பீமாசங்கர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 28:
}}
 
'''பீமாசங்கர் கோயில்''' (''Bhimashankar Temple'') என்பது [[மகாராட்டிரம்|மகாராட்டிர மாநிலம்]], [[புனே மாவட்டம்]] சகியாத்ரி மலைப்பகுதியில் டாங்கினி என்ற இடத்தில் உள்ள ஒரு குன்றிமீது அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயிலானது கடங்கடல் மட்டத்தில் இருந்து 3000 அடி உயரத்தில் அடர்ந்த காடுகளிடையே, [[பீமா ஆறு|பீமா ஆற்றங்கரையில்]] உள்ளது. இத்தலம் [[புனே]]க்கு அருகில் உள்ள கெட் என்னும் இடத்திலிருந்து வடமேற்கில் 50 கிமீ தொலைவில் உள்ளது. இது புனேயில் இருந்து 110 கிமீ தொலைவிலும், [[நாசிக்]]கிலிருந்து 120 கிமீ தொலைவிலும் உள்ளது. பீமாஸ்கந்தர் பகுதியிலிருந்தே [[பீமா ஆறு]] உருவாகின்றது. இது தென்கிழக்காகச் சென்று [[ராய்ச்சூர்|ராய்ச்சூருக்கு]] அருகில் [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ணா]] ஆற்றுடன் கலக்கிறது. இது இந்தியாவிலுள்ள 12 [[ஜோதிர்லிங்கம்|ஜோதிர்லிங்கத்]] தலங்களுள் ஒன்றாகும்.
 
இக் கோயில், சிவன் வெல்லமுடியாத பறக்கும் கோட்டைகளான திரிபுரங்களை எரித்த புராணக் கதையுடன் தொடர்புள்ளது. இப்போருக்குப் பின் சிவனின் உடலிலிருந்து சிந்திய வியர்வையாலேயே பீமாராத்தி ஆறு உருவானது என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
 
பீமாசங்கரர் கோயில் புதியனவும் பழையனவுமான கட்டிடங்களின் கலவையாக உள்ளது. இக்கட்டிடங்கள் [[நாகரக் கட்டிடக்கலை]]ப் பாணியில் அமைந்துள்ளன. மிதமான அளவுள்ள இக் கோயில் 18 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் கட்டப்பட்டது. இக் கோயிலின் சிகரம் [[நானா பட்னாவிஸ்]] என்பவரால் கட்டப்பட்டது. புகழ் பெற்ற மராட்டிய மன்னன் [[சிவாஜி (பேரரசர்)|சிவாஜி]]யும் இக் கோயிலுக்கு நன்கொடைகள் அளித்துள்ளார். இப் பகுதியில் உள்ள பிற சிவன் கோயில்களைப் போலவே இதன் [[கருவறை]]யும் கீழ் மட்டத்தில் அமைந்துள்ளது. இக் கோயில் கட்டிடங்கள் ஒப்பீட்டளவில் புதியவையாக இருந்தாலும், பீமாசங்கரம் என்னும் இக் கோயில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த [[இலக்கியம்|இலக்கியங்களில்]] குறிப்பிடப்பட்டுள்ளது.
 
== பெயர்க் காரணம் ==
பீமன் என்ற அரக்கனை அழக்க சிவபெருமான் இங்கே தோன்றி சோதிலிங்கமாக விளங்குவமால் பீமசங்கரம் எனப் பெயர்பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/பீமாசங்கர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது