எழுத்தோலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
பனைமட்டையிலிருந்து எழுதத் ஓலை உருவாக்குவது தொழில் நுட்பம் மிக்க ஒரு கலை.
 
இளம்பதமுள்ள பனையோலையைப் பொறுக்கி எடுப்பர். அளவுக்குத் தக்கவாறு நறுக்குவர். குழந்தைக்கு நகம் வெட்டுவது போல் நளினமாக அதன் நரம்பைக் களைவர். நிழலில் உலர்த்துவர். பனியில் பதப்படுத்துவர். இளக்கமுறுமாறு இளஞ்சூட்டு வெந்நீரில் வெதுப்புவர். பளபளப்பான சங்கு அல்லது கல்லைக் கையில் வைத்துக்கொண்டு ஓலையை அழுத்தி அழுத்தித் தேய்த்து அழகுபடுத்துவர். பக்குவமாகப் பாடம் செய்வர். பாடம் செய்வது என்பது ஓலைகளை அடுக்கிக் கட்டி முறுக்காமல் இருக்கச் செய்தல். மஞ்சள் நீரிலோ, அரிசிக் கஞ்சியிலோ ஊறவைப்பர். சுவடிக் கட்டில் இரண்டு இடத்தில் சுள்ளாணியால் துளை போடுவர். ஒரு முனையில் ஒரு துளையில் கயிறு கோத்து ஒலையைப் பிரித்துப் புரட்டுமாறு தளர்வாகக் கயிற்றால் கட்டிக்கொள்வர். ஒவ்வொரு ஓலைமீதும் மஞ்சளையும் வேப்பெண்ணெயையும் கலந்து பூசுவர். கோவை இலை, ஊமத்தை இலை அகியவற்றின் சாறுகளைப் பூசுவர். மாவிலை, அறுகம்புல் ஆகியவற்றை எரித்த கரியை மையாகத் தடவுவர். இதன் நேல்தான் எழுத்தாணி கொண்டு எழுதுவர். ஓலையின் மறுமுனைத் துளையிலும் கயிறு கோத்துப் போத்தகமாகக் கட்டுவர். [[வைரமுத்து, தமிழாற்றுப்படை, ஐந்தாம் பதிப்பு - சூலை 2019, பக்கம் 184
 
==எழுத்தோலையின் அளவு==
"https://ta.wikipedia.org/wiki/எழுத்தோலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது