அனகாரிக தர்மபால: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Anagarika.jpg|thumb|right|அனகாரிக தர்மபால]]
'''அனகாரிக தர்மபால''' ([[17 செப்டெம்பர்]] [[1864]] - [[29 ஏப்ரல்]] [[1933]]), 20 ஆம் நூற்றாண்டில் [[புத்த சமயம்|புத்த சமயத்தின்]] இரண்டு முக்கியமான அம்சங்களைத் தொடக்கி வைத்ததில் முன்னணியில் இருந்தவர் ஆவார். இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக ஏறத்தாழ முற்றாகவே அழிந்த நிலையில் இருந்த புத்த சமயத்துக்கு அங்கே புத்துயிர் அழிப்பதில்அளிப்பதில் முன்னோடியாக இருந்தார். தற்காலத்தில் [[ஆசியா]], [[வட அமெரிக்கா]], [[ஐரோப்பா]] ஆகிய மூன்று கண்டங்களில் புத்த தர்மத்தைப் போதித்த முதல் பௌத்தரும் இவரே.
 
தற்காலத்தில், [[திருமணம்|மணம்]] முடிக்காமல், புத்த சமயத்துக்காக முழுநேரம் உழைக்கும் ஒருவரே ''[[அனகாரிக]]'' என அழைக்கப்படுகிறார். தர்மபாலவே முதலாவது ''அனகாரிக'' ஆவார். இவர் தனது எட்டாம் வயதிலேயே மணம் செய்து கொள்வதில்லை என உறுதி எடுத்துக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இவ்வுறுதி மொழியை அவர் வாழ்நாள் முழுதும் காப்பாற்றினார். இவர் மஞ்சள் உடை தரித்தபோதும், இவர் ஒரு [[பிக்கு]] அல்ல. இவர் தனது தலையை மழித்துக் கொண்டதில்லை. மரபு வழியான துறவற ஒழுங்குகளைப் பின்பற்றுதல் தாம் எடுத்துக் கொண்ட வேலைகளுக்கு, குறிப்பாக, உலகப் பயணங்களின்போது, இடையூறாக இருக்கும் என அவர் கருதினார்.
"https://ta.wikipedia.org/wiki/அனகாரிக_தர்மபால" இலிருந்து மீள்விக்கப்பட்டது