சுதேசி இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

32 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
 
==தமிழ்நாட்டில்==
பொதுமக்கள் அந்நிய நாட்டுப் பொருள்களை வாங்கக் கூடாது, அந்நியத் துணிகளைப் அழிக்க வேண்டும். உள்நாட்டின் உற்பத்திப் பொருள்களையே வாங்கி உபயோகிக்க வேண்டும் என்பது சுதேசி இயக்கத்தின் நோக்கம். இவ்வியக்கம் இந்தியா முழுவதும் சுதேசி இயக்கம் பரவியது; பொதுமக்களும் காங்கிரஸ்காரர்களும், தங்கள் வீட்டில் இருந்த அந்நிய நாட்டுத் துணிகளை வீதியிலே கொண்டு வந்து போட்டுக் கொளுத்தினார்கள்.
 
அப்போது தமிழகத்திலும் அந்தப் போராட்டம் வெகுஜன இயக்கமாக மாறியது. ஆனால், சுதேசி இயக்கம் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] பெருத்த ஆதரவை பெறவில்லை என [[பிரிட்டிஷ் பேரரசு|பிரிட்டிஷ் அரசின்]] அறிக்கைகள் கூறினாலும், அதே அரசின் ரகசிய அறிக்கைகள் இதற்கு நேர்மாறாக இயக்கம் மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றிருப்பதாகக் கூறின. [[குடிசைத் தொழில்|குடிசைத் தொழில்களையும்]], [[கதர் துணி|கதர் துணியையும்]] ஊக்குவிக்கும் இயக்கமாக மட்டுமே சுதேசி இயக்கம் இன்று அறியப்பட்டுள்ளது. ஆனால், [[தூத்துக்குடி|தூத்துக்குடியில்]] ஒரு நவீன தொழில் முயற்சியையும் ([[சுதேசிக் கப்பல் நிறுவனம்|சுதேசிக் கப்பல் கம்பெனி]]), சுதேசி பண்டகசாலையையும் இந்த இயக்கம் ஏற்படுத்தியது. அதைப்போல [[திருநெல்வேலி]], தூத்துக்குடியில் மக்கள் இயக்கங்களை உருவாக்கியது. [[வ. உ. சிதம்பரம் பிள்ளை]] சுதேசி என்ற அடிப்படையில் அந்நியர்களுக்குப் போட்டியாக உற்பத்தி மண்டலங்களை உருவாக்குதல், அந்நியர்களுக்குப் போட்டியாக வர்த்தக நிறுவனங்களை நடத்துதல் என்று நாட்டு மக்களுக்கு அந்த இயக்கத்தின் இன்னொரு பக்கத்தையும் அணுகுமுறையையும் அடையாளம் காட்ட முயற்சித்தார். தனது சொத்தையே பணயம் வைத்து பிரிட்டானிய கப்பல் கம்பெனிகளுக்குப் போட்டியாக, [[சுதேசிக் கப்பல் கம்பெனி]] ஒன்றினை உருவாக்கினார். இதனால் பிரிட்டானிய அரசின் ராஜத் துரோகக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, இரண்டு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பெற்றார். சுதேசி கப்பல் நிறுவனத்தை வர்த்தக்ப் போர்முறைகளைக் கொண்டு பிரிட்டானிய ஆட்சியாளர்கள் நஷ்டமேற்படுத்தி மூடச் செய்தனர்.
*[http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8646&Itemid=139 கீற்று இணையதளக் கட்டுரை]
 
{{வார்ப்புரு:இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்}}
 
[[பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்டம்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2750948" இருந்து மீள்விக்கப்பட்டது