மாநகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: இதற்க்கு → இதற்கு using AWB
வரிசை 46:
பண்டைய கிரேக்கர்கள் பெரும்பாலும் மத்தியதரைக் கடல் பகுதியில் தங்கள் குடியிருப்பு கட்டங்களை திட்டமிட்ட வகையில் அமைத்தனர். இதற்கு பிரையன் நகரமானது ஒரு சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக உள்ளது. இந்த நகரம் இன்றைய திட்டமிடப்பட்ட நகரங்களைவிட பல வகைகளில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருந்தது, பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முற்காலத்திய, [[சிந்துவெளி நாகரிகம்|சிந்து சமவெளி நாகரிகத்தைச்]] சேர்ந்தவர்கள் [[மொகெஞ்சதாரோ]] போன்ற நகர கட்டுமானங்களைப் பயன்படுத்தி வழ்ந்துவந்தனர். மத்திய காலங்களில் சிறந்த திட்டமிடலோடு கட்டப்பட்ட நகரங்கள் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது. பிரான்சின் தெற்கே பல்வேறு ஆட்சியாளர்களால் நிறுவப்பட்ட நகரங்களும், பழைய டச்சு மற்றும் பிளெமெய்ஷு நகரங்களின் நகர விரிவாக்கங்களும் இவற்றிர்க்கு நல்ல உதாரணங்கள் ஆகும்.
 
19 ஆம் நூற்றாண்டில் திட்டமிடப்பட்ட நகரங்கள், குறிப்பாக [[பாரிஸ்]] நகரத்தின் மறுவடிவமைப்புக்குப் பிறகு இவ்வாறான திட்டங்கள் பிரபலமாக உருவாயின. இவற்றின் காரணமாக பழைய பாதைகள் மேலும் அகலப்படுத்தப்பட்டு மறு உருவாக்கம் செய்யப்பட்டன. ஐக்கிய அமெரிக்காவில் தனது புதிய நிலப்பகுதிகள் மற்றும் நகரங்களில் திட்டமிடப்பட்ட கட்ட அமைப்புகளை கட்டாயப்படுத்தியது, அமெரிக்காவின் மேற்க்குப்பகுதிகளானமேற்குப்பகுதிகளான [[சால்ட் லேக் நகரம்]] மற்றும் [[சான் பிரான்சிஸ்கோ]] போன்ற இடங்களில் இவ்வாறு கட்டமைப்புகள் ஒழுங்கமைக்கப்பட்டன.
 
மற்ற வடிவங்களில் ஆரக்கால் கட்டமைப்பை உள்ளடக்கியிருக்கலாம், இதில் பிரதான சாலைகள் ஆரக்கால் போன்று மையப் புள்ளியில் இணைகின்றன. இது பெரும்பாலும் ஒரு வரலாற்று வடிவம் ஆகும், நகரம் வளரவளர நகர கட்டுமானம் நீண்ட காலமாக தொடர்ந்து வளர்ச்சியடைந்ததில் விளைவு ஆகும். அண்மைக்கால வரலாற்றில், இத்தகைய வடிவங்கள் நகரத்தின் புறநகர்பகுதிகளை சுற்றி உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தின. பல டச்சு நகரங்கள் இவ்வாறான முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளன: செறிவான சாலைகளால் சூழப்பட்ட ஒரு மையச் சதுரம். அதிலிருந்து நகரத்தின் ஒவ்வொரு விரிவாக்கமும் ஒரு புதிய வட்டமாக (நகர சுவர்கள் கொண்ட சாலை) குறிக்கப்படும். ஆம்ஸ்டர்டாம், ஹார்லெம் மற்றும் [[மாஸ்கோ]] போன்ற நகரங்களில், இந்த மாதிரியான இன்னும் தெளிவாக தெரியும் எடுத்துக்காட்டுகளாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மாநகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது