எத்திலீன் கிளைக்கால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 111:
}}
 
'''எத்திலீன் கிளைக்கால்''' (''Ethylene glycol'') ([[பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்|ஐயுபிஏசி பெயர்]]: எத்தேன் -1,2-டையால் (ethane-1,2-diol), பரவலாகப் பயன்படும் ஒரு கரிமவேதியியல் சேர்மம். எத்திலீன் கிளைக்கால், [[தானுந்து]]களின் எரியெண்ணெய், குளிரில் உறையாதிருக்கப் பயன்படும் [[உறையெதிர்ப்பி]]களில் (antifreeze) பயன்படுகின்றது, [[பல்பகுதியம்|பல்பகுதியங்கங்கள்]] (பாலிமர்கள்) உருவாக்கப் பயன்படு முன்னுருப்படிகளில் ஒன்றாகப் பயன்படுகின்றது. தூய எத்திலீன் கிளைக்கால், நிறமற்ற, மணமற்ற, பிசுப்புநீர்ம (syruppy), இனிப்புச்சுவை உடைய நீர்மம், ஆனால் இதுவொரு நச்சுப்பொருள். உட்கொள்ள நேரிட்டால் இறக்கவும் நேரிடும்.
 
எத்திலீன் கிளைக்காலை, எடைமிகுந்த ஈத்தர் [[டையால்]] ஆகிய டையெத்திலீன் கிளைக்காலோடு (diethylene glycol), அல்லது நச்சுத்தன்மை அற்ற பாலி ஈத்தர் பல்பகுதியமமாகிய பாலியெத்திலீன் கிளைக்காலோடு (polyethylene glycol)குழப்பிக்கொள்ளக்கூடாது.
வரிசை 120:
ஐக்கிய அமெரிக்காவில் 1917 இல் எத்திலீன் குளோரோஐதிரின் (ethylene chlorohydrin) வழியாக எத்திலீன் கிளைக்காலை ஒருவாறு அறைகுறையாக தொழிசார்முறையாகச் செய்தனர். 1925 இல்தான் முதன்முதலாக பெரிய அளவில் மேற்கு வர்ச்சீனியாவில் உள்ள தென் சார்லசுட்டன் என்னும் இடத்தில் கார்பைடும் கார்பன் கெமிக்கல் கம்ப்பெனி (இப்பொழுது யூனியன் கார்பைடு கார்ப்பொரேசன்) படைக்கத் தொடங்கியது. 1929 முதல் எல்லா டைனமைட்டு என்னும் வெடிபொருள் படைப்புசாலைகள் எல்லாவற்றிலும் எத்திலீன் கிளைக்கால் பயன்படுத்தப்பட்டது.
 
1937 இல் கார்பைடு நிறுவனம், எத்திலீனை எத்திலீன் ஆக்சைடாக ஆக்க ஆவிநிலை ஆக்சைடாக்க முறைக்கு லிஃவோர்ட் செய்முறையைக் (Lefort's process) கையாண்டது. 1953 ஆம் ஆண்டுவரை நேரடியான ஆக்சைடாக்கும் முறையில் கார்பபைடு நிறுவனம் தனிமுழுதாண்மை பெற்று இருந்தது. அதன்பின் சனட்டிஃவிக் டிசைன் புராசசு (Scientific Design process) வணிகமுறைப்பயன்பாட்டாக்கி உரிமங்கள் வழன்கப்பட்டன.
 
இந்த மூலக்கூறு விண்வெளியிலும் கண்டுபிடிக்கப்பட்டது <ref>{{cite journal|author =J. M. Hollis, F. J. Lovas, P. R. Jewell, L. H. Coudert | title = Interstellar Antifreeze: Ethylene Glycol| journal = [[The AstroPhysical Journal]] | volume = 571|issue =1 | pages = L59–L62 | date = 2002-05-20 | doi = 10.1086/341148 | bibcode=2002ApJ...571L..59H}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/எத்திலீன்_கிளைக்கால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது