பிரான்சுவா மன்சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
== வாழ்க்கை ==
இவரது தந்தையார் பாரிசில் தலைமைத் தச்சராகப் பணிபுரிந்தார். இவர் ஒரு கட்டிடக்கலைஞராகப் பயிற்சி பெற்றவர் அல்ல. இவர் ஒரு கற்கொத்தனாராகவும், சிற்பியாகவும் பயிற்சிபெற இவரது உறவினர்கள் உதவினர். நான்காம் என்றியின் ஆட்சிக் காலத்தில் மிகப் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞராக விளங்கிய சலோமோன் டி புரோசு என்பவரின் கலைக்கூடத்திலேயே இவர் கட்டிடக்கலை தொடர்பான திறன்களைப் பெற்றுக்கொண்டதாகக் கருதப்படுகின்றது.
 
1620களில் இருந்து, ஒரு கட்டிடக்கலைஞராக இவரது திறமைக்காகவும், பாணிக்காகவும் இவர் பெரும் புகழ்பெற்று விளங்கினார். ஆனாலும், இவர் ஒரு பிடிவாதக்காரராகவும், கடும் செம்மைவாதியாகவும் மக்கள் இவரைப் பார்த்தனர். தான் விரும்பியபடி அமையாவிட்டால் கட்டிய கட்டிடங்களை இடித்துத் திரும்பவும் கட்டுபவர் எனக் கூறுகின்றனர். மன்சாவைப் பணிக்கமர்த்திக் கட்டிடங்களை அமைப்பது பெரும் செலவு பிடிக்கக்கூடியது என்பதால். பெரும் பணக்காரர்கள் மட்டுமே இவரைக் கொண்டு கட்டிடங்களை அமைப்பிக்கக் கூடியதாக இருந்தது.
 
[[பகுப்பு:கட்டிடக்கலைஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சுவா_மன்சா" இலிருந்து மீள்விக்கப்பட்டது