"இரகுநாத கிழவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

41 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
Balajijagadeshஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
(ஐ)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (Balajijagadeshஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
[[மதுரை]] [[சொக்கநாத நாயக்கர்|சொக்கநாத நாயக்குருக்கு]] இவர் உதவியாக இருந்ததால் இவருக்கு '''''பர இராஜகேசரி''''' அதாவது '''அயல் நாட்டு அரசர்களுக்கு சிங்கம்''' என்ற அவர் பட்டத்தை வழங்கினார். மதுரை ஆட்சிகுட்பட்ட அறந்தாங்கி, பிறான்மலை, திருமயம் போன்ற பகுதிகளை தன் நாட்டுடன் இணைத்தார். இவர் கிறித்துவ மிஷினரிகளின் நடவடிக்கைகளை எதித்தார். மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் இருந்து கிருஷ்ண சேதுபதி மறவ நாட்டை விடுவித்தார். இராணி மங்கம்மாளின் படைகளைத் தோற்கடித்தப் பின்னர், இவர் 1707 ஆம் ஆண்டு தன்னாட்சி கொண்டதாக மறவ நாட்டை அறிவித்தார். இவர் தனது தலைநகரை புகலூர் நகரத்திலிருந்து இராமநாதபுரத்திற்கு மாற்றினார். கிழவன் சேதுபதி '''நல்கோட்டால் பாளையம்''' என்ற (பின்னர் [[சிவகங்கை]] ) புதிய பாளையத்தை நிறுவியதோடு உதய தேவரை அதன் ஆளுநராக நியமித்தார். இவர் திருவாடானை, காளையார் கோவில் ஆகிய கோயில்களுக்கு கிராமங்களை தானமாக வழங்கினார். இது '''''[[செப்பேடுகள்]]''''' மூலம் அறியப்படுகிறது. தலை நகரான இராமநாதபுரத்தில் ஒரு கோட்டையைக் கட்டினார், வைகை ஆற்றின் குறுக்கே ஒரு அணை கட்டினார்.
==இரகுநாத கிழவன்சேதுபதி வாழ்க்கை ==
செம்பிய மறவறான இவர் கள்ளர் குலத்து பெண் ஒருவரை காதலித்து பின்னர் அவரை திருமணம் புரிந்தார், பின்னர் தன் மனைவியின் சகோதரரை புதுக்கோட்டையின் தொண்டைமானாக அறிவித்தார். இரகுநாத தொண்டைமான் அவரை முன்னாள் தொண்டைமான் பல்லவராய தொண்டைமானுக்கு பதிலாக மாற்றினார், பின்னர் இரகுநாத தொண்டைமான் புதுக்கோட்டையில் தொண்டைமான் வம்சத்தை உருவாக்க முயன்றார்.
=== செப்பேடு எழுதுதல் ===
சேதுபதி மன்னர்கள் ஆணைகளை முதலில் ஓலையில் எழுதி அதன் பிறகே செப்பேட்டில் பொறித்தனர். பல செப்பேடுகளில் ஓலையில் எழுதியது யார் செப்பேட்டில் எழுத்துக்களைப் பொறித்தது யார் என்று மிகவும் தெளிவாகக் கூறப்படுகிறது. ஓலையில் எழுதியவர்கள் பெரும்பாலும் இராயசம் அல்லது கணக்குப்பிள்ளைகளாக இருக்கின்றனர். செப்பேட்டில் பொறித்தவர்கள் ஆசாரிகள் அல்லது சிற்பிகளாக இருக்கின்றனார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2803682" இருந்து மீள்விக்கப்பட்டது