மரைக்காயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added history notes
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''மரைக்காயர்''' (''Maraikkayar'') எனப்படுவோர் [[தென்னிந்தியா]]வில் உள்ள ஒரு [[இசுலாம்|இசுலாமிய]] மக்களின் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் நெய்தல் நிலத்தில் வாழ்ந்த பரதவர்களின் இசிலாமிய பிரிவினர். மரக்கலம்+அரையர் =மரக்கலராயர் இதன் மருவே மரைக்காயர் என்ற பெயர். இதன் பொருள் மரப்படகுகள் செய்பவர். இவர்கள் [[தமிழ்நாடு]], [[கேரளம்|கேரளா]] மற்றும் [[இலங்கை]] ஆகிய பகுதிகளில் வசிக்கின்றனர்.
 
[[முஸ்லிம்]] வணிகர்களான இவர்கள் குறித்த செய்திகள், [[பாண்டியர்]] கால ஆவணங்கள், [[போர்த்துக்கேயர்]], ஒல்லாந்தர், இடானியர், பிரான்சியர் மற்றும் ஆங்கிலேயரின் பதிவேடுகளில் நிறைய காணப்படுகின்றன. மரைக்காயர், நகுதா, மாலுமி, செறாங்கு, சுக்காணி போன்ற பட்டங்களுடன் ஏராளமான முஸ்லிம் வணிகர்களின் பெயர்கள் இப்பதிவேடுகளில் காணக்கிடக்கின்றன. இவர்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடுகளிலெல்லாம் பெரும் செல்வாக்குடன் விளங்கினர். சில வணிகர்கள் தங்களுக்குத் தேவையான கப்பல்களை வெளிநாடுகளிலிருந்து வாங்கும் அளவிற்கு வசதி படைத்தவர்களாக இருந்தனர். 1722-ல் ஆங்கிலேயர் [[அச்சே சுல்தானகம்|அச்சே]] நாட்டில் ஒரு வணிகச் சாவடி ஏற்படுத்தும் பொருட்டு அந்நாட்டு மன்னரிடம் அனுமதி பெற, முகம்மது காசிம் மரைக்காயர் மூலமாகவே அணுகவேண்டி வந்தது. இவர் நாகூரைச் சேர்ந்த ஒரு கப்பல் வணிகர்; மேலும் முகம்மது காசிம் மரைக்காயர் [[பினாங்கு|பினாங்கிலும்]], கெத்தானிலும் அந்நாட்டு மன்னர்களிடமும் பெரும் செல்வாக்கு உடையவராக இருந்தார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.<ref>. Public consultations, 1806 pp. 56-57; Revenue sundries 1793-94 Vol. 18 pp. 1-15; TDCR No. 3349, p.5; No. 3325 p.65.</ref>
"https://ta.wikipedia.org/wiki/மரைக்காயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது