தூய லூர்து அன்னை திருத்தலம், பெரம்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 26:
[[பிரான்சு]] நாட்டின் [[லூர்து]] நகரில் [[பெர்னதெத் சுபீரு]] என்ற 14 வயது சிறுமிக்கு, 1858 பிப்ரவரி 11ந்தேதி முதல் [[மரியாள் (இயேசுவின் தாய்)|அன்னை மரியா]] 18 முறை காட்சி அளித்தார். ஆகவே, அவர் [[லூர்து அன்னை]] என்று அழைக்கப்படுகிறார்.<ref>L Laurentin, Lourdes, Marienlexikon, Eos Verlag, Regenburg, 1988, 161</ref><ref>Harris, Ruth. ''Lourdes'', Allen Lane, London, 1999, p 4</ref> மசபியேல் என்ற குகையில் தோன்றிய மரியன்னை, தரையைத் தோண்டி தண்ணீர் அருந்துமாறு பெர்னதெத்துக்கு கட்டளையிட்டார். அதை ஏற்று பெர்னதெத் தோண்டிய இடத்தில் ஊற்று ஒன்று உருவானது. அந்த ஊற்றின் நீரை அருந்திய பலரும் தங்கள் நோய்களில் இருந்து சுகம் பெற்றதாக கூறினார்கள். இதையடுத்து, அந்த இடம் அன்னை மரியாவின் புகழ்பெற்ற திருத்தலமாக மாறியது.<ref>[http://www.catholic.org/clife/mary/app.php?id=1 Catholic Online: Apparitions of Our Lady of Lourdes First Apparition]</ref> அதன் விளைவாக, உலகின் பல்வேறு பகுதிகளிலும் லூர்து அன்னையின் பெயரில் பல ஆலயங்கள் கட்டப்பட்டன.
 
==ஆலயபங்கின் வரலாறு==
1800களில், [[சென்னை]] [[வேப்பேரி (சென்னை)|வேப்பேரி]] புனித அந்திரேயா ஆலயத்தின்ஆலயப் பங்கின் ஒரு பகுதியாக [[பெரம்பூர்]] கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தனர். அந்த ஆலயத்தின் பங்குத்தந்தை ஹென்னசே, 1879ஆம் ஆண்டு [[பெரம்பூர்|பெரம்பூரில்]] லூர்தன்னை பெயரில் சிற்றாலயம் ஒன்றைக் கட்டியெழுப்ப முயற்சி எடுத்தார். 1880ல் சிற்றாலயம் புனிதம் செய்யப்பட்டதை அடுத்து, வேப்பேரி பங்கின் கிளைப்பங்காக பெரம்பூர் மாறியது.<ref name="sh">[http://www.lourdesshrineperambur.org/history.html லூர்தன்னை திருத்தல வரலாறு]</ref> பெரம்பூரில் கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததால், லூர்தன்னை ஆலயம் 1903ஆம் ஆண்டு அருட்தந்தை பி.ஜே. கரோல் தலைமையில் தனிப்பங்காக உருவெடுத்தது. 1935ல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருள்தந்தை முரே, இந்த ஆலயத்தை திருத்தலமாக உருவாக்கும் முயற்சியைத் தொடங்கினார்.<ref name="sg">லூர்தன்னை திருத்தலப் பங்கு கையேடு</ref>
 
1947ஆம் ஆண்டு, பெரம்பூர் லூர்தன்னை திருத்தலத்தின் பங்குத்தந்தை ஏ. மரியோட்டா ச.ச. முதல் தேசிய திருப்பயணத்தை தொடங்கி வைத்தார். [[லூர்து]] நகரில் நடைபெறுவது போன்று [[நற்கருணை]] ஆசீருடன் நோயாளிகளுக்கு நலமளிக்கும் வழிபாட்டையும் அறிமுகம் செய்தார்.<ref name="sg"/> 1951ல் தற்போதுள்ள ஆலயத்தின் தரைத்தளத்தைக் கட்ட அடித்தளம் இடப்பட்டது. 1953 பெப்ரவரி 22ந்தேதி, [[சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்|சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின்]] அப்போதைய பேராயர் [[லூயிஸ் மத்தியாஸ்]] கீழ்த்தள ஆலயத்தை புனிதம் செய்து திறந்து வைத்தார்.<ref name="sh"/> 1958ல் பங்குத்தந்தை ஜோசப் சந்தனம் ச.ச. முயற்சியால் மேல்தள ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. 1953 பெப்ரவரி 11ந்தேதி, பேராயர் [[லூயிஸ் மத்தியாஸ்]] மேல்தள ஆலயத்தை புனிதப்படுத்தினார்.<ref name="sh"/>
 
1968ஆம் ஆண்டு ஆலயத்தின் இடது பக்கம் லூர்தன்னையின் அழகிய கெபி கட்டியெழுப்பப்பட்டது. இதில் பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் அன்னை மரியா காட்சி அளித்த இடத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கல் பதிக்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு ஆலயத்தின் இடது பக்கத்தில் நற்கருணை சிற்றாலயம் கட்டப்பட்டு, சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் அப்போதைய பேராயர் [[ஏ.எம். சின்னப்பா ச.ச.]] அவர்களால் புனிதம் செய்து திறந்து வைக்கப்பட்டது.
 
==ஆலய அமைப்பு==
பெரம்பூர் தூய லூர்தன்னை திருத்தலம், பிரான்சின் லூர்து நகரில் அமைந்துள்ள மரியன்னை ஆலயத்தை மாதிரியாகக் கொண்டு கட்டியெழுப்பப் பெற்றுள்ளது. கீழ்த்தளம், மேல்தளம் என இரண்டடுக்காக அமைந்துள்ள இந்த ஆலயம் கலைநயம் மிகுந்த தூண்களைக் கொண்டுள்ளது. கீழ்த்தள ஆலயத்தின் நடுப்பீடத்தில் பாடுபட்ட சுரூபமும், இடது பக்கத்தில் [[லூர்து அன்னை]], வலது பக்கத்தில் [[புனித யோசேப்பு]] பீடங்களும் அமைந்துள்ளன. பக்கவாட்டு கதவுகளின் மேற்புறத்தில் அன்னை [[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியா]]வின் பல்வேறு கண்ணாடி ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. சிலுவைப்பாதையின் 14 நிலைகளும் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன.
 
மேல்தள ஆலயத்தின் நடுப்பீடத்தில் லூர்தன்னை சுரூபமும், இடது பக்கத்தில் [[ஜான் போஸ்கோ]], வலது பக்கத்தில் [[தோமினிக் சாவியோ]] பீடங்களும் இருக்கின்றன. இங்குள்ள சிலுவைப்பாதையின் 14 நிலைகளும் புடைப்புச் சிற்பங்களாகவே உள்ளன. மேல்தள ஆலயத்திற்கு செல்ல வளாக முகப்பில் இருந்து சறுக்குத்தளமும், கீழ்த்தள ஆலய முகப்பில் இருந்து படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. திருத்தலத்தின் மத்திய கோபுரத்தின் நடுப்பகுதியில், [[பெர்னதெத் சுபீரு]]க்கு அன்னை மரியா காட்சி அளிக்கும் கண்ணாடி ஓவியம் இடம் பெற்றுள்ளது.
 
== சிறப்பு நிகழ்வுகள் ==