தாள். அவள் மனம் புரூரவனை நாடியது. இதனை உணர்ந்த பரதாச்சாரியன் ஊர்வசியைப் பூங்கொடி ஆகுமாறு சபித்தான். அவள் பூங்கொடி ஆனாள். புரூரவன் ஊர்வசி நினைவில் பூங்கொடிகளை-யெல்லாம் தழுவினான். பூங்கொடியாக இருந்த ஊர்வசி தன் உருவம் பெற்றாள். இவர்களுக்குப் பிறந்த மகன் ‘ஆயு’. இவன் வழியில்தான் சந்திரகுலம் தோன்றிற்று.
 
== சந்திர குல அரசர்கள் ==
தமிழகத்தில் வரலாற்று கால மெய்கீர்த்திகள் சோழரை சூர்ய வம்சம் என்றாலும் இந்து மத புராணங்களோ [[கேரளர்|சேரர்]], [[சோழர்]], [[பாண்டியர்]] போன்ற மூவேந்தர்களையும் சந்திர வம்சம் என்றே கூருகின்றன.<ref>பதினெண் புராணங்கள், கிருஷ்ணமாச்சாரியார், நர்மதா பதிப்பகம், சென்னை - 17.</ref> தமிழக மூவேந்தர்கள் பின்வருமாறு அட்டவணைப் படுத்தப் பட்டுள்ளனர்.
 
வரிசை 41:
# [[பரீட்சித்து]]
# [[சனமேசயன்|ஜனமேஜயன்]]
# [[மூவேந்தர்]] சோழனைச் '''சூரிய குலம்''' என்றும், பாண்டியனைச் '''சந்திர குலம்''' என்றும், சேரனை '''அக்கினிக் குலம்''' என்றும் கொள்கின்றனர். <ref>ஒட்டக்கூத்தர் சோழனைப் புகழ்வதாகவும், புகழேந்திப் புலவர் பாண்டியனைப் புகழ்வதாகவும் உள்ள பாடல்களில் ஒட்டக்கூத்தர் பாடல்<br />கோரத்துக்கு ஒப்போ கனவட்டம் அம்மானை, கூறுவதும் காவிரிக்கு வையையோ அம்மானை<br />ஆருக்கு வேம்பு நிகர் ஆகுமோ அம்மானை, ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானை - நூல் தனிப்பாடல் திரட்டு பக்கம் 56</ref>
 
== காண்க ==
[[சூரிய குலம்]]
 
== மேற்கோள்கள் ==
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
 
[[பகுப்பு:தமிழ் இலக்கியம்]]
"https://ta.wikipedia.org/wiki/சந்திர_குலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது