ஆண் (மனிதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆகும்-ஆவான்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
[[File:Michelangelo, Creation of Adam 03.jpg|thumb|மைக்கேல் ஏஞ்சலோவின் படைப்பில் ஆதாமின் உருவம்]]
 
'''ஆண்''' ({{audio|Ta-ஆண்.ogg|ஒலிப்பு}}) ''(Man)'' என்பவன் மனித இனத்தில் வளர்ந்த ஓர் ஆண்பால் உயிரினமாகக் கருதப்படுபவன் ஆவான். பொதுவாக ஆண் என்றாலே நன்கு வளர்ந்த நிலையிலுள்ள ஆண் பாலினமாக அடையாளம் காணப்படுகிறது. சிறுவயது ஆண்பால் மனிதர்களைப் பொதுவாகச் சிறுவன், பையன் போன்ற சொற்களால் குறிப்பிடுவது வழக்கம். வளர்ந்த ஆண்களைக் குறிப்பிடுவதற்கு தமிழ்ப் பேச்சு வழக்கில் ஆம்பளை, ஆம்பிளை போன்ற சொற்களைப் பயன்படுத்துவர்.ஆண் என்னும் சொல், வளர்ந்த ஆண் மனிதர்களை மட்டுமன்றி, பிற ஆண்பால் உயிரினங்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. மனித இனத்தில் [[வயது]] வேறுபாடில்லாமல் எல்லா ஆண்களையும் குறிக்கவும் ஆண் என்ற சொல் பயன்படுகின்றது. ஆணுக்கு உரிய இயல்புகளைப் பொதுவாக ஆண்மை என்னும் சொல்லால் குறிப்பர்.
 
இவ்வுலகிலுள்ள மற்ற ஆண் பாலூட்டிகளைப் போலவே, ஓர் ஆண் மனிதனின் மரபணு பொதுவாக தாயின் ஒரு எக்சு (X) குரோமசோமையும் அவனது தந்தையிடமிருந்து ஒரு ஒய் (Y) குரோமோசோமையும் மரபுரிமையாகப் பெறுகிறது. ஆண் சிசு ஒரு பெண் சிசுவை விட அதிகமான அளவு ஆண்ட்ரோசன்களையும் குறைவான அளவு ஈசுட்ரோசன்களையும் உற்பத்தி செய்கிறது. இந்த பாலின சிடீராய்டுகளின் அளவுகளில் காணப்படும் இந்த வேறுபாடுதான் ஆண், பெண் என வேறுபடுத்துகின்ற உடலியல் வேறுபாடுகளுக்கு மிகவும் பொறுப்பானதாக உள்ளது. பருவமடைதல் நிகழ்வின்போது ஆண் உடலில் சுரக்கும் இயக்குநீர்கள் ஆண்ட்ரோசன் உற்பத்தியை தூண்டுகின்றன. இதனால் இரண்டாம் நிலை பாலியல் பண்புகளின் வளர்ச்சிகள் தோன்றுகின்றன. தொடர்ந்து பாலினங்களுக்கு இடையில் அதிக வேறுபாடுகள் வெளிப்படுகின்றன. எனினும் விதிவிலக்காக சில மூன்றாம் பாலின ஆண்கள், இருபாலின ஆண்கள் போன்ற ஆண்களும் உருவாகி விடுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஆண்_(மனிதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது