இட்சுகுசிமா கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Mayooranathan, இட்சுகுசிமா சிற்றாலயம் பக்கத்தை இட்சுகுசிமா கோயில் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: சரியான தலைப்பு
வரிசை 4:
 
== வரலாறு ==
இது 593 ஆம் ஆண்டு சுயிக்கோ காலத்தில் சயேக்கி குராமோட்டா என்பவரால் கட்டப்பட்டது எனக் கூறப்படுகின்றது. ஆனாலும் தற்போதைய சிற்றாலயம் முன்னணிப் போர்த் தலைவனான தைரா நோ கியோமோரி என்பவரால் கட்டப்பட்டது எனபது பரவலான நம்பிக்கை. 1168 இல் இவர் அக்கி மாகாணத்தின் ஆளுனராக இருந்தபோது இச்சிற்றாலயக் கட்டிடங்களைக் கட்டுவதற்குப் பெருமளவு உதவியதாகத் தெரிகின்றது. இதற்கு உதவிய இன்னொருவர் சோசுவின் தலைவனாக இருந்த மோரி மோட்டோனாரி. இவர் 1571 இல் ஒன்டென் (சின்டோ ஆலயங்களின் மிகப்புனிதமான பகுதி) கட்டிடத்தை மீளக் கட்டுவித்தார். 1555 இல் சூவே தக்கஃபூசாவுக்கு எதிராக நடத்திய போரின்போது இத்தீவில் சண்டையில் ஈடுபட்டதால் இத்தீவின் நிலங்களை மோட்டோனாரி தூய்மை இழக்கச் செய்ததாக நம்பப்படுகின்றது. இது சின்டோ ஆலயங்கள் நிலைநாட்ட விழையும் புனிதமான தூய்மை என்னும் இறுக்கமான கருத்தமைவுடன் தொடர்புள்ளது. காமக்குரா காலப்பகுதியிலிருந்து இட்சுகுசிமா சிற்றாலயத்தில் தப்பியிருப்பது கியாகுடென் என்னும் ஒரு அமைப்பு மட்டுமே.
 
=== கியோமோரி ===
16 ஆம் நூற்றாண்டில் போர்த் தலைவர்கள் தமது அதிகார பலத்தையும் சிறப்பையும் எடுத்துக் காட்டுவதற்காகக் கோயில்களைக் கட்டுவதும், பிற கட்டிடத் திட்டங்களை முன்னெடுப்பதும் வழக்கம். தைராக்கள், சுங் வம்சத்துடன் கொண்டிருந்த கடல்வழி வணிகத் தொடர்புகளுக்காகவும், உள்நாட்டுக் கடற் பகுதிகளின் வெளிநாட்டு வணிகத்தில் தனியுடமையை நிலைநாட்ட முயன்றது தொடர்பிலும் பெரிதும் அறியப்படுகின்றனர்.
 
[[பகுப்பு: சப்பானிய வழிபாட்டிடங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இட்சுகுசிமா_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது