கர்த்தெகனா, கொலம்பியா
கர்த்தெகனா நகரம் (Cartagena), குடியேற்றக் காலத்தில் கர்த்தெகனா தெ இந்தியசு (Cartagena de Indias, எசுப்பானியம்: Cartagena de Indias [kaɾtaˈxena ðe ˈindjas] ( கேட்க)), 1533இல் கொலம்பியாவின் கரிபியன் வலயத்தில் வடக்குக் கடலோரத்தில் நிறுவப்பட்ட பெரியத் துறைமுகமாகும். இது மக்டெலெனா ஆற்றுக்கும் சினு ஆற்றுக்கும் இடையே அமைந்துள்ளது. இது 1540களில் எசுப்பானியா மற்றும் அதன் வெளிநாட்டு இராச்சியத்தின் முதன்மைத் துறைமுகமாக விளங்கியது. குடியேற்றக் காலத்தில் இங்கிருந்து தான் பெருவிய வெள்ளி எசுப்பானியாவிற்கு ஏற்றுமதியும் ஆபிரிக்க அடிமைகளின் இறக்குமதியும் செய்யப்பட்டது. இத்துறைமுகம் கரீபிய கொள்ளைக்காரர்களிடமிருந்து பாதுகாப்புடன் விளங்கியது.[2] இது பொலீவர் மாநிலத்தின் (டிபார்ட்மென்ட்) தலைநகரமாகவும் விளங்குகிறது. 2016இல் இந்நகரத்தின் மக்கள்தொகை 971,592.[1] கொலம்பியாவிலுள்ள நகரங்களில் ஐந்தாவது பெரிய நகரமாக கர்த்தெகனா உள்ளது. கரிபிய வலயத்தில் பார்ரென்குலாவை அடுத்து இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகின்றது. கர்த்தெகனாவின் நகரியப் பகுதியும் நாட்டின் ஐந்தாவது பெரிய நகரியப் பகுதியாகும். சுற்றுலா தவிர்த்து கப்பல் துறையும் பெட்ரோலிய வேதித் தொழில்களும் முதன்மையான பொருளியல் செயற்பாடுகளாக உள்ளன.
கர்த்தெகனா | |
---|---|
நகரம் | |
கர்த்தெகனா தெ இந்தியசு | |
அடைபெயர்(கள்): "மாய நகரம்", "பல்லினத்தவர் நகரம்", "கர்த்தெகனா நகரம்", "பேராண்மையுடை", "பவளப்பாறை", " அருமையான" | |
குறிக்கோளுரை: "கர்த்தெகனாவால்" போர் கர்த்தெகனா | |
ஆள்கூறுகள்: 10°24′N 75°30′W / 10.400°N 75.500°W | |
நாடு | கொலம்பியா |
மாநிலம் (டிபார்ட்மென்ட்) | பொலீவர் |
வலயம் | கரீபியன் |
நிறுவல் | சூன் 1, 1533 |
தோற்றுவித்தவர் | பெத்ரோ தெ எரெதியா |
பெயர்ச்சூட்டு | கர்த்தெகனா, எசுப்பானியா |
அரசு | |
• நகரத்தந்தை (இடைக்காலம்) | செர்கியோ லண்டனோ சூரெக் |
பரப்பளவு | |
• நகரம் | 572 km2 (221 sq mi) |
ஏற்றம் | 2 m (7 ft) |
மக்கள்தொகை (2016) | |
• நகரம் | 9,71,592 [1] |
• தரவரிசை | ஐந்தாமிடத்தில் |
• பெருநகர் | 10,13,389[1] |
இனம் | கர்த்தெகனீரோ(க்கள்) (எசுப்பானியம்) |
நேர வலயம் | ஒசநே-5 (கொலம்பிய நேரம்) |
அஞ்சல் குறியீடு | 130000 |
இடக் குறியீடு | 57 + 5 |
மமேசு (2008) | 0.798 – High |
புரக்கும் புனிதர்கள் | செயின்ட் காத்தரீன், செபஸ்தியார் |
சராசரி வெப்பநிலை | 30 °C (86 °F) |
இணையதளம் | www |
இந்த நகரம் சூன் 1, 1533இல் நிறுவப்பட்டது. இது எசுப்பானியாவிலுள்ள கர்த்தெகனாவின் நினைவாக பெயரிடப்பட்டது (குறிப்பு:எசுப்பானிய கர்த்தெகனா தூனிசியாவின் கார்த்திஜை ஒட்டிப் பெயரிடப்பட்டது). கர்த்தெகனா விரிகுடாவை ஒட்டியுள்ள பகுதிகளில் பொ.யு முந்தைய 4000 ஆண்டுகளிலேயே உள்ளக மக்கள் வாழ்ந்துள்ளனர். எசுப்பானியக் குடியேற்றக் காலத்தில் கர்த்தெகனா எசுப்பானியப் பேரரசின் நிர்வாகத்திற்கும் விரிவாக்கத்திற்கும் முதன்மையான மையமாக விளங்கியது. இது அரசியல், சமய, பொருளியல் செயற்பாடுகளுக்கான மையமாக இருந்தது.[3] 1984இல் கர்த்தெகனாவின் மதில்சூழ் நகரமும் கோட்டையும் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Estimaciones de Población 1985–2005 y Proyecciones de Población 2005–2020 Total Municipal por Área (estimate)". National Administrative Department of Statistics (Colombia) - DANE. பார்க்கப்பட்ட நாள் 10 November 2016.
- ↑ Lance R. Grahn, "Cartagena" in Encyclopedia of Latin American History and Culture, vol. 1, p 581. New York: Charles Scribner's Sons 1996.
- ↑ Grahn, "Cartagena" p. 582.