ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 57:
==தோற்றம்==
இக் கோயிலின் தோற்றம் பற்றி அதிகம் தெரியவரவில்லை. [[ஸ்ரீசைலம்]] மகாபாரதத்திலும், புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. [[கந்த புராணம்|கந்த புராணத்தில்]] சிறீசைல காண்டம் என்னும் அத்தியாயம் ஒன்று உண்டு. இது இக் கோயில் மிகப் பழங்காலத்திலேயே தோன்றியதற்குச் சான்றாக அமைகின்றது. அத்துடன் கிபி 7 - 9 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழ் [[நாயனார்|நாயன்மார்]]கள் இக் கோயிலைப் பாடியுள்ளனர். [[ஆதிசங்கரர்]] இங்கு வந்ததாகவும் இங்கேயே தனது [[சிவானந்த லகரி]] என்னும் சமஸ்கிருத நூலை எழுதியதாகவும் சொல்லப்படுகிறது.
 
== கோயில் அமைப்பு ==
[[File:Srisailam.jpg|200px|thumb|right|பொன்வேய்ந்த [[விமானம் (கோயில்)|விமானம்]]]]
இக்கோயிலானது 20 அடி உயரமும், 2121 அடி நீளமுடைய கோட்டைச் சுவர் போன்ற திருச்சுற்று மதில்களைக் கொண்டுள்ளது. இந்த மதிற்சுவரின் வெளிப்புறத்தில் நான்குபுறங்களிலும் ஏராளமான புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள், போர்க்காட்சிகள், பார்வதி திருமணம், அர்சுணன் தவம், சந்திரவதி கதை, மார்கண்டேயன் கதை, தட்சனின் யாகம், சிவதாண்டவம், கஜாசுர சம்காரம், சிபிசக்கரவர்த்தி கதை, தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைதல், கண்ணப்பர் கதை, மகேசுவரர் விசுவரூபம், மகிடாசுரமர்தினி போன்ற பல சிற்பங்களைக் கோண்டதாக உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீசைலம்_மல்லிகார்ஜுனர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது