துடுப்பாட்ட உலகக்கிண்ண வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
வரிசை 25:
ஆத்திரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து ஏற்று நடத்திய '''[[1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில்]]''' வண்ணச் சீருடைகள், வெள்ளைப் பந்து, பகல்/இரவு ஆட்டங்கள், களத்தடுப்பில் சில புதியக் கட்டுப்பாடுகள் என பல புதுமைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பன்னாட்டு விளையாட்டுப் புறக்கணிப்பு நீக்கலை அடுத்து தென்னாபிரிக்கா பங்கெடுத்த முதல் உலகக்கிண்ணமாக இது அமைந்திருந்தது. துவக்கத்தில் மோசமாக ஆடிய பாக்கிஸ்தான் இறுதி ஆட்டம் வரை முன்னேறி இங்கிலாந்து அணியை 22 ஓட்டங்களில் தோற்கடித்து வெற்றிவாகைச் சூடியது.<ref>{{Cite web|url=http://www.nobok.co.uk/page/CricketWorldCupDetail/0,,10301~789902,00.html|work=nobok.co.uk|title= 1992: The 'cornered Tiger' bites back|accessdate=2006-09-01}}</ref>
 
'''[[1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1996 உலகக்கோப்பைப் போட்டிகள்]]''' இரண்டாம் முறையாக மீண்டும் [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தில்]] நடத்தப்பட்டது; இம்முறை இலங்கையும் சில முதற்கட்ட பிரிவு ஆட்டங்களை ஏற்றுக் கொண்டது. இது துடுப்பாட்ட விளையாட்டரங்கில் நிகழ்ந்த சில விரும்பத்தகாத அரசியலின் பின்னணியில் நடந்தது. 1995/96 ஆண்டில் இலங்கையின் ஆத்திரேலிய ஆட்டப்பயணத்தினூடே மெல்பேர்ண் ஆட்டரங்கில் தேர்வுத் துடுப்பாட்டத்தில் [[நடுவர் (துடுப்பாட்டம்)|நடுவர்]] டர்ரெல் ஹைர் [[புறத்திருப்பம்|புறச்சுழல்]] [[பந்து வீச்சாளர்]] [[முத்தையா முரளிதரன்|முத்தையா முரளிதரனின்]] வீசுச்செயலை ஐயுற்று "நோ பால்" (கணக்கெடுக்கவியலா பந்து) என அறிவித்தது சர்ச்சைகளுக்கு வித்திட்டது. பயணத்தின் இறுதி நிகழ்வாக சிட்னியில் நடந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் ஆத்திரேலிய பந்து வீச்சாளர் [[கிளென் மெக்ரா]]விற்கும் இலங்கையின் [[சனத் ஜயசூரிய]]விற்கும் இடையே கைகலப்பு மூண்டது. ஆட்டத்தின் முடிவில் இலங்கை அணியினர் எதிரணியுடன் கை குலுக்கவும் மறுத்தனர். இதனைத் தொடர்ந்து சில ஆத்திரேலிய துடுப்பாட்டக்காரர்களுக்கு கொலைமிரட்டல் வந்ததாலும் கொழும்புவில்கொழும்பில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தாலும் ஆத்திரேலிய அணி இலங்கையில் ஆட மறுத்தது. மேற்கிந்தியத் தீவுகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆட மறுத்தது. இந்த இரு அணிகளும் தங்கள் ஆட்டத்தை இழந்தனர். மிகுந்த வற்புறுத்தலின் பின்னர் கென்யாவும் சிம்பாப்வேயும் இலங்கையில் தங்கள் ஆட்டங்களில் பங்கெடுக்க சம்மதித்தனர். ஆத்திரேலியாவின் இந்த புறக்கணிப்பை துணைக்கண்டத்து துடுப்பாட்ட அலுவலர்கள் கண்டித்தனர்; இந்தியாவின் முன்னாள் அணித்தலைவர் கபில் தேவ் ஆத்திரேலியாவின் வெளியேற்றத்தை வலியுறுத்தினார்.
துணைக் கண்டத்து ஆட்டக்களங்களின் தேய்க்கும் தன்மையால் துவக்க ஓவர்களில் மட்டையாளர்களுக்கு சாதகமாக இருந்த பந்து பிந்தைய ஓவர்களில் மென்மையாகி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவி புரிந்தது. துவக்க ஆட்டக்காரராக விளங்கிய [[மார்க் வா]] ஒரே போட்டியில் மூன்று சதங்களை அடித்த சாதனையை நிகழ்த்தினார்.
 
"https://ta.wikipedia.org/wiki/துடுப்பாட்ட_உலகக்கிண்ண_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது