அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
சி பராமரிப்பு using AWB
வரிசை 35:
“'''I am at present fit only to read Humboldt; he like another sun illuminates everything I behold'''” ― ''Charles Darwin''
 
என்று தம் இளவயதில் தான் வழிகாட்டியாகக் கொண்ட ஹம்போல்ட்டைப் பற்றி அவரது அஞ்சல் நண்பரான டார்வின் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். டார்வின் தனது அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த ‘[[உயிரினங்களின் தோற்றம் (நூல்)|உயிரினங்களின் தோற்றம்]]’ என்ற நூலை வெளியிட்ட காலத்தில் ஹம்போல்ட் புகழின் உச்சியில் இருந்தவர்.
 
===வாழ்க்கைக் குறிப்பு:===
வரிசை 43:
அக்கால ஐரோப்பிய அறிவியல் அறிஞர்கள் கொண்ட '''அறிவியல் தத்துவங்கள்''' (Philosophy of Science) என்ற கருத்துக் கோட்பாட்டின்வழி, அறிவியல் அறிஞராக வேண்டுமானால் புத்தகங்களில் இருந்தும், நூலகங்களில் இருந்தும், ஆய்வுக்கூடங்களில் இருந்தும் விடுபட்டு, உலகைச் சுற்றி வந்து ஆய்வு நடத்தி, இயற்கையை உன்னிப்பாகக் கவனித்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என்ற முறையைப் பின்பற்ற விரும்பினார். நிலக்கரி சுரங்கம், சுரங்க ஆய்வு போன்றவற்றைத் தானாகவே தன்னார்வமுடன் பயின்று [[நிலவியல்|நிலவியலாளராகப்]]. அவர் காலத்தில், அறிவியல் பல துறைகளாக [[உயிரியல்]], [[நிலவியல்]], [[தாவரவியல்]] என்றெல்லாம் தனித்தனியாகப் பலப் பிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருக்கவில்லை. இவரைப் போன்ற முன்னோடியான அறிவியல் அறிஞர்களின் பங்களிப்பே பின்னர் அறிவியலில் பல பிரிவுகள் ஏற்படக் காரணமாக இருந்தது. மாவீரன் நெப்போலியனுடன் எகிப்து நாட்டிற்கும், ஆப்ரிக்கக் கண்டத்திற்கும் சென்று ஆராய்ச்சிப் பயணம் செய்ய நினைத்த இவர் பயணம் தடைபட்டுப் போனது.
 
பெற்றோர்கள் மறைவிற்குப் பிறகு இவரது இளம் வயதிலேயே பரம்பரைச் சொத்து இவர் கைவசமானது. இதனால் பயணம் செய்ய பிறரின் நிதியுதவி இவருக்குத் தேவைப்படவில்லை. அறிவியல் ஆராய்ச்சியை தொடர தனது சொந்த செலவிலேயே ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்டார். இவருடன் பிரெஞ்சு தாவரவியலார் '''அய்மி பான்பிளான்ட்''' (Aimé Bonpland, French Botanist) என்பவரும் உடன் சென்றார். இவர்கள் சென்ற காலத்தில் உலக அரசியல் சூழ்நிலையும் இவர்களின் பயணத்திற்குச் சாதகமாக அமைந்தது. ஸ்பெயின் நாட்டின் மன்னர் தென்னமெரிக்கக் கண்டத்தை தங்கள் நாட்டின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர எண்ணினார். ஸ்பெயின் நாட்டின் ஆதிக்கத்தால் அக்காலத்தில் தென்னமெரிக்கா '''இலத்தீன் அமெரிக்கா''' அல்லது '''ஸ்பானிஷ் அமெரிக்கா''' என்றும் பரவலாக அழைக்கப்பட்டு வந்தது. தென்னமெரிக்காவின் பெரு நாட்டில் இருப்பதாகக் கருதப்பட்ட தங்கச் சுரங்கத்தை கைப்பற்றுவது, தென்னமெரிக்காவின் செல்வத்தைச் சுரண்டுவது அக்கால ஸ்பெயின் நாட்டின் குறிக்கோளாக இருந்தது. இக்கொள்கையை நிறைவேற்றும் பொருட்டு ஹம்போல்ட் பயணத்திற்கு ஸ்பெயின் மன்னர் தடையின்றி தாராளமாக அனுமதி அளித்தார்.
 
===அறிவியல் ஆராய்ச்சிப் பயணம் (1799-1804):===
வரிசை 73:
==வெளி இணைப்புகள்==
*[http://www.avh.de/web/home.html ''Alexander von Humboldt-Stiftung/Foundation '' ]
 
*[http://humboldt.edu/avhconference/2014_history_avh.html ''History: Alexander von Humboldt '' ]
 
*[http://blog.uta.edu/~omalley/files/2009/09/brochure-fall09-copyright.pdf ''Everything is interrelated – The University of Texas at Arlington '' ]
 
*[http://academic.emporia.edu/aberjame/histgeol/humboldt/humboldt.htm ''Baron Friedrich W.K.H. Alexander von Humboldt, History of Geology, James S. Aber '' ]
 
*[http://books.google.com/books/about/Humboldt_s_Cosmos.html?id=ua8n5fLZx5MC ''Humboldt’s Cosmos By Gerard Helferich '' ]
 
*[http://www.flickr.com/photos/spcouta/sets/72157622803883913/ ''Images from the fall 2009 exhibit in Special Collections at the University of Texas-Arlington Library. The exhibit runs from August 24, 2009 till January 9, 2010. '' ]
 
*[http://ed.ted.com/lessons/who-is-alexander-von-humboldt-george-mehler ''Who is Alexander von Humboldt? – George Mehler '' ]
 
*[http://www.youtube.com/watch?v=VfK7jaUfTU0 ''Humboldt – the last Renaissance man – A BBC Radio Interview '' ]
 
"https://ta.wikipedia.org/wiki/அலெக்சாண்டர்_வோன்_கூம்போல்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது