தர்மதுரை (1991 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 5:
== கதைச்சுருக்கம் ==
 
பாலுவும் ஐஸ்வர்யாவும் வீட்டைவிட்டு வெளியேறிய காதலர்கள். அவர்களைத் தேடிவரும் ஐஸ்வர்யாவின் தந்தை ராஜதுரையும் ([[சரண்ராஜ்]]) அவனது சகோதரன் ராமதுரையும் ([[நிழல்கள் ரவி]]) காதலர்கள் மறைந்துள்ள இடத்தைக் கண்டுபிடித்து பாலுவை அடிக்கும்பொழுது அங்குவரும் தர்மதுரையைப் ([[ரசினிகாந்த்|ரஜினிகாந்த்]]) பார்த்ததும் ராஜதுரை, ராமதுரை இருவரும் அங்கிருந்து ஓடிவிடுகின்றனர். இதைக்கண்டு வியக்கும் காதலர்கள் தர்மதுரையின் வீட்டிற்குச் சென்றதும் அவர் மனைவி பார்வதியிடம் ([[கௌதமி|கெளதமி]]) அதற்கானக் காரணத்தைக் கேட்கின்றனர். பார்வதி கடந்தகாலக் கதையைக் கூறுகிறாள்.
 
தர்மதுரையின் உடன்பிறந்த தம்பிகள் ராஜதுரை மற்றும் ராமதுரை. தன் தம்பிகளின் மீது அதிக பாசம் கொண்ட தர்மதுரை அவர்களை அதிக செலவு செய்து படிக்கவைக்கிறான். ஆனால் அவர்களோ அப்பாவியான அண்ணனை ஏமாற்றி பணத்தை வாங்கி வீண்செலவு செய்கின்றனர். தொழில் செய்வதாக பொய் சொல்லி தர்மதுரையிடம் 6 லட்ச ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு சென்னை செல்லும் ராஜதுரை மற்றும் ராமதுரை அங்கு சட்டத்திற்குப் புறம்பான தொழில்கள் செய்து விரைவில் பணக்காரர்கள் ஆகின்றனர். தர்மதுரைக்கும் பார்வதிக்கும் திருமணம் நடக்கிறது. தன் தம்பிகளைப் பார்ப்பதற்கு சென்னை வரும் தர்மதுரை அவர்கள் வீட்டில் தங்குகிறான். ராமதுரை செய்யும் கொலையை தான் செய்ததாக பழியேற்று சிறைக்குச் செல்கிறான் தர்மதுரை.
"https://ta.wikipedia.org/wiki/தர்மதுரை_(1991_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது