வாருங்கள்!

வாருங்கள், Arunthanumalayan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சண்முகம்ப7 (பேச்சு) 16:00, 28 திசம்பர் 2012 (UTC)Reply

வணக்கம், நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் உள்ள கலைச்சொற்களுக்கு அதற்கு இணையான ஆங்கிலச் சொற்களையும் அடைப்புக்குறிக்குள் தந்தால் ஏனைய பயனர்கள் அக்கட்டுரைகளை மேம்படுத்த உதவும். உ+ம்: சுழல் கதிர் மருத்துவம், கதிர் ஏற்பளவு. மேலும், கட்டுரைத் தலைப்புகளில் நிறுத்தற்புள்ளிகள் இடுவதில்லை.--Kanags \உரையாடுக 20:14, 21 சனவரி 2013 (UTC)Reply

எக்சு-கதிர்க் குழாய்

தொகு

வணக்கம், நீங்கள் எழுதிய எக்சு கதிர்குழாயில்.... என்ற கட்டுரை கலைக்களஞ்சிய நடையில் இல்லை. முதலில் எக்ஸ் கதிர்க் குழாய் என்றால் என்ன என்பதை சில வரிகளில் தாருங்கள். பின்னர் அதைப்பற்றி மேலும் விபரிக்கலாம். உதாரணத்திற்கு en:X-ray tube கட்டுரையைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 08:04, 24 சனவரி 2013 (UTC)Reply

பதக்கம்

தொகு
  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
  விருப்பம் உங்கள் பங்களிப்புகள் அருமை! நல்ல தமிழில் பிழையின்றி எழுதியிருப்பது கண்டு மகிழ்கிறேன். தொடர்ந்து சிறப்புற பங்களிக்க வேண்டுகிறேன். உதவி தேவையென்றால் இங்கேயோ என் பேச்சுப் பக்கத்திலோ கேட்கலாம். வாழ்த்துக்கள் :) தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:08, 30 சனவரி 2013 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

முதல் கட்டுரைக்கு நன்றி

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், Arunthanumalayan!

 
உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--இரவி (பேச்சு) 08:36, 2 பெப்ரவரி 2013 (UTC)

எனது முதல் கட்டுரை பற்றி சிலரது எண்ணங்களைத் தெரிந்து கொள்ள முடிந்த்து.அவர்களுக்கு எனது நன்றி. என்னை ஊக்கும் விதத்தில் கருத்துத் தெரிவித்த அன்பர்களுக்கு மேலும் நன்றி - அருண்தாணுமாலயன்.

நன்றிக்கு நன்றி :) --இரவி (பேச்சு) 11:01, 3 பெப்ரவரி 2013 (UTC)

நன்றி அறிவிப்பு

தொகு
  • தங்கள் நன்றி அறிவிப்பை தங்களுக்கான உரையாடல் பக்கத்திலோ அல்லது தங்களுக்கு வாழ்த்து தெரிவித்த பயனர்களுக்கான உரையாடல் பக்கத்திலோ தெரிவிக்கவும். தனிப்பக்கத்தில் நன்றி தெரிவித்தால் அது தனிக்கட்டுரையாக உருவாக்கப்பட்டுவிடும். அந்தக் கட்டுரையிலுள்ள தங்கள் நன்றி செய்தி நீக்கத்துக்கு உள்ளாகலாம். தாங்கள் புதிதாக உருவாக்கிய நன்றி!நன்றி! நீக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பங்களிப்பு செய்திட என் இனிய வாழ்த்துகள்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:21, 2 பெப்ரவரி 2013 (UTC)

சிவத்தல்

தொகு

சிவத்த்ல் தவறு. சிவத்தல் சரி.--Kanags \உரையாடுக 20:11, 10 பெப்ரவரி 2013 (UTC)

கட்டுரைகள்

தொகு

வணக்கம், பயனுள்ள கட்டுரைகளைத் தொகுப்பது கண்டு மகிழ்ச்சி. கட்டுரைகளைத் தொகுக்கும்போது, இயலுமான வரை பிற (ஆங்கில) விக்கியிணைப்புகளைக் கொடுங்கள். அது பிற பயனர்கள் மேலும் விரிவாக்க உதவும். (எ.கா: எக்சு-கதிர்க் குழாய் -> X-ray tube) மிகவும் சிறு கட்டுரையாக இருந்து நீக்கப்படுவதையும் இதன் மூலம் தவிக்கலாம். விக்கியிணைப்புகள் இல்லாவிட்டால், முடியுமானவரை உசாத்துணையினைச் சேருங்கள். மேலும், கட்டுரையின் சிறு பிரிவுகளுக்கு தனிக் கட்டுரை உருவாக்குவதற்குப் பதிலாக பிரதான கட்டுரையினை உருவாக்குவது பயனுள்ளதாக இருக்கும் (எ.கா: புற்று கூற்றளவு என்பதற்குப் பதில் Radiation therapy என்பதற்கான கட்டுரையினை உருவாக்கி, புற்று கூற்றளவவினைச் சேர்ப்பது சிறப்பாக இருக்குமென நம்புகிறேன்). நன்றி. --Anton (பேச்சு) 08:03, 12 பெப்ரவரி 2013 (UTC)

பேரன்புடையீர், வணக்கம்.தங்களின் கருத்துகள் நன்றியுடன் ஏற்கப்படுகின்றன.நான் எக்சு கதிர் குழாய் பற்றி எழுத நினைப்பது , மற்ற இருக்கும் கட்டுரையில் இல்லை என்றாலும் அந்த கட்டுரையில் இணைப்பது சரியாக இருக்காது என நினைக்கிறேன்.கதிரியல் தொழில் நுட்பனர் (technologist ) மாணவர்களுக்கானது. குழாயின் ஒவ்வொரு பகுதியினையும் வரிவாக விளக்கும்.பின்பு சேர்கலாம். பயனர் தகவல் என்னால் இணைக்க முடியவில்லை படங்களை இணைப்பது பற்றியும் தெரியவில்லை. தொளிவாக விளக்க வேண்டுகின்றேன். அன்புடன், அருண்தாணுமாலயன்.

படிமம் பயிற்சி--Anton (பேச்சு) 04:51, 21 மார்ச் 2013 (UTC)

ஒத்த பெயரில் இன்னொரு கணக்கு

தொகு

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/LArunthanumalayan - இந்தப் பங்களிப்புகளும் உங்களுடையது தானா?--இரவி (பேச்சு) 12:28, 25 பெப்ரவரி 2013 (UTC) அன்புடையீர், வணக்கம். என்னுடையதே. எல் எப்படி வந்த்து. தெரியவில்லை. அன்புடன், அருண்தாணுமாலயன்.

குமிழ் அறை

தொகு

வணக்கம். குமிழறை கட்டுரையைப் பாருங்கள். ஆங்கில விக்கியிலுள்ள கட்டுரையிலிருந்து படம் சேர்த்துள்ளேன். அது உங்கள் கட்டுரைக்குப் பொருந்துமா எனப் பார்க்கவும். பொருந்தாது என்றால் நீக்கிவிடலாம். பொருந்தும் என்றால் மேலும் சில விபரங்களைச் சேர்க்கலாம். ஒரு கட்டுரை குறுங்கட்டுரையாகவாவது இருக்க, குறைந்தது மூன்று வரிகள் இருக்க வேண்டும் என்பதையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். --Booradleyp (பேச்சு) 16:53, 13 மார்ச் 2013 (UTC) நன்றி ;அருண்தாணுமாலயன் படங்களைச் சேர்க்கவோ நீக்கவோ தெரிய வில்லை.உதவுங்களேன்.

எடுத்துக்காட்டாக ஒரு கட்டுரையைக் குறிப்பிட்டுச் சொன்னீர்கள் என்றால் நான் உங்களுக்கு படம் சேர்ப்பது (நீக்குவது) எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை விளக்க முடியும்.--Booradleyp (பேச்சு) 15:40, 21 மார்ச் 2013 (UTC)

சம(கன) அளவு ஈயம். இக்கட்டுரையில் இரு வெவ்வேறு கனளவுள்ள பெட்டிகள்,ஒரே அளவு படுகதிரும் விடு கதிரும் காட்டப்பட வேண்டும். பெய்ன்ட் பக்கத்திலிருந்து எப்படி தொடங்குவது?

சற்று விளக்கமாகக் குறிப்பிட முடியுமா? இங்கு அட்டவணையா அல்லது வரைபடமா தேவை? --Anton (பேச்சு) 05:01, 10 ஏப்ரல் 2013 (UTC)

படங்கள் சேர்க்க, நீக்க

தொகு

வணக்கம் ஐயா. கட்டுரை தொடர்பான படங்களை சேர்க்க

தாங்கள் பெயின்ட் இல் வரைந்த படத்தை "save as" தெரிவு மூலம் முதலில் உங்கள் கணினியில் சேமியுங்கள். விக்கியில் பதிவேற்ற இப்பக்கத்தில் இடப்பக்கம் கருவிப் பெட்டியில் “கோப்பைப் பதிவேற்று” என்றொரு இணைப்பு உள்ளது. அதில் choose file என்பதனை சொடுக்கி தாங்கள் கணினியில் சேமித்த படத்தை இணையுங்கள். பின்னர் அப்பக்கத்தின் கீழுள்ள அணுமதிகளுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து கோப்பைப் பதிவேற்று எனற பொத்தானை அழுத்தினால் தங்கள் படம் சேமிக்கப்பட்டுவிடும். நீங்கள் படத்தை எப்பெயரில் சேமித்தீர்களோ அப்பெயரிலே இருக்கும். அதனை தகுந்த கட்டுரைகளில் இணைத்து விடலாம். அதன் மூலம் பதிவேற்றலாம்.

