தென்காசிப் பாண்டியர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jjshjdjj jjshjdjj
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Ramanan KLஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 57:
{{refend}}
 
==மதுரையை பாண்டியர் இழந்தது==
[[விஜயநகரப் பேரரசு]]ம் [[நாயக்கர்]]களும் 14ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு [[மதுரை]]யை ஆண்டிருந்தாலும், அவ்வப்போது சில [[பாண்டியர்]]கள் இவர்களை எதிர்த்தும் வந்தனர். சில நேரங்களில் [[மதுரை]]யையும் ஆண்டுள்ளனர். அவர்களுள் முக்கியமானவர்கள் [[சடையவர்மன் விக்கிரம பாண்டியன்|சடையவர்மன் விக்கிரம பாண்டியனும்]] (கி.பி. 1401 - 1422) அவனின் மகனான [[சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்|அரிகேசரி பராக்கிரம பாண்டியனும்]] ஆவர்.<ref name="சநா ஐயர்">{{cite book | title=History of the Nayaks of Madura | author=Sathayanatha Iyer | year=1924 | pages=58}}</ref> இவர்கள் மதுரையை சுற்றி 32 கோட்டைகளைக் கட்டினர். பின் [[விசுவநாத நாயக்கர்]] மதுரை மண்டலேசுவரனாக ஆன பின்னர் மீண்டும் [[பாண்டியர்]] தனியாட்சி கோருவர் எனப்பயந்து மதுரையை 72 பாளையங்களாகப் பிரித்தான். அதில் பாண்டியர்களுக்கு மிக நெருக்கமானவர்களின் 16 பாளையங்களும் அடங்கும்.<ref name="தமிழ்வாணன்">{{cite book | title=கட்டபொம்மன் கொள்ளைக்காரன் | publisher=மணிமேகலை பிரசுரம் | author=தமிழ்வாணன் | year=1983 | location=சென்னை | pages=18 - 19}}</ref> அவர்களுக்குப் பதவிகள் பல தந்து [[பாண்டியர்]]களிடம் அண்டவிடாமல் அவர்களைத் தனியர்களாக்கினான். அதனால் [[பாண்டியர்]] மதுரையை நிரந்தரமாக இழக்க வேண்டியதாயிற்று.<ref name="சநா ஐயர்" />
==செண்பகப்பொழில் தென்காசி ஆன கதை==
செண்பகப்பொழில் என்றால் [[சண்பகம்|செண்பக மரம்]] நிறைந்த [[மழைக்காடுகள்]] என்று பொருள்படும். பதினைந்தாம் நூற்றாண்டில் செண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராக்கிரம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றினார். [[பாண்டியர்]]களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம்<ref name="முன்னோர் வழிபட்ட லிங்கம்">{{cite news | url=http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%AE%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF!&artid=612973&SectionID=147&MainSectionID=147&SectionName=Vellimani&SEO= | title=மன நிம்மதி தரும் சந்நிதி! | work=சூன் 15, 2012 | date=சூன் 15, 2012 | accessdate=சூலை 30, 2012 | author=மனத்துக்கினியான்}}</ref> செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தைக் காணலாம் என்றும் அதற்குக் கோயில் கட்டுமாறும் கூறினார். அதன் காரணம் ''தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் அதற்கு நிகரானதோர் நகரத்தைக் கட்டு'' என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்தக் கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.<ref name="தென்காசி தல புராணம்"/>
"https://ta.wikipedia.org/wiki/தென்காசிப்_பாண்டியர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது