பாஸ்ரா மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி மேம்படுத்தல் using AWB |
||
வரிசை 1:
'''பாஸ்ரா ஆளுநகரம்''' ( {{Lang-ar|محافظة البصرة}} {{Transl|ar|''Muḥāfaẓa al-Baṣra''}} (அல்லது '''பாஸ்ரா மாகாணம்''') என்பது தெற்கு [[ஈராக்கு|ஈராக்]]கில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் எல்லைகளாக தெற்கில் [[குவைத்]]தும் கிழக்கில் [[ஈரான்|ஈரானும்]] உள்ளன. இந்த மாகாணத்தின் தலைநகராக [[பசுரா]] அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் மாவட்டங்களாக பசுரா மாவட்டம், அல்-குர்னா மாவட்டம், அல்-ஜுபைர் மாவட்டம், அல்-மிதினா மாவட்டம், ஷட் அல்-அரபு மாவட்டம், அபு அல்-காசீப் மாவட்டம் மற்றும் [[பாரசீக வளைகுடா]]வில் அமைந்துள்ள அல்-ஃபா மாவட்டம் போன்றவை ஆகும்.
== வரலாறு ==
1920 ஆம் ஆண்டில், [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்போது]] [[உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசின்]] தோல்விக்குப் பின்னர், [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியமானது]] முன்னாள் உதுமானிய விலேட்களான பாஸ்ரா, பாக்தாத் மற்றும் மொசூல் ஆகியவற்றைக் கைப்பற்றியது, இதைக்கொண்டு ''ஈராக் அரபி'' அல்லது ''[[பபிலோனியா|ஈராக் பாபிலோனியா]]'' என்னும் வரலாற்றுப் பகுதியை ஒன்றாக உருவாக்கி, அதை மெசொப்பொத்தேமியாவின் பிரிட்டிஷ் உரிமைக்கட்டளை என்ற பெயரில் பிரித்தானியரின் பராமரிப்பில் வைக்கப்பட்டது. இதன் பின்னர் 1932 இல் ஈராக் இராச்சியம் உருவாக்கப்பட்டது.
சதாம் ஆட்சி காலத்தில் ஷியா பிரிவு மக்கள் நீண்ட காலமாக கடும் பாதிக்குப்புக்கு உள்ளாயினர். ஈரான் மற்றும் நேச நாட்டு குண்டுவெடிப்புடன் எட்டு ஆண்டுகால போரின்போதும், 1991 இல் [[வளைகுடாப் போர்|வளைகுடாப் போரின்போதும்]], பாஸ்ரா நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் சதாம் அரசுக்கு எதிரான மனக்கசப்பு கொண்ட மக்கள் பெருமளவில் இருந்தனர். அமெரிக்கா அவர்களுக்கு உதவி வழங்குவதாக உறுதியளித்ததையடுத்து, அவர்கள் அரசுக்கு எதிரான புரட்சியில் இறங்கினர். பிரபலமான ஒரு செவிவழிக் கதையின்படி அதிருப்தியில் இருந்த படையினரால் பொது இடத்தில் இருந்த சதாம் உசேனின் மாபெரும் உருவப்படத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பாஸ்ராவில் புரட்சி தொடங்கப்பட்டது.
2003 முதல் [[ஈராக் போர்|ஈராக் போரின்]] போது பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கர்கள் படையெடுத்தபோது இந்த மாகாணமானது போர் மையங்களில் ஒன்றாக இருந்தது. மார்ச் 23 முதல் ஏப்ரல் 7 வரை மேஜர் ஜெனரல் ராபின் பிரிம்ஸின் கீழ் பிரிட்டிஷ் 1 வது கவச பிரிவு படைகளுக்கும், ஜெனரல் அலி ஹசன் அல்-மஜித் (கெமிக்கல் அலி) இன் கீழ் ஈராக் படைகளுக்கும் இடையே பாஸ்ரா போர் நடந்தது.
== அரசு ==
[[படிமம்:Basra.JPG|thumb|269x269px| பாஸ்ரா கவர்னரேட் மாவட்டங்கள்
* ஆளுநர்: ஆசாத் அல் ஈதானி
* துணை ஆளுநர்: முகமது தாஹிர்
* மாகாண சபைத் தலைவர் (பி.சி.சி): சபா அல் பஸூனி
== மாவட்டங்கள் ==
வரிசை 23:
* அல்-குர்னா
* ஷட் அல்-அரபு
* அல் ஜுபைர்
== குறிப்புகள் ==
{{Reflist}}
[[பகுப்பு:ஈராக்கின் மாகாணங்கள்]]
[[பகுப்பு:Coordinates on Wikidata]]
|