பீடியசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:1868 Lawrence Alma-Tadema - Phidias Showing the Frieze of the Parthenon to his Friends.jpg|thumb|300px|''பார்த்தினனின் சிற்ப வேலைகளை பீடியசு தனது நண்பர்களுக்குக் காட்டுகின்றார்''. (1868) சர். லாரன்சு அல்மா-தடேமா என்பவரால் வரையப்பட்டது.]]]]
'''பீடியசு''' (Phidias) ({{IPAc-en|ˈ|f|ɪ|d|i|ə|s}}; {{lang-grc|Φειδίας}}, ''Pheidias''; {{circa}}&nbsp;கிமு 480&nbsp;– 430) ஒரு கிரேக்கச் சிற்பியும், ஓவியரும், கட்டிடக்கலைஞரும் ஆவார். ஒலிம்பியாவில் உள்ள அவரது சேயுசு சிலை உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்று. அத்துடன், ஆதீனிய அக்குரோபோலிசில் உள்ள ஆதெனா கடவுளின் சிலையும், இதற்கும் ஆதென்சு அக்குரோபோலிசின் மிகப் பெரிய வாயிலான புரொப்பிலாயாவுக்கும்<ref>Birte Lundgreen, "A Methodological Enquiry: The Great Bronze Athena by Phidias" ''The Journal of Hellenic Studies''</ref> இடையில் உள்ள ஆதனா புரோமக்கோசின் மிகப் பெரிய வெண்கலச் சிலையும் பீடியசினால் வடிவமைக்கப்பட்டவை. பீடியசு ஆதென்சைச் சேர்ந்த சார்மிடீசின் மகன். ஏகியசு, அகேலாடசு என்போரே பீடியசின் ஆசிரியர்கள் என நம்பப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.britannica.com/biography/Ageladas|title=Ageladas {{!}} Greek sculptor|website=Encyclopedia Britannica|access-date=2019-02-24}}</ref>
 
[[புளூட்டார்க்]], பீடியசுக்கும், கிரேக்க அரசியல் தலைவர் பெரிக்கிளீசுக்கும்[[பெரிக்கிளீசு]]க்கும் இடையிலான நட்பைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஆதெனா கடவுளுக்கான சிலை செய்வதற்காக வழங்கப்பட்ட பொன்னைத்[[பொன்]]னைத் திருடியதாகவும், கடவுளுக்கு மதிப்பளிக்காத வகையில் தன்னுடையதும், பெரிக்கிளீசினதும் உருவங்களை ஆதனாவின் கேடயத்தில் பொறித்ததாகவும் பீடியசு குற்றஞ்சாட்டப்பட்டார். இதைச் சாதகமாகக் கொண்டு பீடியசு மூலம் பெரிக்கிளீசைக் கொல்வதற்கு, அவருடைய எதிரிகள் முயன்றதாக புளூட்டார்க் எழுதியுள்ளார். மேற்படி குறிப்பின் வரலாற்றுப் பெறுமானம் சர்ச்சைக்கு உரியது.
 
செந்நெறிக்கால கிரேக்கச் சிற்ப வடிவமைப்புக்குத் தூண்டுகோலாக இருந்தவர் என்னும் பெருமைக்கு உரியவராகப் பீடியசைக் கருதும் வழக்கம் உள்ளது. தற்காலத்தில் பெரும்பாலான விமர்சகர்களும், வரலாற்றாளர்களும் எல்லாப் பண்டைக் கிரேக்கச் சிற்பிகளுள்ளும் பெருமை மிக்க ஒருவராகப் பீடியசைக் கருதுகின்றனர்.<ref>[http://www.bartleby.com/65/ph/Phidias.html Phidias]</ref><ref>Bertrand Russell, The History of Western Philosophy, Chapter 10, Protagoras, page 95</ref>
"https://ta.wikipedia.org/wiki/பீடியசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது