அரசியல்சட்ட முடியாட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 2:
{{Monarchism |expanded=Varieties}}
 
'''அரசியல்சட்ட முடியாட்சி''' அல்லது '''அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சி''' (''Constitutional monarchy'') அல்லது '''குறுகிய முடியாட்சி''' (''limited monarchy'') என்பது, ஒரு வகையான அரசியல் முறைமை. இதில், எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத [[அரசியல்சட்டம்|அரசியல்சட்டத்துக்கு]] அமைய அரசன் அல்லது அரசி நாட்டின் தலைவராக இருப்பார். இது [[முழுமையான முடியாட்சி]]யில் இருந்தும் வேறு பட்டது. முழுமையான முடியாட்சியில் [[அரசன்]] அல்லது [[அரசி]]யிடமே கட்டற்ற அரசியல் அதிகாரம் இருக்கும் என்பதுடன் அவர்கள் எந்த அரசியல் சட்டத்துக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல.
 
பெரும்பாலான அரசியல்சட்ட முடியாட்சிகள் [[நாடாளுமன்ற முறை]]யைக் கைக்கொள்கின்றன. இம்முறையில், அரசர் ஒரு சடங்குமுறையான ஆட்சித் தலைவராக இருப்பார். நேரடியாக அல்லது மறைமுகமாக மக்களால் தெரிவு செய்யப்படும் ஒருவர் [[பிரதம அமைச்சர்|பிரதம அமைச்சராக]] இருப்பார். உண்மையான அரசியல் அதிகாரத்தை இவரே செயல் படுத்துவார். கடந்த காலங்களில், அரசர்கள் [[பாசிச இத்தாலி]], [[பிராங்கோயிய எசுப்பெயின்]] போன்ற [[பாசிசம்|பாசிச]], குறைப் பாசிச அரசியல் சட்டங்களுடனும், இராணுவ வல்லாண்மைகளுடனும் சேர்ந்து இயங்கியுள்ளனர்.
 
தற்காலத்தில் [[ஆசுத்திரேலியா]], [[பெல்சியம்]], [[கம்போடியா]], [[கனடா]], [[டென்மார்க்]], [[சப்பான்]], [[லக்சம்பர்க்]], [[மலேசியா]], [[நெதர்லாந்து]], [[நார்வே]], [[எசுப்பெயின்]], [[சுவீடன்]], [[தாய்லாந்து]], [[ஐக்கிய இராச்சியம்]] என்பன அரசியல்சட்ட முடியாட்சி முறையைக் கைக்கொள்ளும் நாடுகள் ஆகும்.
 
{{அரசாட்சி முறைமைகள்}}
"https://ta.wikipedia.org/wiki/அரசியல்சட்ட_முடியாட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது