சர்காசோக் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
 
ஐரோப்பிய விலாங்கு, அமெரிக்க விலாங்கு போன்ற விலாங்கு இனங்கள் முட்டையிடுவதற்காகப் புலம் பெயர்வதில் சர்காசோக் கடலுக்கு ஒரு பங்கு உண்டு. இவை சர்காசோக் கடலில் குஞ்சு பொரிக்கின்றன. குஞ்சுகள் வளர்ந்ததும் அவை ஐரோப்பாவுக்கோ, வட அமெரிக்காவின் கிழக்குக் கரைக்கோ செல்கின்றன. முதிர்ச்சியடைந்த விலாங்குகள் முட்டையிடுவதற்காக மீண்டும் சர்காசோக் கடலை நோக்கி வருகின்றன. முட்டையில் இருந்து வெளிவந்ததும், இளம் பெருந்தலைக் கடலாமைகள் வளைகுடா நீரோட்டம் போன்ற நீரோட்டங்களைப் பயன்படுத்திச் சர்காசோக் கடலுக்குப் பயணம் செய்கின்றன என்றும், கொன்றுண்ணிகளிடம் இருந்து தப்புவதற்காக, முதிச்சி அடையும்வரை கடற்களைகளிடையே மறைந்து வாழ்கின்றன என்றும் நம்புகின்றனர்.
 
2000 ஆவது ஆண்டுத் தொடக்கத்தில், கடலின் நுண்ணுயிர்ப் பல்வகைமை பற்றி மதிப்பீடு செய்வதற்காகச் செய்யப்பட்ட உலகப் பெருங்கடல் மாதிரிமுறை ஆய்வின் ஒரு பகுதியாக சர்காசோக் கடலும் ஒரு மாதிரியாகக் கொள்ளப்பட்டது. முன்னைய கோட்பாடுகளுக்கு மாறாக இக்கடலில் பலவகையான முதல்நிலை உயிரினங்கள் வாழ்வது கண்டறியப்பட்டது.
 
[[பகுப்பு:கடல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சர்காசோக்_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது