அரசியல் கருத்துக்கள்-ரோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎சட்டம்: https://www.iep.utm.edu/stoicism/
சி →‎சட்டம்: சில முன்னோடிகள்
வரிசை 4:
== சட்டம் ==
கிரேக்கர்களுடைய மக்களாட்சி, அரசியல் விடுதலைக் கருத்துக்கள், சிறிது பின்னடைந்தன. ரோமானியர்கள் அரசியலையும், அறநிலையையும் வேறுபடுத்தினர். சமுதாயம் வேறு, நாட்டின் ஆட்சியுரிமை வேறு என்னும் கருத்தும் அவர்களால் உருவாயிற்று. நாட்டினுள் அடங்கிய தனி மனிதர்கள் வேறு, ஆட்சியுரிமை வேறு என்பதும் இவர்களுடைய கருத்தாகத் திகழ்ந்தது. தனி மனிதனின் உரிமைகளைக் காப்பது, அரசரின் கடமையேயன்றி, அவ்வுரிமையில் தலையிடுவது அல்ல என்று அவர்கள் கண்ட முடிவிலிருந்து, ரோமானிய தனிநபர்ச் சட்டம் தோன்றிற்று. சுடோயிக்குகளுடைய<ref>https://www.iep.utm.edu/stoicism/</ref> கருத்தான இயற்கைச் சட்டமும், இவர்கள் கருத்துக்களில் தோன்றிற்று. மனிதர்களிடையே சமத்துவத்தைப்பற்றிய கொள்கையும் ரோமானியர்களால் உருவாக்கப்பட்டது.
 
== அறிஞர் ==
[[சிசெரோ|சிசரோ]] : ரோமானிய அரசியல் அறிஞர்களில், சிசரோ (கி. மு. 106-43) குறிப்பிடத்தக்கவர். இவர் பன்னூல்களைப் பயின்றனவர் ; சட்ட அறிஞர் ; குடியரசு அமைப்புகளை நிலைபெறச் செய்வதில் ஊக்கம் கொண்டவர். [[அரிஸ்டாட்டில் ]] கருதியது போலவே இவரும் மனிதனுடைய சமுதாய இயல்பூக்கமே, ஒரு நாடு அமைவதற்குக் காரணமாயிருக்கிறது என்று கூறினார். நாட்டின் கருத்துக்களை நிறைவேற்றுவதே, அரசாங்கத்தின் அலுவல் என்றார். இயற்கையறிவையும் அற நெறியையும் ஒட்டியே, அரசியல் செயல்களும், சட்டங்களும் அமைய வேண்டும் என்றார். இவர் வற்புறுத்திய உலக ஐக்கியக் கொள்கையும், உலகப் பொதுச்சட்டக் கொள்கையும் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
 
'''பாலிபியசு''': (சு. கி. மு. 205-சு. .122) என்னும் கிரேக்க அறிஞர், இத்தாலியில் வாழ்ந்து வந்தவர். கிரேக்கக் கருத்துக்களாகிய அரசாட்சிப் பாகுபாட்டு முறைகளையும், அரசியல் அமைப்புகள் நிலைத்து இருக்கவேண்டியதன் அவசியத்தையும் இவர் வற்புறுத்தினார். கிரேக்க நாட்டினை, ரோமானியர் வென்று ஆண்டது நியாயம் என்று காட்டுவதே, அவர் இயற்றிய வரலாறு என்னும் நூலின் நோக்கமாக இருந்தது.
 
'''சுடோயிக்குகள்''' : உலகப் பொதுமையுணர்ச்சியே (Cosmopolitanism) ரோமானியர்களால் உருவாக்கப்பட்ட முக்கியமான அரசியல் கருத்தாகும். சுடோயிக்குகளின் கருத்துக்களையும், ரோமானியர்கள் ஏற்றுக்கொண்டு மேலும் வளர்த்தனர். முழுப்பலம் பொருந்திய ஆட்சிக் கோட்பாடுகளும், அரசுத் தலைமைக் கோட்பாடும், சட்டத்தலைமைக் கோட்பாடும் ரோமானியர்களால் உருவாக்கப்பட்ட முக்கியமான அரசியல் கோட்பாடுகளாம்.
"https://ta.wikipedia.org/wiki/அரசியல்_கருத்துக்கள்-ரோம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது