திருமலை ரெகுநாத சேதுபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''திருமலை ரெகுநாத சேதுபதி''' என்பவர் [[இராமநாதபுரம் சமஸ்தானம்|இராமநாதபுரம் சமஸ்தான]] மன்னராகமன்னராவார்.<ref name="sethupathi_tondaimans">{{cite web|url=http://www.tamilnadu.ind.in/tamilnadu_history/sethupathis_thondaimans/sethupathis.php|title=Sethupathi Tondaimans|work=The History of Tamil Nadu}}</ref> இவர் [[தளவாய் சேதுபதி]]க்கு அடுத்து ஆட்சிக்கு வந்து 31 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். இவர் தளவாய் சேதுபதியின் தங்கை மகனாவார்.
== வாரிசு உரிமை ==
[[தளவாய் சேதுபதி]] மன்னர் ஆண்வாரிசு இல்லாமல் இறந்து போனதால் சேதுநாட்டின் அரசுரிமை யாருக்கு என்ற பிரச்சனை எழுந்தது. சேதுபதிப் பட்டத்திற்கு மறைந்த மன்னர் தளவாய் சேதுபதியின் தங்கை மக்களான ''தனுக்காத்த தேவர்'', ''நாராயணத் தேவர்'', ''திருமலைத் தேவர்'' ஆகிய மூவர்களில் ஒருவரை சேது மன்னராக ஆக்குவதற்கு அரண்மனை மூத்தவர்கள் ஏற்பாடுகளை செய்துவந்தனர். இதனை அறிந்த [[கூத்தன் சேதுபதி]]யின் மகனும் இதற்கு முன்பே மன்னர் பதவிக்கு உரிமை கோரியவருமான தம்பித்தேவர் மதுரை [[திருமலை நாயக்கர்|திருமலை நாயக்க]] மன்னரிடம் தன்னை சேதுநாட்டின் மன்னராக ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி திருமலை நாயக்கர் சேதுநாட்டு அரசியலில் தலையிட்டார். தம்பித் தேவரையும் அவரது எதிர்த் தரப்பினரான தனுக்காத்த தேவர் முதலியோரையும் அழைத்துப் பேசி திருமலை நாயக்கர் தன் சமரச தீர்வை அவர்களிடம் முன்வைத்தார். இதன்படி ஏற்கனவே [[காளையார் கோவில்]] பகுதியைத் தன் வசம் வைத்திருந்த தம்பித் தேவருக்கு அந்தப் பகுதியினை ஆளும் உரிமையினையும், தனுக்காத்த தேவருக்கு சேதுநாட்டின் வடகிழக்குப் பகுதியான அஞ்சுகோட்டை பகுதியையும், திருமலை ரெகுநாதத் தேவர் இராமநாதபுரம் கோட்டை உள்ளிட்ட தென் பகுதியையும் ஆள வேண்டும் என சேதுநாட்டை மூன்று பகுதிகளாகப் பிரிவினை செய்தார்.
"https://ta.wikipedia.org/wiki/திருமலை_ரெகுநாத_சேதுபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது