நீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 2:
[[படிமம்:Iceberg with hole near Sandersons Hope 2007-07-28 2.jpg|300px|thumb|நீரின் மூன்று நிலைகள்: [[நீர்மம்]], திண்மம் ([[பனி]]), [[வளிமம்]] (வளியிலுள்ள கட்புலனாகாத [[நீராவி]]). நீராவியால் நிரம்பலாக்கப்பட்ட வளியிலுள்ள நீராவி ஒடுங்கியே [[முகில்]]கள் தோன்றுகின்றன.]]
 
'''நீர்''' (''water'') என்பது H<sub>2</sub>O என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு|வாய்ப்பாட்டால்]] விவரிக்கப்படும் ஒரு [[வேதியியல்]] [[சேர்மம்|சேர்மமாகும்]]. நிறமற்றும் நெடியற்றும் ஒரு ஒளிபுகும் தன்மையும் இச்சேர்மத்தின் தோற்றப் பண்புகளாகும். [[புவி]]யிலுள்ள [[ஓடை]]கள், [[ஏரி]]கள், [[கடல்]]கள், அனைத்தும் பெரும்பாலும் நீராலேயே ஆக்கப்பட்டுள்ளன. மேலும் உலகில் காணப்படும் உயிரினங்கள் அனைத்திலும் நீரானது நீர்மவடிவில் காணப்படுகிறது. உயிரினங்களின் உடலுக்கு ஆற்றலையோ, கனிம ஊட்டச்சத்துகள் எதையுமோ நீர் தருவதில்லை என்றாலும் அவ்வுயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு நீர் அத்தியாவசியமானதாகும். ஒரு நீர் மூலக்கூற்றில் ஓர் [[ஆக்சிசன்]] அணுவுடன் இரண்டு [[ஐதரசன்]] அணுக்கள் [[சகப் பிணைப்பு]] மூலம் பிணைக்கப்பட்டுள்ளன. திட்டவெப்ப அழுத்தத்தில் இது ஒரு நீர்மமக இருந்தாலும் திடநிலையில் இது பனிக்கட்டியாகவும் வாயு நிலையில் [[நீராவி]]யாகவும் காணப்படுகிறது. மழை வடிவில் இது பூமியில் வீழ்படிவாகவும் மூடுபனியாக தூசுபடலமாகவும் உருவாகிறது. நீர்ம நிலைக்கும் திடநிலைக்கும் இடைப்பட்ட தொங்கல் நிலையிலுள்ள நீர்த்துளிகள் மேகங்களாக மாறுகின்றன. இறுதியாக இந்நிலையிலிருந்து பிரிந்து படிகநிலைப் [[பனிக்கட்டி]] வெண்பனியாக வீழ்படிவாகிறது. நீரானது தொடர்ச்சியாக [[ஆவியுயிர்ப்பு|நீராவிபோக்கு]], [[ஆவி ஒடுக்கம்]], [[பொழிவு (வானிலையியல்)|வீழ்படிவு]] போன்ற செயல்களுடன் நீர்ச்சுழற்சிக்கு உட்பட்டு இயங்கிக்கொண்டே கடலைச் சென்றடைகிறது.
 
புவிப் பரப்பின் 71% பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/xx.html#Geo|title=CIA- The world fact book|publisher=Central Intelligence Agency |accessdate=2008-12-20}}</ref>. புவியின் தண்ணீரில் பெரும்பகுதி சமுத்திரங்கள், ஏனைய பரந்த நீர்நிலைகளிலும், சுமார் 1.6% பகுதி நிலத்தடி [[நிலத்தடி நீர் கொள் படுகை|நீர்கொள் படுகை]]களிலும் காணப்படுகிறது. [[வளி மண்டலம்|வளி]] மண்டல நீரின் 0.001% பகுதி [[ஆவி|வாயு]] வடிவிலும், காற்றில் மிதக்கும் திட மற்றும் திரவ துகள்களால் உருவாகும் [[மேகம்|மேக]]ங்களிலும், காற்றின் நீராவி குளிர்ந்து சுருங்குவதால் ஏற்படும் [[குளிர்ந்து சுருங்குதல்|நீர்க்கோர்வைகளிலும்]] காணப்படுகிறது.<ref>
வரிசை 328:
 
பாரம்பரிய மற்றும் புகழ் பெற்ற ஆசிய தத்துவத்தின் சில பகுதிகளிலும் நீர் முன்மாதிரியாகக் கருதப்பட்டுள்ளது.ஜேம்ஸ் லெக்கின் 1891 ம் ஆண்டைய டா டே ஜிங் மொழிபெயர்ப்பு இவ்வாறு கூறுகிறது. "மிகப் பெரும் சிறப்பு நீரைப் போன்றது.அனைத்து பொருட்களுக்கும் நன்மை விளைவிப்பதிலும், அனைத்தையும் ஆட்கொள்வதிலும், தொய்வில்லாது அனைவரும் வெறுப்பதையும் ஆதரிப்பதிலும், நீரின் சிறப்பு வெளிப்படுகிறது.எனவே அதன் வழி 'டா' வுக்கருகில் இருக்கிறது.நீரைவிட மென்மையானதாகவும், பலவீனமானதாகவும் உலகில் எதுவும் இல்லாத போதிலும், பலம் வாய்ந்த வலிமையான பொருட்களை அழிப்பதில் அதற்கு நிகர் வேறு யாருமில்லை;--அதன் போக்கை மாற்றக்கூடிய வலிமை வாய்ந்தது வேறு எதுவுமிருக்கமுடியாது."<ref>http://www.sacred-texts.com/tao/taote.htm</ref> இன்று ப்ரூஸ் லீ யின் கீழ் காணும் கூற்று அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது. "மனதை வெறுமையாக்கு, வடிவமற்று, உருவமற்று நீரைப்போல் இரு. நீரை கோப்பைக்குள் ஊற்றும் போது அது கோப்பையாகிறது.குடுவைக்குள் விடும் போது குடுவையாகிறது.தேநீர்க்கோப்பைக்குள் விடும் போது தேநீர்க் கோப்பையாகிறது. தற்பொழுது நீரால் வழிந்தோடவும் முடியும் அல்லது மோதவும் முடியும்.நீர் எனது நண்பனாய் இருக்கட்டும்."<ref>ப்ரூஸ் லீ: எ வாரியர்'ஸ் ஜர்னி (2000)</ref>
 
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது