இந்தியாவில் கிறிஸ்தவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 15:
“உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" என்ற உயிர்த்த [[இயேசு]]வின் அறிவுரைக்கு ஏற்ப, அவரது பன்னிரு திருத்தூதர்களில் ஒருவரான தோமா இந்தியாவுக்கு வந்து கிறிஸ்தவ சமயத்தை நிறுவினார் என பழங்கால வரலாற்று ஆவணங்கள் சான்று பகர்கின்றன. கிறிஸ்தவ ஆய்வாளர்களின் கருத்து மற்றும் மரபின்படி, தோமா கடல் வழியாக பயணம் செய்து கேரளாவின் கொடுங்காலூர் கடற்கரைக்கு (முசிறி துறைமுகம்) கி.பி.52ஆம் ஆண்டு வந்து இறங்கினார். மேற்கு கடலோர ஊர்களில் இயேசுவைப் பற்றி அறிவித்து, 7 இடங்களில் திருச்சபையை நிறுவினார். பின்னர் கிழக்கு பகுதிக்கு வந்து, சோழ மண்டல கடற்கரையில் நற்செய்தியை அறிவித்தார். சென்னை மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் பலரை கிறிஸ்தவர்களாக மனந்திருப்பிய அவரை, கி.பி.72ல் எதிரிகள் ஈட்டியால் குத்திக் கொலை செய்தனர்.<ref>Thomas! (From Tales and Traditions to a Time for Truth), Roy Abraham Varghese and Michael Abraham Varghese</ref>
 
தோமா தமிழகத்தில் கிறிஸ்தவ சமயத்தை நிறுவிய அதே காலத்தில், [[பர்த்தலமேயு (திருத்தூதர்)|திருத்தூதர் பர்த்தலமேயு]] மும்பையின் கல்யாண் உள்ளிட்ட இடங்களில் இயேசுவின் நற்செய்தியை அறிவித்ததாக வரலாற்று பதிவுகள் உள்ளன. முதல் நூற்றாண்டில் இந்தியாவில் உருவான கிறிஸ்தவ சமூகங்கள், மற்றவர்களை மதமாற்றம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக, இந்தியாவில் கிறிஸ்தவம் சில குடும்பங்களுக்குள் மட்டுமே முடங்கிக் கிடந்தது. கி.பி.2ஆம் நூற்றாண்டில் மும்பைக்கு வந்த பார்த்தனேயுஸ் என்ற கிரேக்க அறிஞர், திருத்தூதர் பர்த்தலமேயுவால் உருவாக்கப்பட்ட கிறிஸ்தவ சமூகங்களை சந்தித்ததாக குறிப்புகள் உள்ளன. [[மத்தேயு (திருத்தூதர்)|திருத்தூதர் மத்தேயு]] எழுதிய [[மத்தேயு நற்செய்தி|நற்செய்தி]] நூல் அவர்களிடம் இருந்ததாகவும் பார்த்தனேயுஸ் எழுதி வைத்துள்ளார்.<ref name=mci>Mother Church in Mother India, MsgrFrancis Correa</ref>
 
== இடைக்காலம் ==
"https://ta.wikipedia.org/wiki/இந்தியாவில்_கிறிஸ்தவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது