கர்த்தெகனா, கொலம்பியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 58:
}}
 
'''கர்த்தெகனா''' நகரம் (''Cartagena''), குடியேற்றக் காலத்தில் '''கர்த்தெகனா தெ இந்தியசு''' (''Cartagena de Indias'', {{lang-es|Cartagena de Indias}} {{IPA-es|kaɾtaˈxena ðe ˈindjas||Es-Cartagena de Indias.oga}}), 1533இல் [[கொலம்பியா]]வின் கரிபியன் வலயத்தில் வடக்குக் கடலோரத்தில் நிறுவப்பட்ட பெரியத் துறைமுகமாகும். இது மக்டெலெனா ஆற்றுக்கும் சினு ஆற்றுக்கும் இடையே அமைந்துள்ளது. இது 1540களில் எசுப்பானியா மற்றும் அதன் வெளிநாட்டு இராச்சியத்தின் முதன்மைத் துறைமுகமாக விளங்கியது. குடியேற்றக் காலத்தில் இங்கிருந்து தான் [[பெரு]]விய வெள்ளி எசுப்பானியாவிற்கு ஏற்றுமதியும் ஆபிரிக்க அடிமைகளின் இறக்குமதியும் செய்யப்பட்டது. இத்துறைமுகம் கரீபிய கொள்ளைக்காரர்களிடமிருந்து பாதுகாப்புடன் விளங்கியது.<ref>Lance R. Grahn, "Cartagena" in ''Encyclopedia of Latin American History and Culture'', vol. 1, p 581. New York: Charles Scribner's Sons 1996.</ref> இது பொலீவர் மாநிலத்தின் (''டிபார்ட்மென்ட்'') தலைநகரமாகவும் விளங்குகிறது. 2016இல் இந்நகரத்தின் மக்கள்தொகை 971,592.<ref name="Largest cities or towns">{{Cite web|url= http://www.dane.gov.co/files/investigaciones/poblacion/proyepobla06_20/Municipal_area_1985-2020.xls|title= Estimaciones de Población 1985–2005 y Proyecciones de Población 2005–2020 Total Municipal por Área (estimate)|publisher= National Administrative Department of Statistics (Colombia) - DANE |accessdate= 10 November 2016}}</ref> கொலம்பியாவிலுள்ள நகரங்களில் ஐந்தாவது பெரிய நகரமாக கர்த்தெகனா உள்ளது. கரிபிய வலயத்தில் பார்ரென்குலாவை அடுத்து இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகின்றது. கர்த்தெகனாவின் நகரியப் பகுதியும் நாட்டின் ஐந்தாவது பெரிய நகரியப் பகுதியாகும். சுற்றுலா தவிர்த்து [[கப்பல் போக்குவரத்து|கப்பல் துறையும்]] பெட்ரோலிய வேதித் தொழில்களும் முதன்மையான பொருளியல் செயற்பாடுகளாக உள்ளன.
 
இந்த நகரம் சூன் 1, 1533இல் நிறுவப்பட்டது. இது எசுப்பானியாவிலுள்ள கர்த்தெகனாவின் நினைவாக பெயரிடப்பட்டது (குறிப்பு:எசுப்பானிய கர்த்தெகனா [[தூனிசியா]]வின் [[கார்த்திஜ்|கார்த்திஜை]] ஒட்டிப் பெயரிடப்பட்டது). கர்த்தெகனா விரிகுடாவை ஒட்டியுள்ள பகுதிகளில் பொ.யு முந்தைய 4000 ஆண்டுகளிலேயே உள்ளக மக்கள் வாழ்ந்துள்ளனர். எசுப்பானியக் குடியேற்றக் காலத்தில் கர்த்தெகனா [[எசுப்பானியப் பேரரசு|எசுப்பானியப் பேரரசின்]] நிர்வாகத்திற்கும் விரிவாக்கத்திற்கும் முதன்மையான மையமாக விளங்கியது. இது அரசியல், சமய, பொருளியல் செயற்பாடுகளுக்கான மையமாக இருந்தது.<ref>Grahn, "Cartagena" p. 582.</ref> 1984இல் கர்த்தெகனாவின் மதில்சூழ் நகரமும் கோட்டையும் [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களமாக]] அறிவிக்கப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/கர்த்தெகனா,_கொலம்பியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது