வாருங்கள்!

வாருங்கள், உமாநாத், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- கலை (பேச்சு) 17:42, 31 திசம்பர் 2018 (UTC)

வேண்டுகோள்தொகு

வணக்கம் உமாநாத். திரைப்படக் கட்டுரைகளை மிகவும் அருமையாக உருவாக்கி வருகிறீர்கள். பாராட்டுகள். ஆங்கில விக்கிக் கட்டுரைகளை மொழிபெயர்க்கும்போது தகவல் பெட்டியில் ({nfobox) சமக்குறிக்கு (=) இடப்பக்க விவரங்களை தமிழில் மொழிபெயர்க்காதீர்கள்; வலப்பக்க விவரங்களை மட்டும் தமிழில் மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பங்களிப்புகள் சிறப்புடன் வளர வாழ்த்துகளுடன்.--Booradleyp1 (பேச்சு) 15:25, 22 சனவரி 2019 (UTC)

@Booradleyp1: வணக்கம். தங்கள் மேலான ஆலோசனைக்கு மிக்க நன்றி. மொழிபெயர்ப்புக் கருவியில் reflist வடிவில் மேற்கோள்களை இணைக்க இயலவில்லை. எனவே # வடிவில் மேற்கோள்களைத் தனியாக ஒரு தலைப்பிட்டு தொகுத்தேன். மொழிபெயர்ப்புக்கருவியைப் பயன்படுத்தும்போது reflist வடிவில் மேற்கோள்களை இணைப்பதற்கான வழிமுறையைச் சொல்லுங்கள். தகவல் பெட்டியை வடிவமைப்பது சிரமமாக இருந்தது. தங்களின் ஆலோசனைக்குப் பின் அதை அடுத்தக் கட்டுரையில் சரிசெய்துள்ளேன். --உமாநாத் (பேச்சு) 15:09, 23 சனவரி 2019 (UTC)

@உமாநாத்: நான் மொழிபெயர்ப்புக் கருவியை பயன்படுத்துவதில்லை. எனினும் பிற பயனர்களால் மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தி உருவாக்கியக் கட்டுரைகளை உரைதிருத்திய அனுபவத்தில் நான் தெரிந்து கொண்டது:

 • மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தினால் மேற்கோள்கள் துணைத் தலைப்பின் கீழ் தானாகவே அனைத்து மேற்கோள்களும் தோன்றும்;
 • கட்டுரைக்குள் அந்தந்த இடங்களில் அவற்றின் எண்கள் மேற்சுட்டாகத் தோன்றும்;
 • தொகு தோற்றத்தில் \\மேற்கோள்கள்\\ என்ற துணைத் தலைப்பில் reflist காணப்படாது.

எதற்கும் மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்திய பயனர்களிடம் நாம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

@கி.மூர்த்தி:, @Arularasan. G:, ‎‎@TNSE Mahalingam VNR: - மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தி கட்டுரை உருவாக்கும்போது மேற்கோள்கள் குறித்த இவரது சிக்கலுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். (இவர் உருவாக்கிய கட்டுரைகள்: வானமே எல்லை (திரைப்படம்), தோனி (திரைப்படம்), ஒரு கிடாயின் கருணை மனு, சின்ன வீடு, வாத்தியார்). நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:36, 23 சனவரி 2019 (UTC)
நானும் மொழிபெயர்ப்புக் கருவியை பயன்படுத்துவதில்லை. மன்னிக்கவும்--கி.மூர்த்தி (பேச்சு) 15:42, 23 சனவரி 2019 (UTC)
@Booradleyp1: மொழிபெயர்ப்புக் கருவியில் reflist வடிவில் மேற்கோள்களை இணைக்கும் வழிமுறை அறிந்துகொண்டேன். நன்றி.--உமாநாத் (பேச்சு) 17:17, 23 சனவரி 2019 (UTC)

முருகா (திரைப்படம்)தொகு

இந்தக் கட்டுரையில் "மேற்கோள்கள்" எனும் தலைப்பினை நீங்கள் சேர்க்கவில்லை. reflist என்பதனையும் சேர்க்கவில்லை. இவற்றை இப்போது நான் செய்துள்ளேன். அடுத்து எழுதும் கட்டுரைகளில் இதனைக் கவனித்து திருத்துங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:39, 24 சனவரி 2019 (UTC)

@Selvasivagurunathan m: தாங்கள் தெரிவித்த திருத்தத்திற்கு நன்றி. மொழிபெயர்ப்புக் கருவியில் மேற்கோள்களை கட்டுரைகளுக்கு இடையே எண்கள் வடிவில் மேற்ச்சுட்டாக இணைக்கும்போது "தகுதியுரையை இணைக்கவில்லை" என்ற குறிப்பு தோன்றி மேற்ச்சுட்டில் உள்ள எண்களை சொடுக்கினால் அவை இணைப்புக்குள் செல்வதில்லை. தற்போது எண் மேற்சுட்டுகளை <ref> பயன்படுத்தி நிறுவுகிறேன். இதை மொழிபெயர்ப்புக் கருவியில் நேரடியாக நிறுவும் முறையைக் கூற வேண்டுகிறேன். --உமாநாத் (பேச்சு) 03:35, 24 சனவரி 2019 (UTC)

மொழிபெயர்ப்புக் கருவியை எனது சொந்தப் பயன்பாட்டிற்கு இதுவரை நான் பயன்படுத்தியதில்லை. விக்கியின் பயனர்களுக்கு உதவுவதற்காக, நான் பயன்படுத்திப் பார்த்து உங்களுக்கு தெரிவிக்கிறேன். ஓரிரு நாட்கள் நேரம் தாருங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:05, 24 சனவரி 2019 (UTC)

வாத்தியார்தொகு

 1. இந்தக் கட்டுரையில் தவறாக உள்ள பகுப்பினை திருத்த, இங்குள்ள 'உதவிக் குறிப்பு' இணைப்பினை உதவியாகக் கொண்டு சோதித்துப் பாருங்கள்; வாழ்த்துகள்! உதவிக் குறிப்பு 1 --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:53, 24 சனவரி 2019 (UTC)
 2. விக்கியில் உள்ள கட்டுரைகளுக்கு மேற்கோள் அவசியம். உரிய வகையில் மேற்கோள் சுட்டுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:56, 24 சனவரி 2019 (UTC)

வேண்டுகோள்தொகு

வணக்கம். தொடர் பங்களிப்புகளுக்கு நன்றி. எழுதும் ஆர்வம் உள்ளவர்களை ஊக்குவித்து, அவர்களை விக்கிப்பீடியாவில் பங்களிக்க வைப்பதற்காக 'புதுப் பயனர் போட்டி' நடைபெறுகிறது. கட்டுரைகள் தரமாக இருக்க வேண்டும் என்பதனையும் விக்கி சமூகம் உறுதிசெய்கிறது. அதன் காரணமாக, நீங்கள் எழுதும் கட்டுரைகளில் மற்ற பயனர்கள் திருத்தங்களை மேற்கோள்கிறார்கள். எவ்வகையான திருத்தங்களை அவர்கள் மேற்கொள்கிறார்கள் என்பதனை கவனித்து புதிய கட்டுரைகளில் அவற்றை செய்யுங்கள். இதன் மூலமாக மற்ற பயனர்களுக்கு வேலைப்பளு குறையும். சில உதவிக் குறிப்புகளை கீழே காணலாம். ஏதேனும் ஐயமிருப்பின் கேளுங்கள்.

 1. பகுப்புகள் இட வேண்டும். காண்க: விக்கிப்பீடியா:பயிற்சி (பகுப்புகள்)
 2. மணற்தொட்டியிலிருந்து கட்டுரையை பொதுவெளிக்கு நகர்த்தும் முன்பு, கட்டுரையை படித்துப் பார்த்து பிழைகளை திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். எழுத்துப் பிழைகள், சொற்பிழைகள், இலக்கணப் பிழைகள் இவற்றைத் தவிர்ப்பது நமக்கு இன்றியமையாதது என்பதனை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:02, 25 சனவரி 2019 (UTC)
@Selvasivagurunathan m: வணக்கம். தாங்களும் மற்ற பயனர்களும் என் கட்டுரைகளில் மேற்கொள்ளும் திருத்தங்களைக் கவனித்து வருகிறேன். தொடர்ந்து அடுத்தடுத்தக் கட்டுரைகளைப் பிழையின்றி எழுத முயற்சி செய்கிறேன். தங்களின் உதவிக்கு நன்றி--உமாநாத் (பேச்சு) 16:27, 25 சனவரி 2019 (UTC)

பதக்கம்தொகு

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியாவில் ஆர்வமுடன் பங்களித்து வருவதற்கு நன்றி பாராட்டி, இந்தப் பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:52, 25 சனவரி 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  விருப்பம்--அருளரசன் (பேச்சு) 13:37, 25 சனவரி 2019 (UTC)
@Selvasivagurunathan m:நன்றி.தங்களின் பாராட்டு மேலும் சிறப்பாக செயலாற்ற ஊக்கமளிக்கிறது--உமாநாத் (பேச்சு) 16:40, 25 சனவரி 2019 (UTC)
தாங்கள் உருவாக்கும் கட்டுரைகள் பேசும் 'உங்களது வளமான தமிழ்நடைக்கும் விக்கிப்பீடியா குறித்த புரிதலுக்கும்' இப்பதக்கம் அழகு சேர்க்கிறது உமாநாத், பாராட்டுகள். உங்கள் விக்கிப்பீடியா பங்களிப்புகள் தொடர வாழ்த்துக்கள்.--Booradleyp1 (பேச்சு) 04:28, 26 சனவரி 2019 (UTC)
  விருப்பம்ஸ்ரீ (talk) 09:05, 1 பெப்ரவரி 2019 (UTC)
@Booradleyp1: ஊக்கம் தரும் உங்கள் பாராட்டுக்கு நன்றி.--உமாநாத் (பேச்சு) 12:37, 31 சனவரி 2019 (UTC)

சுந்தர புருஷன் (1996 திரைப்படம்)தொகு

சுந்தர புருஷன் (1996 திரைப்படம்) எனும் தலைப்பிற்கு தங்களின் கட்டுரை நகர்த்தப்பட்டுள்ளது. எனவே மீண்டும் அதனை சமர்ப்பிக்கவும் நன்றி.ஸ்ரீ (talk) 09:05, 1 பெப்ரவரி 2019 (UTC)

@ஞா. ஸ்ரீதர்: வணக்கம். கட்டுரையை மீண்டும் சமர்ப்பித்துள்ளேன். நன்றி.--உமாநாத் (பேச்சு) 09:58, 1 பெப்ரவரி 2019 (UTC)
இக்கட்டுரையில் நான் மேற்கோள்களில் செய்துள்ள திருத்தங்களைக் கவனியுங்கள். இம்மாதிரியான தவறுகள் உங்கள் பல கட்டுரைகளில் உள்ளன.--Kanags (பேச்சு) 23:10, 1 பெப்ரவரி 2019 (UTC)
@Kanags: அனைத்துக் கட்டுரைகளையும் மொழிபெயர்ப்புக்கருவி மூலமே எழுதிவருகிறேன். மேற்கோள்களை எண்சுட்டாக நிறுவும்போது '=' குறி தவறுதலாக இருமுறை வந்துள்ளது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. அடுத்து எழுதியுள்ள கட்டுரைகளில் சரிசெய்திருக்கிறேன்.--உமாநாத் (பேச்சு) 18:16, 2 பெப்ரவரி 2019 (UTC)

fountain problemதொகு

வணக்கம். புதுப்பயனர் போட்டியில் சிறப்பாக பங்களித்து வருவதற்கு நன்றி. தற்போது fountain கருவி செயலபடவில்லை. இருந்தபோதிலும் தாங்கள் தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கருவி மீண்டும் செயல்படத் தொடங்கிய பிறகு தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அப்போது உங்களின் கட்டுரைகளை மொத்தமாக சமர்ப்பிக்கலாம். நன்றிஸ்ரீ (talk) 01:33, 17 பெப்ரவரி 2019 (UTC)

தற்காலிக ஏற்பாடுதொகு

வணக்கம். புதுப்பயனர் போட்டியில் நீங்கள் விரிவாக்கிய அல்லது உருவாக்கிய கட்டுரைகளின் பெயர்களை இங்கு இட வேண்டுகிறோம். இது தற்காலிக ஏற்பாடு தான். கருவி செயல்படத் துவங்கிய பிறகு வழக்கம் போல் சமர்ப்பிக்கலாம். நன்றிஸ்ரீ (talk) 06:23, 19 பெப்ரவரி 2019 (UTC)

@ஞா. ஸ்ரீதர்: வணக்கம். கட்டுரைகளை இப்பக்கத்தில் சமர்பித்துள்ளேன். நன்றி.

தங்க மனசுக்காரன்தொகு

@ஞா. ஸ்ரீதர்: வணக்கம். தங்க மனசுக்காரன் என்ற கட்டுரையை நான் துவங்கும்போது இத்தலைப்பில் முன்பே கட்டுரை இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்பே துவங்கினேன். ஆனாலும் நான் இக்கட்டுரையை சமர்ப்பிக்கும் முன் மற்றொரு பயனர் இதே தலைப்பில் அவர் தயாரித்திருந்த கட்டுரையை சமர்பித்துவிட்டார். நான் இதே கட்டுரையை சமர்ப்பிக்க இயலுமா? அல்லது இரண்டு கட்டுரையை ஒப்பிட்டு நான் விரிவாக்கிய பகுதியை மட்டும் போட்டிக்கு எடுத்துக்கொள்ள இயலுமா? பதில்தர வேண்டுகிறேன்--உமாநாத் (பேச்சு) 13:31, 24 பெப்ரவரி 2019 (UTC)
@உமாநாத்: தங்க மனசுக்காரன் கட்டுரையினை தங்களுக்கு முன்பாகவே

Pvbnadan உருவாக்கி சமர்ப்பித்துள்ளார்.எனவே அவருக்கு தான் மதிப்பெண் கொடுக்க இயலும். நன்றிஸ்ரீ (talk) 09:47, 26 பெப்ரவரி 2019 (UTC)

@ஞா. ஸ்ரீதர்: தங்கள் பதிலுரைக்கு நன்றி. சென்ற மாதம் "இது நம்ம பூமி" என்ற கட்டுரையை சமர்ப்பிக்கும்போதும் இதுபோன்று நிகழ்ந்தது. நான் அக்கட்டுரையை சமர்ப்பிக்கும்போது எனக்கு முன்பு ஒரு பயனர் சமர்பித்துவிட்டார். மீண்டும் அவ்வாறு நிகழ்ந்ததால் அதுகுறித்து தெளிவு பெறவே வினவினேன்.--உமாநாத் (பேச்சு) 11:16, 26 பெப்ரவரி 2019 (UTC)

நடந்த தவறுகளுக்கு மன்னிக்கவும் இதற்கு விரைவில் ஏதேனும் தீர்வு கான முயல்கிறோம் நன்றி.ஸ்ரீ (talk) 08:21, 27 பெப்ரவரி 2019 (UTC)

கிழக்கும் மேற்கும்தொகு

தாங்கள் போட்டிக்காக உருவாக்கிய கிழக்கும் மேற்கும் கட்டுரை (fountaini) இல் பிப்ரவரி தேதியைக் காட்டினாலும் இந்திய நேரப்படி மார்ச்சு 1 ஆம் தேதி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே அக்கட்டுரை பிப்ரவரி மாதப் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:08, 1 மார்ச் 2019 (UTC)

@Parvathisri: வணக்கம். எந்த நேரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்ற குழப்பம் இருந்தது. மார்ச்சு மாதத்தில் எழுதப்பட்டக் கட்டுரையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டாலும் மகிழ்ச்சியே! தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.--உமாநாத் (பேச்சு) 11:48, 4 மார்ச் 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி- பிப்ரவரி மாதப் பரிசுதொகு

வணக்கம் உமாநாத் புதுப்பயனர் போட்டிக்காக பிப்ரவரி மாதத்தில் 50 கட்டுரைகளை சிறப்பாக உருவாக்கி இந்த மாதமும் இரண்டாம்பரிசினைப் பெறுகிறீர்கள் என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். வரும் மாதங்களிலும் (மார்ச்சு) தொடர்ந்து மாதாந்திரப் பரிசுகள் வழங்கப்படும். பரிசு பற்றிய விவரங்கள் தங்களுக்கு தனிமடலாகப் பின்னர் தெரிவிக்கப்படும். ஏனைய மாதப் போட்டிகளிலும் சிறப்பாகப் பங்காற்றி பரிசுகளை வெல்வதற்கும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பினை நல்குவதற்கும் வாழ்த்துகளும் நன்றியும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:47, 1 மார்ச் 2019 (UTC)

@Parvathisri: :@ஞா. ஸ்ரீதர்: வணக்கம். "கிழக்கும் மேற்கும்" கட்டுரை நீங்கலாக பிப்ரவரி மாதம் மட்டும் 60 கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளேன். அதில் "சுந்தர புருஷன் (1996 திரைப்படம்)" என்ற கட்டுரை சனவரி மாதம் தொகுக்கப்பட்டது. அந்தக் கட்டுரையின் தலைப்பு நகர்த்தப்பட்டதால் நடுவர் ஞா. ஸ்ரீதர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பிப்ரவரி மாதம் சமர்ப்பித்தேன். பிப்ரவரி மாதம் முதல் பரிசு பெற்ற பயனர் 61 கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார். மேலும் அவருக்கு சனவரி மாதம் முதல் பரிசு பெற்றமைக்கான வாழ்த்துச் செய்தியில் அவர் சனவரி மாதம் 53 கட்டுரைகளை சமர்பித்ததாக உள்ளது. இரு மாதங்களும் சேர்த்து மொத்தம் 114 கட்டுரைகளுக்கு பதிலாக 111 மட்டுமே உள்ளது. fountainஇல் இப்போது அவருடைய சனவரி மாதக்கட்டுரைகளின் எண்ணிக்கை 53 ற்குப் பதில் 50 மட்டுமே உள்ளது. பிப்ரவரி 28 ஆம் நாள் அடுத்தடுத்த நிமிடங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள "நியாயத் தராசு (திரைப்படம்), சந்தனக் காற்று (திரைப்படம்), ஜகன்மோகினி (2009 திரைப்படம்)" ஆகிய 3 கட்டுரைகள் சனவரி மாதம் தொகுக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டவையாக அக்கட்டுரைகளின் வரலாறு பகுதியில் உள்ளது. எனில் சனவரி மாதம் சமர்ப்பித்த 3 கட்டுரைகளை மீண்டும் பிப்ரவரி மாதப் போட்டியிலும் சமர்ப்பிக்கப்பட்டது எவ்வாறு? எனக்கு ஏற்பட்ட ஐயத்திற்கான தெளிவுபெறவே வினவியுள்ளேன். உள்நோக்கம் ஏதுமில்லை. நன்றி.--உமாநாத் (பேச்சு) 12:52, 4 மார்ச் 2019 (UTC)
