நா. ம. ரா. சுப்பராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 66:
}}
'''என். எம். ஆர். சுப்பராமன்''' (பிறப்பு: 14.08.1905- இறப்பு:25.01.1983) [[காந்தியம்|காந்தியவழியில்]] [[இந்திய விடுதலைப் போராட்டம்|இந்திய விடுதலைப் போராட்டத்தில்]] கலந்துகொண்டவர். மதுரையில் நாட்டாண்மை மல்லி குடும்பத்தில், இராயலு அய்யர்-காவேரி அம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர். இவரது மனைவி பெயர் பர்வதவர்தனி. [[காந்தியம்|காந்தியவழியில்]] இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டதால் ”மதுரை காந்தி“ என மதுரை மக்களால் அன்பாக அழைக்கப்பட்டவர்.
<ref>http://www.hindu.com/2006/08/20/stories/2006082003000200.htm</ref>
 
==இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்களிப்பு==
வரிசை 76:
 
==அரசியல் இயக்கம்==
1923ல் காக்கிநாடாவில் நடைபெற்ற [[இந்திய தேசிய காங்கிரசு|அகில இந்திய காங்கிரஸ் கட்சி]] மாநாட்டுக்கு, மதுரை நகர் பிரதிநிதியாக கலந்து கொண்டார். இதனால் இவரது இந்திய விடுதலை வேட்கை அதிமாக்கியது. 1930ல் மதுரை மாவட்ட காங்கிரசு கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். 1934ல் [[மகாத்மா காந்தி]] நாடு முழுவதும் [[தீண்டாமை]]க்கு எதிரான பிரசாரம் மேற்கொண்டார். அவரது பயணத்தில் காந்தியடிகள் [[மதுரை]] வருகையின் போது, என். எம். ஆர். சுப்பராமன் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி இருந்தார். [[மகாத்மா காந்தி]] சுப்பராமனின் குடும்ப நண்பராக விளங்கினார்.
 
மதுரை நகராட்சியின் தலைவராக 1935-1942 வரை பதவியில் இருந்தார். மேலும் 1937ஆம் ஆண்டு மற்றும் 1946ஆம் ஆண்டு ஆகிய முறை [[தமிழ்நாடு சட்டமன்றம்|சென்னை மாநில சட்டப்பேரவை]]யில் உறுப்பினர் பதவியில் இருந்து மக்கள் பணி ஆற்றினார். ”வெள்ளையே வெளியேறு” என்று காந்தியடிகள் தொடங்கி வைத்த போராட்டத்தில் கலந்து கொண்டு கடுஞ்சிறைவாசம் அனுபவித்தார்.
 
[[இந்தியா]] 1947ல் விடுதலை பெற்ற பின்பும் சுப்பராமன் மக்கள் பணியை தொடந்து ஆற்றினார். [[மூன்றாவது மக்களவை| நாடாளுமன்ற மக்களவை]] உறுப்பினராக 1962-1967 வரை தொடந்தார்.<ref>http://164.100.47.132/LssNew/members/statedetailar.aspx?state_name=Madras</ref>
 
==தீண்டாமை ஒழிப்பு இயக்கம்==
காந்தீய கொள்கைகளில், அரிசன முன்னேற்றத்தை தேர்ந்தேடுத்து இதற்காகவே தம்மை அர்பணித்துக் கொண்டவர்.
1939ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்டவர்கள் [[மதுரை மீனாட்சியம்மன் கோயில்|மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள்]] நுழையும் போராட்டத்தில் மதுரை. [[அ. வைத்தியநாதய்யர்| அ. வைத்தியநாதய்யருடன்]] சுப்பராமன் துணையாக போராடியதுடன் [[கக்கன்]] போன்றவர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக உறைவிடப்பள்ளிகள் நிறுவினார். [[நரிக்குறவர்|நரிக்குறவப் பெண்]] குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து திருமணம் செய்துவைத்தார்.
 
==உருவாக்கிய தொண்டு நிறுவனங்கள்==
* [[காந்திகிராமம் | காந்தி கிராமம் கிராமிய பல்கலைக் கழகம்]], [[திண்டுக்கல்]]
* [[காந்தி அருங்காட்சியகம், மதுரை]]
* [[காந்தி நிகேதன் ஆசிரமம்]], [[தே. கல்லுப்பட்டி]]
வரிசை 100:
 
==கொடைத்திறன்==
ஆன்மீகத்தில் மிகவும் பற்றுக் கொண்ட இவர் கீதா பவனம் கட்டி [[பகவத்கீதை]] பாராயணம் நடத்த வழி வகுத்தார். சௌராட்டிர சமூக பெண்கள் கல்வி முன்னேற்றத்திற்காக, மதுரையில் சௌராட்டிர பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இவர் முயற்சியால் துவக்கப்பட்டது.
 
தன் இல்லத்தில் இருந்த நூல்களை மதுரை சௌராட்டிரக் கல்லூரி நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். மதுரையில் பல கூட்டுறவு சங்கங்களை நிறுவி, கூட்டுறவு இயக்கத்தை வளர்த்தவர்களில் இவர் முக்கியமானவர். தாம் மதுரை சொக்கிக்குளத்தில் வாழ்ந்த மாளிகையை [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின்]] ”காந்தியியல்” (Gandhian Thought) துறைக்கு நன்கொடையாக வழங்கினார்.
வரிசை 117:
* மதுரை காந்தி நா. ம. ரா. சுப்பராமன், நூலாசிரியர், கனமஞ்சரி சம்பத, அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை.
* சௌராட்டிரர்: முழுவரலாறு, ஆசிரியர், குட்டின். இரா. சேதுராமன், சென்னை.
 
 
 
{{இந்திய விடுதலை இயக்கம்}}
"https://ta.wikipedia.org/wiki/நா._ம._ரா._சுப்பராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது