தில்லி சுல்தானகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
important keywords something highlighted
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 43:
[[படிமம்:Qminar.jpg|thumb|left||[[குதுப் மினார்]] மம்லுக் சுல்தானகக் காலத்தில் கட்டப்பட்டது.]]
{{main|மம்லுக் சுல்தானகம் (தில்லி)}}
இந்தியாவின் இரண்டாவது முசுலிம் ஆக்கிரமிப்பாளர் [[முகம்மது கோரி|"முகம்மது கோரி"]] அரசியல் நோக்கங்களைக் கொண்டிருந்தார். இவர் [[பிரித்திவிராஜ் சௌகான்|பிரித்திவிராஜ் சௌகானுடன்]] [[தாரைன் போர்கள்|"தாரைன் போர்கள்" (1191 &1192)]] எனப்பட்ட இரண்டு போர்களில் ஈடுபட்டார். இரண்டாவது போரில் வெற்றிபெற்ற "முகம்மது கோரி" அப்பகுதியில் தனது கட்டுப்பாட்டை நிலை நிறுத்தினார். இந்த வம்சத்தின் பெரும்பாலான ஆட்சியாளர் தொடக்கத்தில் கோரியின் [[அடிமை]]களாகவே இருந்ததால் இவ்வம்சம் [[அடிமை வம்சம்]] எனவும் அழைக்கப்படுவது உண்டு. "கோரி " [[குதுப்புத்தீன் ஐபக்]]" என்பவரை இந்தியப் பகுதிகளுக்கு ஆளுனராக்கியதுடன் [[குதுப் மினார்|குதுப் மினாரையும்]] கட்டத் தொடங்கினார். எனினும் இது குதுப்புதீனுக்குப் பின் வந்த "[[இல்துமிசு]]" என்பவராலேயே கட்டி முடிக்கப்பட்டது. இல்துமிசுக்குப் பின்னர் ஆட்சியில் அமர்ந்தவர் [[பால்பன்]] என்பவர். இவருக்குப் பின்னர் இல்துமிசின் மகளான [[ராசியா சுல்தானா]] ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் இவர் திறமை வாய்ந்த நிர்வாகியாகத் திகழ்ந்ததுடன், முசுலிம் உலகின் "'''முதலாவது பெண் ஆட்சியாளராகவும்"''' விளங்கினார். எனினும் துருக்கியப் பிரபுக்களின் எதிர்ப்புக் காரணமாக இவர் பதவி விலக நேரிட்டது. இதற்குப் பின்னர் பல திறமையற்ற, விரும்பப்படாத பல ஆட்சியாளர்கள் வந்து போயினர். ஆட்சிப் பகுதிகளில் ஏற்பட்ட [[புரட்சி]]களாலும், பிரபுத்துவக் குடும்பங்களுக்கு இடையேயான எதிர்ப்பு உணர்ச்சிகளாலும் '''மம்லுக் வம்சம் 1290 இல் முடிவுற்றது'''.
 
==''' கால்சி''' ==
கால்சி அல்லது [[கில்சி வம்சம்]] என அழைக்கப்படும் வம்சம் முகம்மது கோரியின் காலத்தில் தம்மை வங்காளத்தின் ஆட்சியாளர்களாக நிலைநிறுத்திக் கொண்டனர். இவர்கள் [[சதிப் புரட்சி]] மூலம் மம்லுக் ஆட்சியாளரை வெளியேற்றிப் பேரரசைக் கைப்பற்றினர். கால்சிகள் [[குசராத்]]தையும், [[மால்வா]]வையும் கைப்பற்றியதுடன், '''முதன்முதலாக [[நர்மதை ஆறு|நர்மதை]] ஆற்றுக்குத் தெற்கே [[தமிழ் நாடு]] வரையும் படை நடத்திச் சென்றனர்'''. தில்லி சுல்தானகத்தின் ஆட்சி தொடர்ந்து [[தென்னிந்தியா]]வுக்குள் விரிவடைந்தது. முதலில் தில்லி சுல்தானகமும், பின்னர் அதிலிருந்து பிரிந்த [[குல்பர்கா]] [[பாமினி பேரரசு|பகுமானி சுல்தானகமும்]], பகுமானி சுல்தானகம் பிளவுபட்டு ஐந்து தனித்தனியான [[தக்காணத்து சுல்தானகங்கள்|தக்காணச் சுல்தானகங்களாக]] ஆனபின் அவையும் தென்னிந்தியாவுக்குள் ஆட்சி நடத்தின. இக் காலத்தில் ஒன்றுபட்ட தென்னிந்தியா [[விஜயநகரப் பேரரசு|விசயநகரப் பேரரசின்(1336-1565)]] தலைமையில் சில காலம் சுல்தானகங்களின் விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்தியது. எனினும் இறுதியில் விசயநகரப் பேரரசும் 1565 இல் தக்காணச் சுல்தானகங்களிடம் வீழ்ச்சியடைந்தது.
 
==''' துக்ளக்''' ==
[[படிமம்:Mausoleum of Ghiyath al-Din Tughluq.jpg|thumb|225px|left| [[துக்ளக்காபாத்]]தில் உள்ள ''[[கியாத் அல்-தீன் துக்ளக்கின் சமாதி]]'']]
[[துக்ளக் வம்சம்|'''துக்ளக் வம்சம்''']] "காசி மாலிக்" எனவும் அறியப்பட்ட [[கியாசுத்தீன் துக்ளக்|'''''கியாசுத்தீன் துக்ளக்''''']] என்பவரால் நிறுவப்பட்டது. இவர் கால்சிகளின் கீழ் படைத் தளபதியாக இருந்தார். துக்ளக்குகள் ஆப்கானிசுத்தானைச் சேர்ந்த துருக்கிய இன மரபினர். எனினும் இவர்கள் நீண்ட காலம் இந்தியாவில் வாழ்ந்து பஞ்சாப் பகுதியின் [[ராசபுத்திரர்]], [[சாட்டுகள்]] போன்றோரோடு மண உறவும் கொண்டிருந்தனர். கியாசுத்தீனைத் தொடர்ந்து [[முகம்மது பின் துக்ளக்]] ஆட்சிக்கு வந்தார். இவர் உயர்ச்சியில் ஆர்வம் கொண்ட ஒருவர். பல வளர்ச்சித் திட்டங்களுக்கு இவரே மூல காரணமாக இருந்தார். எனினும் அதிட்டமின்மையாலும், சரியான திட்டம் இன்மையாலும் இவற்றுட்பல தோல்வியடைய நேரிட்டது. மத விடயங்களில் தாராண்மையை இவர் கடைப்பிடித்தார். சமூகத்தின் மரபுவாதம் சாராத, துருக்கியச் சார்பற்ற பிரிவுகளை இவர் விரும்பினார். இவரது ஆட்சிக் காலத்தின் தாயக முசுலிம்கள் பலம் வாய்ந்த பதவிகளுக்கு உயர்ந்தனர்.
 
இவரது வாரிசான [[ஃபைரூசு கான் சா]] முகம்மது பின் துக்ளக்கின் கொள்கைகளை முற்றாக மாற்றினார். இவர் மரபுவாத சுன்னி முசுலிமாகவும், மதம் தொடர்பில் குருட்டுப் பிடிவாதம் கொண்டவராகவும் இருந்தார். இந்துக்களையும், சியா முசுலிம்களையும் ஒடுக்கினார். தாயக முசுலிம்கள் மீது எதிர்ப்புணர்ச்சி கொண்டவராகவும் இவர் இருந்ததுடன், அரச பதவிகள் பரம்பரை வழி தொடர்வதற்கும் ஏற்பாடு செய்தார். இதனால், ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருக்கும் முசுலிம்கள் உயர் பதவிகளுக்கு வருவது முடியாமல் போனது. இவரது இறப்புக்குப் பின் பேரரசின் வலு பெருமளவு குறைந்து போனது.
"https://ta.wikipedia.org/wiki/தில்லி_சுல்தானகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது