"அசை (யாப்பிலக்கணம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,104 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (ஒரு உறுப்பு-->ஓர் உறுப்பு)
 
செய்யுள்களிலே அமையும் சீர்களின் தன்மை பற்றியும், அச் சீர்கள் ஒன்றுடன் இன்னொன்று சேரும்போது உருவாகும் [[தளை (யாப்பிலக்கணம்)|தளைகள்]] பற்றியும் அறிந்துகொள்வதற்குச் சீர்களிலே அசைகளை இனங்காணல் அவசியம். இவ்வாறு சீர்களை இனங்கண்டு பிரித்தறிதல் ''அசை பிரித்தல்'' எனப்படுகின்றது.
 
ஒரு சீரை அசை பிரிக்கும்போது அச்சீரின் முதல் எழுத்து ஒரு மாத்திரை அளவுக்குக் கூடுதலான எழுத்து ஆயின் அது தனியாகவே ஒரு அசையாக அமையக்கூடும். எடுத்துக்காட்டாக 2 மாத்திரைகள் அளவுள்ள நெடில் அல்லது ஒன்றரை மாத்திரை கால அளவு கொண்ட ஐகார ஔகார எழுத்துக்கள் முதலெழுத்தாக வரின் அது தனியாக ஒரு அசையாகலாம். அடுத்துவரும் எழுத்து ஒரு ஒற்றெழுத்தாக அமையாவிடின் மேற்சொன்ன எழுத்துக்களை அசையாகக் கொள்ளமுடியும். ஆனால் முதல் எழுத்தைத் தொடர்ந்து ஒற்றெழுத்து வருமானால் அந்த எழுத்தையும் முதல் எழுத்தோடு சேர்த்து அசையாகக் கொள்ளவேண்டும்.
 
கீழேயுள்ளது நான்கு சீர்களைக் கொண்ட ஒரு செய்யுள் அடியாகும்.
 
: ''கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி''
 
இங்கே முதற்சீரான ''கேளிர்'' என்பதில் முதலெழுத்தான ''கே'' இரண்டு மாத்திரை அளவுள்ள நெடிலாகும். இதைத் தொடர்ந்து ஒற்றெழுத்து வராமையால் ''கே'' தனியாகவே அசையாக அமையும். இதுபோலவே இரண்டாஞ் சீரிலும் ''போ'' தனியாகவே அசையாகும்.
 
மூன்றாவது சீரான ''கேள்கொளல்'' என்பதிலும் முதலெழுத்தாக இரண்டு மாத்திரை அளவுள்ள நெடிலான ''கே''யே வருவதால், அது தனியாகவே ஒரு அசையாக அமையக் கூடும். ஆனாலும் இரண்டாம் எழுத்து ''ள்'' ஒரு ஒற்றெழுத்து ஆதலால், அதையும் சேர்த்து ''கேள்'' என்பதை ஒரு அசையாகக் கொள்ள வேண்டும். நாலாஞ் சீரிலும் இதே அடிப்படையில் ''வே'' உம் ''ண்'' உம் சேர்ந்து ''வேண்'' என அசையாகும்.
 
[[பகுப்பு:யாப்பிலக்கணம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/26394" இருந்து மீள்விக்கப்பட்டது