கட்டுரைகளைச் சரியான தலைப்புக்கு நகர்த்திய அவை நாங்கள் மதிப்பிடும் பொழுது வெற்றுப்பக்கங்களாக் காட்டும்.எனவே மீண்டும் சமர்ப்பிக்கக் கூறுவோம்.அவ்வாறு நீக்கி நான் சேர்த்ததுதான் நியாயத்தராசு உள்ளிட்ட தலைப்புகளாகும்.fountain கருவி கடைசியாகச் சேர்த்த நாளை மட்டுமே காட்டுகிறது. மற்றவர்களின் கட்டுரைகளையும் அவ்வாறு சேர்த்துள்ளேன்.கட்டுரை எண்ணிக்கைகளை இன்று மாலை சரிபார்த்து தவறெனில் சரிசெய்கிறேன். கவனத்துக்குக் கொண்டுவந்தமைக்கு நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 05:26, 5 மார்ச் 2019 (UTC)
@Parvathisri: :@ஞா. ஸ்ரீதர்: கோரிக்கையைக் கவனத்தில் கொண்டதற்கு நன்றி. சனவரி மாதக் கட்டுரைகள் 53 + பிப்ரவரி மாதக் கட்டுரைகள் 58 = 111 கட்டுரைகள் என்பது சனவரி 50 + பிப்ரவரி 61 = 111 கட்டுரைகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் தலைப்பு நகர்த்தப்படும் கட்டுரைகள் ஒரே மாதத்திற்குள் சமர்பிக்கப்பட்டால் எந்த பிரச்னையும் இல்லை. சனவரி மாதம் தொகுக்கப்பட்ட கட்டுரைகள் அதன் தலைப்பை நகர்த்துவதன் மூலம் மட்டும் பிப்ரவரி அல்லது மார்ச்சு மாதக் கட்டுரைகளாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றால் அவை குழப்பத்தை உருவாக்கும். உதாரணமாக
 1. நான் சனவரி மாதம் தொகுத்து சமர்பித்தக் கட்டுரைகள் எண்ணிக்கை 10. அவற்றில் "சுந்தர புருஷன் (1996 திரைப்படம்)" என்ற ஒரு கட்டுரையை தலைப்பை நகர்த்தி பிப்ரவரியில் மீண்டும் சமர்பித்துள்ளேன். இப்போது இது சனவரி அல்லது பிப்ரவரி எந்த மாதக் கட்டுரையாகக் கருதப்படும்?
 2. என்னுடைய சனவரி மாதத்தின் மற்ற 9 கட்டுரைகள் அவற்றின் தலைப்பை மட்டும் நகர்த்தி மீண்டும் மார்ச்சு மாதத்தில் சமர்ப்பிக்க இயலுமா? அவ்வாறு சமர்ப்பித்தால் அவை மார்ச்சு மாதக் கட்டுரைகளாக கணக்கில் கொள்ளப்படுமா?
 3. இதுவரை மாதாந்திரப் பரிசு பெறாத மற்ற பயனர்கள் இந்த இரு மாதங்களில் தொகுத்தக் கட்டுரைகளை அவற்றின் தலைப்பை நகர்த்தி மீண்டும் மார்ச்சு மாதக் கட்டுரைகளாக சமர்ப்பிக்கலாமா?

என்ற பல வினாக்கள் எழுகிறது. நல்ல முடிவைத் தர நடுவர்களை கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.--உமாநாத் (பேச்சு) 12:59, 5 மார்ச் 2019 (UTC)

பதிலுரைதொகு

தாமதமான பதிலுக்கு எனது வருத்தங்கள்.

@உமாநாத்:

 1. நீங்கள் மேலே குறிப்பிட்ட மூன்று திரைப்படங்களுமே நான் சனவரி மாத போட்டிக்கு எடுத்துக்கொண்டது ஆகும். அதனைச் சேர்த்து தான் 53 எனக் குறிப்பிடேன். ஒரு முறை சமர்ப்பித்த கட்டுரைகளை நம்மால் அல்லது மற்றொரு நபர்களாலோ மீண்டும் சம்ர்ப்பிக்க இயலாது. fountain கருவியில் ஏற்பட்ட பிரச்சினைகளை நீங்கள் நன்கு அறிவீர்கள். அந்தப் பிரச்சினையின் காரணமாக இது நிகழ்ந்திருக்க மட்டுமே இவ்வாறு நிகழ வாய்ப்பு உள்ளது.
 1. சுந்தரன் புருஷன் கட்டுரையை நீங்கள் எந்த மாதம் திருத்தி சம்ர்ப்பித்துள்ளீர்களோ அந்த மாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.
 2. ஒரு மாதம் தொகுக்கப்படும் கட்டுரைகளின் பெயரை மாற்றி மீண்டும் சமர்ப்பிக்க இயலும். ஆனால் விக்கிப்பீடியாவில் எழுதுபவர்கள் அவ்வாறாக செய்வதற்கு வாய்ப்புகள் என்பது மிக மிக குறைவாகவே உள்ளது. மேலும் அதனை கூடுமான வரையில் நடுவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்வர். எனவே இது வேண்டுமென்றே செய்தால் தான் இந்தப் பிழை நடைபெறும்.
 3. /இதுவரை மாதாந்திரப் பரிசு பெறாத மற்ற பயனர்கள் இந்த இரு மாதங்களில் தொகுத்தக் கட்டுரைகளை அவற்றின் தலைப்பை நகர்த்தி மீண்டும் மார்ச்சு மாதக் கட்டுரைகளாக சமர்ப்பிக்கலாமா? / தாங்கள் இவ்வாறு செய்ய மாட்டீர்கள் எனும் நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

தங்களின் ஐயங்களுக்கு நன்றிகள். தாங்கள் மீண்டும் தொடர்ந்து எழுதுவீர்கள் எனும் நம்பிக்கையுடன் -- ஸ்ரீ (talk) 10:10, 6 மார்ச் 2019 (UTC)

புதுப்பயனர் போட்டிதொகு

வணக்கம் உமாநாத் தாங்கள் புதுப்பயனர் போட்டியில் சதமடித்து (100) உள்ளீர்கள் வாழ்த்துகள். ஸ்ரீ (talk) 02:31, 12 மார்ச் 2019 (UTC)

@ஞா. ஸ்ரீதர்: தங்களின் வழிகாட்டுதல்களுக்கும் மற்றும் வாழ்த்திற்கும் நன்றி. மேலும் :@Parvathisri: அவர்களுக்கும், தொடக்கத்தில் கட்டுரைகளை சரியாக தொகுக்க ஆலோசனைகள் வழங்கிய :@Kanags: :@Selvasivagurunathan m: :@Booradleyp1: ஆகியோருக்கும் நன்றி!--உமாநாத் (பேச்சு) 12:36, 12 மார்ச் 2019 (UTC)

ஆங்கில தலைப்பு பெயர்தொகு

நண்பருக்கு வணக்கம். சிறப்பான முறையில் பங்களித்து வருகிறீர்கள். தாங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் முதல் வரியில் தமிழ் தலைப்பிற்கு அடுத்தபடியாக அதனுடைய ஆங்கிலத் தலைப்புகளை அடைப்பிற்குள் எழுதவும் உ.ம் விராட் கோலி (Virat kohli) நன்றி ஸ்ரீ (talk) 02:02, 20 மார்ச் 2019 (UTC)

@ஞா. ஸ்ரீதர்:வணக்கம். இனி உருவாக்கும் கட்டுரைகளில் அவ்விதம் சேர்க்கிறேன். திரைப்படங்கள் எனும் தலைப்பிலுள்ள கட்டுரைகளில் பெரும்பாலானவை மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. சில தலைப்புகள் மட்டுமே எஞ்சியுள்ளன. புதிதாக தலைப்புகள் சேர்க்க வாய்ப்புள்ளதா? நன்றி.--உமாநாத் (பேச்சு) 02:01, 22 மார்ச் 2019 (UTC)

நாட்கள் குறைவாக இருப்பதால் அதற்கான வாய்ப்பு இல்லை. நன்றிஸ்ரீ (talk) 07:54, 22 மார்ச் 2019 (UTC)

முனைப்பான பங்களிப்புதொகு

கட்டுரைப்போட்டி முடிய இன்னும் குறைந்த நாட்களே உள்ளமையால் ஊக்கம் குறையாமல் தொடர்ந்து இலக்கு வைத்து, முனைப்புடன் தங்களது பங்களிப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:21, 23 மார்ச் 2019 (UTC)

பதக்கம்தொகு

  விக்கிப்புயல் பதக்கம்
புதுப்பயனர் போட்டியில் மெதுவாகப் பங்களிக்கத்தொடங்கி, பின்னர் புயல் போலத் தொடந்து கட்டுரைகளை உருவாக்கி வருவதனைப் பாராட்டி மகிழ்ந்து இப்பதக்கத்தினை வழங்குகிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:48, 23 மார்ச் 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

@Parvathisri: வணக்கம். தங்களின் பாராட்டு மேலும் சிறப்பாக செயல்படுவதற்கான ஊக்கத்தை அளிக்கிறது. மனமார்ந்த நன்றி.--உமாநாத் (பேச்சு) 08:15, 24 மார்ச் 2019 (UTC)

தில்லுக்கு துட்டுதொகு

@Parvathisri:வணக்கம். தாங்கள் சுட்டிக்காட்டியபடி மேற்கோள்களை சரிசெய்துள்ளேன். நன்றி.--உமாநாத் (பேச்சு) 08:20, 24 மார்ச் 2019 (UTC)

குடியரசு (திரைப்படம்)தொகு

வணக்கம் உமாநாத். குடியரசு (திரைப்படம்) இக்கட்டுரையில் ஒரு வரிக்கே 10 மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. கட்டுரையின் பிற பகுதிகளுக்கு மேற்கோள்கள் தரப்படவில்லை. அதனைச் சரிசெய்யவும். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:32, 25 மார்ச் 2019 (UTC)

@Parvathisri: வணக்கம். சரியான மேற்கோள்களை மட்டும் இப்போது இணைத்துத் திருத்தியுள்ளேன். நன்றி.--உமாநாத் (பேச்சு) 17:44, 25 மார்ச் 2019 (UTC)

ஜெயம் (1999 திரைப்படம்)தொகு

@Parvathisri: இதன் ஆங்கிலக் கட்டுரையில் உள்ளவாறு மேற்கோள்களை இணைத்திருந்தேன். தற்போது சரியாக மாற்றியுள்ளேன். நன்றி.--உமாநாத் (பேச்சு) 17:44, 25 மார்ச் 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி- 2019தொகு

 
நன்றி உமாநாத்

வணக்கம்.விக்கிப்பீடியா புதுப்பயனர் போட்டியில் கலந்துகொண்டதற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். இந்தப் போட்டியில் தாங்கள் 144 கட்டுரைகள் உருவாக்கி/ விரிவாக்கியுள்ளீர்கள். தங்களின் விக்கிப்பீடியா பங்களிப்பு தொடர்வதற்கு எனது வாழ்த்துகள். வாழ்க வளமுடன். ஸ்ரீ (talk) 12:45, 1 ஏப்ரல் 2019 (UTC)

@ஞா. ஸ்ரீதர்:வணக்கம். தங்களின் வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி.--உமாநாத் (பேச்சு) 07:00, 8 ஏப்ரல் 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி முடிவுகள்தொகு

வாழ்த்துகள் உமாநாத். புதுப்பயனர் போட்டியில் 144 கட்டுரைகளை உருவாக்கி மூன்றாமிடத்தில் உள்ளீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். பரிசு விவரங்களுக்கு இப்பக்கத்தைக் காணவும். மேலும் தங்கள் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் தொடருங்கள். நன்றி பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:39, 7 ஏப்ரல் 2019 (UTC)

@Parvathisri:வணக்கம். தங்கள் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கு நன்றி.--உமாநாத் (பேச்சு) 07:02, 8 ஏப்ரல் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புதொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:உமாநாத்&oldid=2816138" இருந்து மீள்விக்கப்பட்டது