வின்ஜமுரி அனுசுயா தேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தெலுங்கு பாடகர், ஹார்மோனிய இசைக் கலைஞர், இசை அமைப்பாளர் மற்றும் எழுத்தாளர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Vinjamuri Anasuya Devi" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:18, 6 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்

வின்ஜாமுரி அனசூயா தேவி (மே 12, 1920 - மார்ச் 23, 2019) ஒரு தெலுங்கு பாடகர், ஹார்மோனிய இசைக் கலஞர், இசை அமைப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். [1] [2] [3] நாட்டுப்புற இசை மற்றும் பாடல்களுக்காக இவர் புகழ்பெற்றவர்.

வின்ஜாமுரி அனசூயா தேவி
பிறப்பு(1920-05-12)12 மே 1920
கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், ஆங்கிலேயர் இந்தியா
இறப்பு23 மார்ச்சு 2019(2019-03-23) (அகவை 98)
தேசியம்இந்தியர்
பணிபாடகர், ஆர்மோனிய இசைக் கலைஞர், இசையமைப்பாளர்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி

அவர் இந்திய மேடை நடிகரும், தெலுங்கு-சமஸ்கிருத பண்டிதரும், ஆசிரியருமான வின்ஜாமுரி வெங்கட லட்சுமி நரசிம்ம ராவின் மகள். [2] தெலுங்கு பாடகியான வின்ஜாமுரி சீதா தேவியும் அவரது சகோதரியாவார். [4] சுதந்திரப் போராட்டத்தின் போது மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் முன்னிலையில் அவர் இசை நிகழ்ச்சிகளை வழங்கியிருந்தார். [5]

அவரது இரண்டு புத்தகங்களான 'பாவா கீதலு' மற்றும் 'நாட்டுப்புற பாடல்களின் தொகுப்பு' சென்னையில் வெளியிடப்பட்டது. 1977 ஆம் ஆண்டில் ஆந்திர பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. அமெரிக்காவிலிருந்து வாழ்நாள் சாதனையாளர் விருதும், பாரிஸிலிருந்து நாட்டுபுறக் கலகளின் ராணி விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. [6]

குறிப்புகள்

  1. "Queen of folk music - HYDB". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2018-06-03.
  2. 2.0 2.1 "With many firsts to her credit - MADS". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2018-06-03.
  3. "Space across new horizons - MADS". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2018-06-03.
  4. Srihari, Gudipoodi "An Era of Light Music", The Hindu June 11, 2018
  5. Mayabrahma, Roja (2019-03-24). "KCR condoles death of radio commentator Dr Vinjamuri Anasuya Devi". www.thehansindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-06.
  6. "KCR condoles Anasuya Devi's demise". ANI News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-06.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்ஜமுரி_அனுசுயா_தேவி&oldid=2927663" இலிருந்து மீள்விக்கப்பட்டது