பிராங்க் கெரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
கெரி, நவீன கட்டிடக்கலைத்துறையின் ஒரு புகழ்பெற்ற மனிதராவார். இவருடைய வீடு உட்பட இவர் வடிவமைத்த கட்டிடங்கள் பல இன்று [[சுற்றுலாப் பயணி|சுற்றுலாப் பயணிகளைக்]] கவரும் இடங்களாக உள்ளன. இதனால் பல [[அரும்பொருட் காட்சியகம்|அரும்பொருட் காட்சியகங்களும்]], நிறுவனங்களும், நகரங்களும் வடிவமைப்பின் முத்திரையைப் பொறிப்பதற்காகவே இவரது சேவைகளை நாடி நிற்கின்றன.
 
[[Image:Gehry Pritzker.JPG|thumb|left|250px|[[[[மில்லெனியம் பூங்கா|மில்லெனியம் பூங்காவிலுள்ள]] [[பிரிட்ஸ்கர் மண்டபம்]]]]]]
சீட்டிலில் அமைந்துள்ள அநுபவ இசைத் திட்டத்தின் இசை அரும்பொருட் காட்சியகம் (Seattle's EMP Music Museum) இவ்வாறான ஒரு கட்டிடமாகும். இந்தக் கட்டிடம், "மைக்குரோசொவ்ட்" நிறுவனத்தைச் சேர்ந்த போல் அலன் என்பவருடைய தனிப்பட்ட இசைப் பொருட் சேமிப்புகளைக் காட்சிப்படுத்தும் நோக்கத்துக்காக அமைக்கப்பட்டது. இது மறுக்கமுடியாதபடி தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு கட்டிடமாக உருவாகியிருந்தபோதும், பெருமளவு [[விமர்சனம்|விமர்சனங்களுக்கும்]] இது உட்பட்டது. இயல்புக்கு ஒத்துப்போகாத [[நிறம்|நிறங்களின்]] பயன்பாடு, கட்டிட மற்றும் இயற்கைச் சூழலுடன் ஒத்திசையாமை, மற்றும் இதன் பாரிய அளவு என்பன கெரி கட்டிடத்தின் அடிப்படையையே பிழையாகப் புரிந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு அவரை இலக்காக்கின. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் [[ஈபெல் கோபுரம்]] கட்டப்பட்டபோது உருவான விமர்சனங்களைச் சுட்டிக்காட்டும் இவரது ஆதரவாளர்கள், வரலாற்று நோக்கின் அடிப்படையிலேயே ஒரு கட்டிடத்தை நியாயமான முறையில் மதிப்பீடு செய்யமுடியும் என்கிறார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/பிராங்க்_கெரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது