சாகசம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
'''சாகசம்''' (''Saahasam'') என்பது [[பெப்ரவரி 5]], 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த [[தமிழ்]] [[திரைப்படம்]] ஆகும். இதில் [[பிரசாந்த்]], அமந்தா ஆகியோர் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.<ref>{{Citation|title=Saahasam (sahasam) Cast & Crew, Saahasam Tamil Movie Cast, Actor, Actress, Director - Filmibeat|url=https://www.filmibeat.com/tamil/movies/saahasam/cast-crew.html|website=FilmiBeat|language=en|accessdate=2018-03-20}}</ref> [[நாசர் (நடிகர்)]], [[தம்பி ராமையா]] ஆகியோர் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை பிரசாந்தின் தந்தையான [[தியாகராஜன்]] தயாரித்துள்ளார். இதற்கு [[இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு]] யு சான்றிதழ் வழங்கியது.
இந்த திரைப்படம் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்கு திரைப்படத்தின் மறு உருவாக்கம் ஆகும். இத்திரைப்படம் விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. படம் வசூலில் தோல்வியுற்றது.<ref>{{Cite web|url=https://www.indiaglitz.com/prashanth-is-back-with-sahasam-tamil-news-104064|title=Prashanth is back with 'Sahasam' - Tamil News|date=2014-02-27|website=IndiaGlitz.com|access-date=2019-11-06}}</ref>
{{Infobox film
| name = சாகசம்
| image =
| caption =
| director = அருண் ராஜ் வர்மா
| producer = தியாகராஜன்
சாந்தினி தியாகராஜன்
பிரசாந்த்
ஹரீஸ் விக்ரம் விஜய் குமார்
| screenplay = தியாகராஜன்
| based on = {{based on|ஜூலை| திரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் }}
| story = திரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ்
| starring = {{plainlist|
*[[பிரசாந்த்]]
*அமந்தா ரொசாரியா
| music = எஸ். தமன்
| cinematography = {{plainlist|
*சாஜி குமார்
*சவுண்ட்ராஜன்
*சக்தி சரவணன்
| editing = சாஸி குமர்
டான் மாக்ஸ்
| studio = தியாகராஜன்|ஸ்டார் மூவிஸ்
தியாகராஜன்|லட்சுமி சாந்தினி மூவிஸ்
| distributor = ஶ்ரீ தேனான்டாள் பிலிம்ஸ்
| released = {{Film date|df=y|2016|02|05}}
| country = இந்தியா
| language = தமிழ்
| runtime =
== கதைச்சுருக்கம் ==
ரவி (பிரசாந்த்) கவலையற்ற இளைஞன். அவர் தனது தந்தையிடம் (நாசர்) இரண்டு மணி நேரத்தில் பத்தாயிரத்தை ஒரு லட்சமாக மாற்ற முடியும் என்று சவால் விடுகிறார். ரவி அனைத்து பணத்தையும் கிரிக்கெட் பந்தயத்தில் முதலீடு செய்ய கிளப்புக்குச் செல்லும் வழியில் மோசமான குற்றவாளியான பிட்டுவை (சோனு சூத்) சந்திக்கிறார். சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் ரவி காவல் துறையிடம் சிக்குகிறார். அதே காவல் துறையினரின் உதவியுடன் 1500 கோடி பணத்தை வங்கியில் இருந்து கொள்ளையடிக்கும் பிட்டுவின் கும்பலை தன் உயிரை பணயம் வைத்து மீட்டெடுத்து உரியவரிடம் ஒப்படைப்பதே படத்தின் கதை
== நடிகர்கள் ==
ரவி நாராயணன் - [[பிரசாந்த்]]
மது - அமண்டா ரொசாரியோ
ரவியின் தந்தை நாராயண மூர்த்தி - [[நாசர் (நடிகர்)|நாசர்]]
ஏ.சி.பி சீதாராமன் - [[தம்பி ராமையா]]
பிட்டு - [[சோனு சூத்]]
சீதாராமனின் மகள் கவிதா - அபீதா
கோத்தண்டபாணி - அபி சரவணன்
சதானந்தம் - எம்.எஸ்.பாஸ்கர்
வரதராஜன் - கோட்டா சீனிவாச ராவ்
கமிஷனர் ராஜமணிக்கம் - ராவ் ரமேஷ்
'டிராவல்' மூர்த்தி - பிரம்மஜி
மதுவின் தந்தை - மதன் பாப்
'செயின்' ஜெய்பால் - ஜான் விஜய்
பார் உரிமையாளர் - ரியாஸ் கான்
ரவியின் தாய் காமேஸ்வரி - துளசி
லலிதா - தேவதர்ஷினி
== தயாரிப்பு ==
[[பிரசாந்த்]] மற்றும் அவரது தந்தை [[தியாகராஜன்]] ஆகியோர் படப்பிடிப்பை நடத்துவதற்கான இடங்களை [[குவைத்]], [[ஆத்திரேலியா]] ஆகிய இடங்களை வணிக பயணங்களின் போது பார்வையிட்டனர்.<ref>{{Cite web|url=http://news.kuwaittimes.net/indian-filmmaker-thiagarajan-looks-shoot-movie-kuwait/|title=Nargis Fakhri to shake a leg in Prashanth's comeback film|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> படத்தின் தலைப்பு இறுதி செய்யப்படுவதற்கு படக்குழு முகநூலில் ரசிகர்களிடம் அஸ்திரம், மோதி பார் உள்ளிட்ட தலைப்புகளுடன் கருத்துக் கணிப்பு நடத்தி ரசிகர்களை பெயரிடுமாறு கேட்டுக்கொண்டது. 2014 ஆம் ஆண்டில் பெப்ரவரியில் இயக்குனராக அருண் ராஜ் வர்மாவும், ஒளிப்பதிவாளராகவும்,  இசை அமைப்பாளராகவும் முறையே சக்தி சரவணன் மற்றும் [[தேவி ஸ்ரீ பிரசாத்|தேவி ஶ்ரீ பிரசாத்]] என்போர் பணியாற்றுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் தேவி ஶ்ரீ பிரசாத்திற்கு பதிலாக [[தமன் (இசையமைப்பாளர்)|தமன்]] இசையமைப்பாளராக பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டில் பிற்பகுதியில் ஒரு இடைவெளிக்குப் பிறகு படக்குழு மீண்டும் பணியைத் தொடங்கியது. நர்கிஸ் பக்ரி பாடலில் தோன்றுவதற்கு கையெழுத்திட்டதாக அறிவிக்கப்பட்டது. <ref>{{Cite web|url=https://www.sify.com/movies/nargis-fakhri-shoots-item-song-for-saahasam-news-bollywood-oh5luiddjgigj.html|title=Nargis Fakhri shoots item song for 'Saahasam'|website=Sify|language=en|access-date=2019-11-06}}</ref>தமனில் இசையமைப்பில் [[மதன் கார்க்கி]] எழுதிய இந்தப் பாடல் 2014 ஆம் ஆண்டு சூலையின் பிற்பகுதியில் சென்னையின் பின்னி மில்ஸில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின் ஒரு பகுதியாக நர்கிஸ் பக்ரி ஹங்கேரியிலிருந்து வந்தார். ராஜூ சுந்தரம் இந்தப் பாடலின் நடன அமைப்பாளராக பணியாற்றினார். படத்தின் கதாநாயகியாக தமன்னா முதலில் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் ஆத்திரேலிய வடிவழகியான அமந்தா ரொசாரியோ படத்தின் தமன்னாவிற்கு பதிலாக முன்னணி நடிகையாக தேர்வு செய்யப்பட்டார்.<ref>{{Cite web|url=https://www.sify.com/movies/australian-girl-for-prashanth-s-saahasam-news-tamil-pekuqLihiidfi.html|title=Australian girl for Prashanth's 'Saahasam'|website=Sify|language=en|access-date=2019-11-06}}</ref> இந்த திரைப்படம் 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும், 2015 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் கோயம்புத்தூர், சென்னை, மலேசியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/actor-prashanth-talks-about-his-film-saagasam.html|title=Actor Prashanth talks about his film Saagasam|date=2016-02-04|website=Behindwoods|access-date=2019-11-06}}</ref> 2016 ஆம் ஆண்டு பெப்ரவரியில் படம் வெளிவருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், வரி சலுகைகளை திரும்பப் பெறுவதற்காக திரைப்படத்தின் தலைப்பு சாகசம் என்ற வீரச்சாயல் என்று மறு பெயரிடப்பட்டது.
== ஒலி வரி ==
"https://ta.wikipedia.org/wiki/சாகசம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது