ரேடியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 5:
ரேடியம் குளோரைடு வடிவத்தில் ரேடியம் 1898 ஆம் ஆண்டு மேரிகியூரி மற்றும் பியரிகியூரி தம்பதியரால் கண்டறியப்பட்டது. பிரஞ்சு அறிவியல் அகாதமியில் யுரேனைட்டு என்ற கனிமத்திலிருந்து ரேடியம் தனித்துப் பிரித்தெடுக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்டது. மேரிகியூரியும் ஆன்றே -லூயிசு டெபியர்ன் ஆகியோர் 1911 ஆம் ஆண்டு ரேடியம் குளோரைடை மின்னாற்பகுப்பு செய்து ரேடியத்தை அதனுடைய உலோக நிலையில் தயாரித்தனர்<ref>{{Cite web|url=http://www.rsc.org/periodic-table/element/88/radium|title=Radium|publisher=Royal Society of Chemistry }}</ref>
இயற்கையில் ரேடியம் யுரேனியம் மற்றும் தோரியம் தாதுக்களில் மிகச்சிறிய அளவில் காணப்படுகிறது. வாழும் உயிரினங்களுக்கு ரேடியம் ஒன்றும் அத்தியாவசியமான தேவையாக இல்லை. இதன் கதிரியக்க மற்றும் இரசாயன வினைத்திறன் காரணமாக உயிர் வேதியியல் செயல்முறைகளில் இணைந்திருக்கும்போது, ஆரோக்கியத்திற்கு பாதகமான விளைவுகள் ஏற்படலாம். அணுக்கரு மருத்துவத்தில் பயன்படுவதைத் தவிர்த்து ரேடியத்திற்கு என வேறு வணிகப்பயன்பாடுகள் ஏதுமில்லை. முன்னர் இது கதிர் ஒளி வீசுகின்ற சாதனங்களுக்கான கதிரியக்க ஆதாரமாக பயன்படுத்தப்பட்டது. மேலும் இது பிணி நீக்கும் மருந்தாக கருதப்பட்டு கதிரியக்க போலி மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டது. இன்று இத்தகைய பயன்பாடுகளுக்காக ரேடியம் பயன்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் ரேடியத்தின் நச்சுத்தன்மை இன்று உணரப்பட்டுவிட்டது. எனவே குறைந்த நச்சுத்தன்மை கொண்ட ஐசோடோப்புகள் இக்கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
 
==பண்புகள் ==
வரிசை 16:
 
== ஐசோடோப்புகள் ==
நிறை எண்கள் 202 முதல் 234 வரை உள்ள 33 ஐசோடோப்புகளை ரேடியம் கொண்டுள்ளது. இவை அனைத்தும் கதிரியக்கச் செயல்பாடு கொண்டவையாகும். அரை ஆயுட்காலம் 11.4 நாட்களைக் கொண்ட 223Ra, அரை ஆயுட்காலம் 3.64 நாட்களைக் கொண்ட 224Ra , அரை ஆயுட்காலம் 1600 ஆண்டுகள் கொண்ட 226Ra, அரை ஆயுட்காலம் 5.75 ஆண்டுகள் கொண்ட 228Ra என்ற நான்கு ஐசோடோப்புகளும் தோரியம்-232, யுரேனியம்-235, மற்றும் யுரேனியம்-238 போன்ற ஐசோடோப்புகளின் சிதைவுச் சங்கிலியிலிருந்து இயற்கையாகத் தோன்றுகின்றன. 223Ra ஐசோடோப்பு யுரேனியம்-235 ஐசோடோப்பிலிருந்தும், 226Ra ஐசோடோப்பு யுரேனியம்-235 ஐசோடோப்பிலிருந்தும், மற்ற இரண்டு ஐசோடோப்புகளும் தோரியம் 232 ஐசோடோப்பிலிருந்தும் உருவாகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/ரேடியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது