கணினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2702084 BalajijagadeshBot உடையது. (மின்)
வரிசை 8:
பல்வேறான பௌதீக பொதிகளில் கணினிகள் கிடைக்கின்றன. தொன்மையான கணினிகள் பெரிய அரங்கின் கொள்ளளவை கொண்டவையாக இருந்தன. தற்போதும் விசேட அறிவியல் கணிப்புகளுக்கு பயன்படும் [[மீக்கணினி|மீக்கணினிகள்]] மற்றும் நிறுவனங்களின் [[பரிமாற்ற செயற்பாடு|பரிமாற்ற செயற்பாடுகளுக்கு]] பயன்படும் [[பிரதான-சட்டம்|பிரதான-சட்டங்கள்]] போன்றவற்றுக்கு இவ்வாறான மாபெரும் கணிப்பிடும் வசதிகள் உள்ளன. மக்களுக்கு அதிகம் பரிச்சையமானவையாக அமைவன சிறியளவானதும் ஒருத்தரின் பயன்பாட்டுக்குரியதுமான [[தனியாள் கணினி|தனியாள் கணினிகளும்]], அதன் கொண்டுசெல் நிகரான [[ஏட்டுக்கணினி|ஏட்டுக்கணினிகளும்]] ஆகும். ஆனால் தற்காலத்தில் அதிகளவில் பயன்பாட்டில் உள்ள கணினிகளாக அமைபவை உட்பொதிக்கணினிகளாகும். உட்பொதிக்கணினிகள் இன்னொரு சாதனத்தை கட்டுப்படுத்துவதற்குரிய சிறிய கணினிகள் ஆகும். இவை [[சண்டை விமானங்களில்]] இருந்து [[இலக்கமுறை படப்பிடிப்பு கருவி|இலக்கமுறை படப்பிடிப்பு கருவிகள்]] வரை பயன்படுத்தப் படுகின்றன.
 
== வரலாறு ==கணிணி
 
ஆதியில் ''"கணிப்பான்"'' என்பது [[கணிதர்]] ஒருவரின் பணிப்பின் கீழ் எண்ணுக்குரிய கணிப்புகளை செய்யும் ஒருவரை குறிப்பதாக அமைந்தது. அவர் அனேகமாக [[எண்சட்டம்]] போன்ற பல்வேறு [[பொறிமுறை கணிப்பு சாதனம்|பொறிமுறை கணிப்பு சாதனங்களின்]] உதவியுடன் பணிபுரிந்தார். தொடக்ககால கணிப்பு சாதனத்துக்கு உதாரணமாக கி.மு 87 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் [[அன்டிகைதிரா]] எனும் கிரகங்களின் அசைவுகளை கணிப்பதற்கு பயன்பட்ட கிரேக்க சாதனத்தை குறிப்பிடலாம். இந்த நூதனமான சாதனத்தின் அமைவுக்கு காரணமான தொழில்நுட்பம் ஏதோவொரு காலகட்டத்தில் தொலைந்து போனது.
 
ஐரோப்பாவில் ஏற்பட்ட [[மறுமலர்ச்சி]] காரணமாக [[கணிதம்]], [[பொறியியல்]] துறைகள் பெரும் வளர்ச்சி கண்டன. 17 ஆம் நூற்றாண்றின் ஆரம்பப் பகுதியில் [[மணிக்கூடு|மணிக்கூடுகளுக்காக]] அபிவிருத்தி செய்யப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல [[பொறிமுறை கணிப்பு சாதனம்|பொறிமுறை கணிப்பு சாதனங்கள்]] பின்னடையாக வரத் தொடங்கின, இதன் காரணமாக இலக்கமுறை கணினிகளுக்கு மூலமான தொழில்நுட்பங்கள் பல 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அபிவிருத்தி செய்யப்பட்டன. உதாரணமாக [[துளைப்பட்டை]], [[வெற்றிட கட்டுளம்]] என்பவற்றை குறிப்பிடலாம். முதல் முழுமையான செய்நிரல் கணினியை [[1837]] ஆம் ஆண்டில் [[சார்ல்ஸ் பாபேஜ்]] என்பவர் எண்ணக்கருப்படுத்தி வடிவமைத்தார். ஆனால் அக்கால தொழில்நுட்ப எல்லை, நிதி பற்றாக்குறை, மற்றும் தன்னுடைய வடிவமைப்புடன் தனகுதலை நிறுத்தமுடியாமை (ஆயிரக்கணக்கான கணினி சம்பந்தப்பட்ட பொறியியல் செயற்திட்டங்களின் முடிபுக்கு காரணமாக பண்பு) போன்ற காரணங்களின் கலப்பால் இந்த சாதனத்தை அவரால் முழுமையாக உருவாக்க முடியவில்லை.
வரிசை 58:
 
=== கணித ஏரண அகம் ===
கணித ஏரண அகம், எண்கணித முறையானதும், ஏரண முறையானதுமான இருவகை இயக்கங்களைச் செயல்படுத்தக் கூடியது. இது [[கூட்டல்]], [[கழித்தல்]] ஆகிய எண்கணிதச் செயற்பாடுகளை மட்டும் செய்யக்கூடியனவாகவோ அல்லது [[பெருக்கல்]], [[வகுத்தல்]], [[முக்கோணகணிதம்|முக்கோணகணிதச்]] செயற்பாடுகள் ([[சைன் (முக்கோணவியல்)|சைன்]], [[கோசைன் (முக்கோணவியல்)|கோசைன்]] முதலியவை), [[வர்க்கமூலம்]] போன்ற செயற்பாடுகளையும் செய்ய வல்லவையாகவோ இருக்கலாம். சில வகையானவை முழு எண்களில் மட்டுமே செயற்பாடுகளைசசெயற்பாடுகளைச் செய்யக் கூடியன. வேறு சில [[மெய்யெண்]]களுக்காகப் பயன்படும் [[மிதவைப் புள்ளி]]களைப் பயன்படுத்துகின்றன. எனினும், மிக எளிமையான செயல்பாடுகளை மட்டும் செய்யக்கூடிய கணினிகளையும், சிக்கலான செயல்பாடுகளையும் எளிமைப்படுத்திச் செய்யக்கூடிய வகையில் நிரலாக்கம் செய்யமுடியும். ஆனால், இவ்வகையில் செயல்படுவதற்கு கூடிய நேரம் எடுக்கும். கணித ஏரண அகங்கள், ஒன்று இன்னொன்றுக்குச் சமமா, ஒன்றை விட இன்னொன்று பெரியதா சிறியதா போன்ற அடிப்படைகளில் எண்களை ஒப்பிட்டு [[பூலியன் உண்மை மதிப்பு|பூலியன் உண்மை மதிப்பை]] ("உண்மை" அல்லது "பொய்") தரக்கூடும்.
 
ஏரணச் செயற்பாடுகள், [[ஏரண இணையல்|AND]], [[ஏரணப் பிரிநிலை|OR]], [[விலக்கிய பிரிநிலை|XOR]], [[ஏரண எதிர்மறை|NOT]] போன்ற பூலியன் ஏரணத்தை உள்ளடக்கியவை.
"https://ta.wikipedia.org/wiki/கணினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது