எறிபடையியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎குண்டுகளின் இயக்கம்: வாக்கியமாற்றம்
வரிசை 12:
[[File:Bullet.svg|thumb|வலது|துப்பாக்கி குண்டின் கட்டமைப்பு]]
[[படிமம்:Sc 10 dw.jpg|150px|thumb|வலது|இரண்டாம் உலகப்போரில் பயன்பட்ட, செருமானிய வானூர்தி குண்டின் அமைப்பு<ref>https://www.worldcat.org/title/german-explosive-ordnance-bombs-fuzes-rockets-land-mines-grenades-and-igniters/oclc/713755660</ref>]]
குண்டுகளின் இயக்கத்தினை<ref>https://www.ibuzzle.com/articles/how-does-a-bullet-work.html</ref> ஆராய்வதற்கு அகநிலை எறிபடையியல் என்று பெயர். சுடப்படும் குண்டில் இரண்டு கூறுகள் உள்ளன ஒன்று மருந்து நிறைக்கப்பெற்ற வெடியறை ஆகும். மற்றொன்று, வெளிச் சென்றுவெளிச்சென்று சேதம் விளைவிக்கும், கனத்த குண்டு; பகுதியாகும். குண்டின் பின்பகுதியில் வெடியறை உள்ளது. துப்பாக்கியைச் சுடும்பொழுது, வெடியறையில் இருக்கும் மருந்தில், தீப்பிடிக்கும். எரியும் இம்மருந்திலிருந்து, ஏராளமான ஆவி உண்டாவதாலும், இந்த ஆவி வெளிச் செல்ல முடியாமல், வெடியறையின் உள்ளேயே பெருக முயல்வதாலும், குழாயினுள் அழுத்தம் அதிகரிக்கும். மருந்து எரியும் வேகம், குழாயிலுள்ள அழுத்தத்தைப் பொறுத்திருப்பதால், இவ்வழுத்தம் ஏற ஏற மருந்தும் வேகமாய் எரிந்து, இன்னும் மிகுந்த ஆவியை உண்டாக்கி, அழுத்தத்தை உயர்த்துகிறது.
 
இவ்வாறு வெடிமருந்து எரியும் வேகமும், ஆவியின் அழுத்தமும் ஒன்றையொன்று உயர்த்துவதால், குழாயினுள் அழுத்தம் எல்லை மிஞ்சி வளர முடியும். வெடியறையோடு அடைத்துக் கொண்டும், குண்டின் அடிப்புறத்தை வளைத்துக் கொண்டும், ஒரு செப்புக் காப்புப் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு குறித்த அளவினை விட, [[அழுத்தம்]] அதிகமானவுடன், இச் செப்புக் காப்பின் பிடிப்பு விலகி, குண்டு முன்னே உந்தப்படுகிறது. இந்நிலையிலும் துப்பாக்கியின் குழாயை, இச்சிறு செப்புக் காப்பு அடைத்துக் கொண்டுதான் இருக்கும். துப்பாக்கியினுடைய குழாயின் வெடிவாயிலிருந்து வெளி வாய் வரையிலும், நீள் சுருள் வடிவமான கோடுகள் கடையப்பட்டிருக்கின்றன. குழாயை அடைத்திருக்கும் செப்புக்காப்பு இவ்வரிகளால் கீறப்பட்டு முன்னேறும்போது இவற்றில் சுழலுவதால், குண்டும் சுழலுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/எறிபடையியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது