இன்சுலினோமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"இன்சுலினோமா ( ) என்பது கணை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:40, 3 மே 2020 இல் நிலவும் திருத்தம்

இன்சுலினோமா ( ) என்பது கணையத்தில் தோன்றும் புற்று நோயாகும்.கணையத்தில் அதிக அளவு இன்சுலின் சுரக்கிறது.இரத்தத்தில் அதிக அளவு குளுகோசு உள்ள நிலையில் அதனை சரிசெய்ய அதிக அளவு இன்சுலின் சுரக்ககிறது.

காரணம்;வயிற்றுப்பகுதில் கமைந்துள்ள கணையத்தில் பல நொதிகளும் ஆர்மோன்களும் சுரக்கின்றன. அதில் இன்சுலினும் ஒன்று.பல நேரங்களில் இரத்தச் சர்கரை அளவு குறையும் போது இன்சுலின் அளவும் குறைகிறது.இதனால் இரத்தச் சர்க்கரை அளவு சாதாரண நிலைக்கு வந்து விடுகிறது.கணயப்புற்று அதிக அளவில் இன்சுலினைச் சுரக்கும் போது அது இன்சுலினோமா எனப்படுகிறது.இரத்தச் சக்கரை அளவு குறைந்தாலும் இந்த புற்றுக் கட்டிகள் இன்சுலினை தொடர்ந்து சுரந்து கொண்டிருக்கிறது.இதனால் சர்க்கரையின் அளவு குறைந்து விடுகிறது.

கணையத்திலுள்ள பீட்டசெல்களில் கணையப்பற்று தோன்றுகிறது.இச்செல்களே இன்சுலினை சுரக்கின்றன.

அறிகுறிகள்; படபடப்பும் பசியும் அதிகரித்துக் காணப்படும்.வலிப்பு நோய் தோன்றக்கூடும்.நடவடிக்கைகளில் மாற்றம்,மங்கிய பார்வை,குழப்பமான மனநிலை,தலைவலி,விரைந்த இதயத்துடிப்பு,அதிகரித்த வியர்வை,கைகால் நடுக்கம் ,எடை கூடுதல்

நோய் முற்றிய நிலையில் மயக்கமும் இறப்பும் கூட நிகழலாம்.லங்கர்கான்சு திட்டுகளே ( ) பீட்டா செல்கள் எனப்படுகின்றன.

பிச்சூட்டரி மற்றும் பராதைராய்டு புற்றுடன் 5% இன்சுலினோமா தொடர்புடையதாக உள்ளது.2 செ.மீ.ரைவிடவும் குறைந்த அளவிலேயே உள்ளது.


மருத்துவம்.; அறுவை மருத்துவமே முதல் நிலை மருத்துவமாக உள்ளது,85% கணையம் வரை அகற்றப்படலாம்.சர்க்கரை நோய்க்கு மருந்துகள் உள்ளன.

அரிதாகவே தோன்றுகிறது.வெகு அரிதாகவே குழந்தைகளிடம் காணப்படுகிறது.

90% இன்சுலினோமாபுற்றுநோயாக இருப்பதிலை.அவை சாதாரண கட்டியாகவே உள்ளன

அறிதல்;இரத்தச் சர்க்கரைஅளவினை கணித்தல்,இன்சுலின் நிலையினை காணுதல்,சி.ற்றி,எம் ஆர் ஐ. ,பெட் ஸ்கேன். மீயொலி ஆய்வுகள் உதவும்.


மருத்துவ கலைக்களஞ்சியம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்சுலினோமா&oldid=2964257" இலிருந்து மீள்விக்கப்பட்டது