விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 479:
 
:அரசு ஆவணங்களில் இருந்தால் அதை பதிவேற்றவும். பெரிய அளவிலான மாற்றங்களை செய்வதற்கு அதனை சான்றாகவும் காண்பிக்கலாம் அல்லவா? [[User:ஞா. ஸ்ரீதர்|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:ஞா. ஸ்ரீதர்|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 03:30, 13 மார்ச் 2020 (UTC)
 
== இலங்கையில் புதுப்பயனர் போட்டி ==
 
தமிழ் விக்கிப்பீடியா பதினாறாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களுக்காகப் பெற்றுக்கொண்ட நல்கைத் தொகையில் இலங்கை ரூபா நான்கு இலட்சம் (ரூ. 403,874) மீதம் உள்ளது. இந்தத் தொகையைப் பயன்படுத்தி இந்த ஆண்டு இலங்கையில் ஒரு புதுப்பயனர் போட்டியை நடாத்த முன்மொழிகிறேன். இது கடந்தமுறை நடைபெற்ற புதுப்பயனர் போட்டியிலிருந்து சற்று வேறுபட்டதாக வடிவமைக்க எண்ணுகிறேன். பரிசுத்தொகையை இலங்கைக்கு வெளியே அனுப்ப முடியாது என்பதால், போட்டி இலங்கையர்களுக்கு மட்டுமானதாக அமையும். போட்டியின் படிமுறைகள் பின்வருமாறு அமையும்:
 
1) மாணவர்களுக்கான புதுப்பயனர் போட்டி
 
2) திறந்த புதுப்பயனர் போட்டி
 
போட்டிக் காலம்: 2020 செப்டெம்பர் 1 முதல் நவம்பர் 30. ஆண்டு இறுதிக்கு முன்னர் வெற்றிபெற்றோர் அறிவிக்கப்பட்டுப் பரிசுகள் வழங்கப்படும்.
 
இலங்கையில் வெளிவரும் பிரதான பத்திரிகைகளில் போட்டி பற்றிய அறிவித்தல் வெளியிடப்படும்.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர் கூகிள் படிவம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களின் எண்ணிக்கை அடிப்படையில் விக்கிப்பீடியாவில் பங்களித்தல் குறித்த அறிமுக நிகழ்வுகள் நடாத்தப்படும். அறிமுக நிகழ்வில் பங்கேற்க முடியாத தூரங்களில் உள்ளவர்களுக்குத் தொலைபேசி மூலம் அறிமுகம் இடம்பெறும்.
பின்னர் போட்டி ஆரம்பிக்கப்படும்.
 
இதன் மூலம், முறையற்ற கட்டுரைகள் உருவாக்கப்படுதல் குறைவாக இருப்பதுடன் நீண்டகாலப் பயனர்களை அடைய உதவியாகவும் இருக்கும். இந்த முன்மொழிவை தமிழ் விக்கிச் சமூகம் ஏற்றுக்கொண்டால் விக்கிமீடியா அறக்கட்டளையிடம் தெரிவித்து அனுமதி பெற்றுப் போட்டிக்கான தயார்ப்படுத்தல்களைத் தொடங்கலாம்.
 
மாறாக, இந்தத் தொகையை இலங்கைக்குள் வேறு ஏதாவது வகையில் பயன்படுத்துவது அதிக பயனைத் தரும் என்று கருதினால் அதற்கான முன்மொழிவுகளையும் வழங்கவும்.
 
குறிப்பு: கொரோனா தீநுண்மித் தாக்கம் தொடர்பான அவசரநிலை நீங்கிய பின்னரே வேலைகளை ஆரம்பிக்க முடியும். சமூக ஒப்புதல் கிடைத்தால் விக்கிமீடியா அறக்கட்டளைக்கு வரைபை முன்மொழியலாம். --[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 15:02, 15 மார்ச் 2020 (UTC)