பிற படங்களைப் பதிவேற்றுவதும் இவ்வாறே செய்யலாம். (படங்கள் உங்கள் சொந்த ஆக்கமாக இருக்க வேண்டும். பிற தளங்களில் வெளியான படங்களை உரிய அனுமதியின்றி இங்கு மறு பயன்பாடு செய்ய இயலாது.)

கட்டுரைகளில் படகங்களை இணைக்க

தொகு

எடுத்துக்காட்டாக:

தங்களின் படம்- File:Water above the Hogenakkal falls.jpg என வைத்துக்கொள்வோம்.

 
காவேரி

[[File:Water above the Hogenakkal falls.jpg|right|thumb|250px|காவேரி]] என்ற நிரல் துண்டை கட்டுரையில் இடுங்கள் இவ்வாறு செய்தால் வலப்புறம் தெரியும் படம் இணையும்.

இந்த நிரல் துண்டில் "Water above the Hogenakkal falls" என்பது இணைக்கும் படிமத்தின் பெயர்;

right என்பது படம் வலப்புறம் அமைய வேண்டும் என்பதைக் குறிக்கிறது. left என மாற்றினால் கட்டுரை இடப்பக்கம் அமையும்.

250px என்பது படத்தின் அளவைக் குறிக்கிறது.

" ஒகேனக்கல் அருவி" என்பது படத்தின் கீழ் இடப்படும் குறிப்பு.

விக்கிப்பீடியா:படிமம் பயிற்சி என்ற பக்கத்தில் விவரமான செய்முறை விளக்கம் உள்ளது.

இங்கு உள்ள படிமுறை விளக்கத்தின் மூலம் செய்ய முயலுங்கள்.

படத்தைப் பதிவேற்றிவிட்டு முயற்சி செய்து பாருங்கள். சிக்கல் ஏற்படின் நான் உதவுகிறேன்.

படத்தை நீக்க

தொகு

படிமத்தின் உரையாடல் பக்கத்தில் நீக்கக் கோரினால் நிர்வாகிகள் அதனை நீக்கிவிடுவர்கள்

உங்கள் பக்கம்

தொகு

பொதுவாக ஒரு பயனர் பக்கத்தை பிற பயனர்கள் மாற்றுவது தவறு. ஆனால் நான் உங்கள் பயனர் பக்க அமைப்பைக் கொஞ்சம் மாற்றியிருக்கிறேன். உங்களுக்கு அதில் விருப்பமில்லையென்றால் மன்னிக்கவும். மீண்டும் பழைய நிலைக்கு மாற்றிவிடலாம். --Booradleyp (பேச்சு) 16:00, 21 மார்ச் 2013 (UTC)

அனபுனையீர், நன்றி.படமே இல்லாதிருப்பதற்கு இப்படமேனும் இருப்பது நல்லதுதானே.

அறிவியல் துறை கட்டுரைகள்

தொகு

வணக்கம், Arunthanumalayan!

 

தமிழ் விக்கிப்பீடியாவில் அறிவியல் தமிழ் கட்டுரைகள் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அறிவியலைத் தமிழுக்கும், தமிழ் பேசுவோருக்கு அறிவியலையும் எடுத்துச்செல்வதில் உங்கள் பங்களிப்பு உதவியாக அமையும். கலைச்சொற்கள் உதவி தேவைப்படின் கலைச்சொல் ஒத்தாசை பக்கத்தில் கேளுங்கள். தமிழ் உசாத்துணைகள் உதவி தேவை எனின் :உசாத்துணைப் பக்கத்தில் கேக்கவும். உங்களுக்கு ஈடுபாடு இருக்கக் கூடிய மேலதிக இணைப்புகள்:

நீங்கள் மிகச் சிறப்பாக கதிர் மருத்துவம் மற்றும் பிற அறிவியல் துறைகளில் கட்டுரைகள் உருவாக்கி வருகிறீர்கள். நன்றிகள். --Natkeeran (பேச்சு) 16:33, 7 ஏப்ரல் 2013 (UTC) அன்புடையீர், என்னை ஊக்கப்படுத்தும் உங்களுக்கு மிக்க நன்றி. அன்பன்,அருண்தாணுமாலயன்

  விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:57, 8 ஏப்ரல் 2013 (UTC)

பகுப்புகள் சேர்த்தல்

தொகு

வணக்கம் அருண்! நீங்கள் அறிவியல் தொடர்பான பல கட்டுரைகளை எழுதி வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சியடைகிறேன். கட்டுரையின் இறுதியில் பகுப்புகள் சேர்ப்பது அவசியம். பகுப்பு சேர்த்தால்தான் ஒவ்வொரு கட்டுரையையும் அதோடு தொடர்புடையவற்றுடன் இணைக்க முடியும். பகுப்பு என்பது ஒரு தலைப்பை எப்படி பிரிக்கலாம். என்பதே. உதாரணமாக, [.[பகுப்பு:கதிர் மருத்துவம்]] என்று சேர்த்தால் அந்த கட்டுரையை கதிர் மருத்துவம் தொடர்பானது என்று புரிந்து கொள்ள முடியும். விரைவாக ப்குப்புகளைச் சேர்க்க, விரைவுப்பகுப்பி என்ற கருவி உதவும். அதை எப்படி செயல்படுத்துவது என்பது இந்த நீல இணைப்பில் சென்று பார்த்தால் தெரியும். அதை இயக்கிக் கொண்டால், பக்கத்தின் இறுதியில்

 Category (+) :

என்று தெரியும். சந்தேகம் இருந்தால் கேளுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:16, 26 ஏப்ரல் 2013 (UTC) ஐயா, வணக்கம். சில நேரங்களில் தவறிவிடுகிறேன்.இந்த தவறு இனி நடவாது பார்த்துக் கொள்கிறேன். அன்புடன், அருண்தாணுமாலயன்.

வேண்டுகோள்

தொகு

உங்களுக்கு இங்கு செய்தி ஒன்றுள்ளது. கவனிக்கவும்.--Kanags \உரையாடுக 13:42, 17 மே 2013 (UTC)Reply

வெப்பக் கொண்மை (Heat capacity) என்ற தலைப்பில் உள்ளது. நீங்கள் பதிவேற்றியதை மோலார் வெப்பம் சரிபார்த்து அழித்துவிடுங்கள்.--Muthuppandy pandian (பேச்சு) 12:58, 18 நவம்பர் 2014 (UTC)Reply

சென்னை விக்கியர் சந்திப்பு

தொகு

அன்புடையீர், மே 26 இல் அடுத்த சென்னை விக்கியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இம்முறை வழக்கமான புதியவர்களுக்கான அறிமுகங்கள் தவிர அனுபவமுள்ளவர்களுக்கான வேறு சில வழங்கல்களும் நடைபெறுகின்றன. அவசியம் கலந்து கொள்ள அழைக்கிறேன். தாமதமாக அழைப்பதாக தவறாகக் கொள்ள வேண்டாம். பெரும்பாலும், சென்னையில் வசிப்பவர்களுக்கு அழைப்புகள் அனுப்பியிருக்கிறோம். நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. பொறுத்தருளவும். தங்கள் பெயரை மேற்குறிப்பிட்ட பக்கத்தில் பதியவும். நன்றி! --தமிழ்க்குரிசில்உரையாடுக 07:30, 22 மே 2013 (UTC)Reply

மிக்க நன்றி...!

தொகு

  கொளுத்தும் கோடை வெயிலிலும்... ஆர்வத்துடன் இன்றைய சந்திப்பில் கலந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றிகள்!

  • என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்... செய்யத் தயாராக உள்ளோம். முடிந்தால், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் விக்கி பற்றி சொல்லவும். அவர்களை எங்களுடன் கோர்த்துவிடுங்கள்; நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:48, 26 மே 2013 (UTC)Reply
  விருப்பம் தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:23, 26 மே 2013 (UTC)Reply

பேரன்புடையீர், வணக்கம். உங்கள் உதவியை நாடி தேவைப்படும் போது கட்டாயம் அணுகுவேன்.நேற்றைய சந்திப்பு மிக்கப் பயனுடையதாக அமைந்தது. அன்புடன்,

அருண்தாணுமாலயன்.

பேரன்புடையீர்,

கியூர் மருத்துவம் பற்றிய சிறுகுறிப்பு ,'கியூர் திரப்பி' என்கிற கலைச்சொல்லை அறிமுகப் படுத்தவே எழுதப்பட்டது. அந்த கலைச்சொல் தமிழில் தேவை இல்லை என்று கருதினால் அருள்கூர்ந்து அகற்றி விடவும்.

அருண்தாணுமாலயன்.

அண்மை சிகிச்சை கட்டுரையில் இதன் தகவல்களைச் சேருங்கள். இரண்டும் ஒன்றையே சொல்லுகின்றன. உங்கள் கட்டுரையின் படி கியூரி மருத்துவம் என்பது கதிர் மருத்துவம், உள்கியூரி மருத்துவம் என்பது அண்மை சிகிச்சை. இவ்வாறு கலைச்சொற்கள் அனைத்துக்கும் தனிக்கட்டுரைகள் தேவையில்லை. தேவையற்ற குழப்பத்தையே தரும். முதன்மைக் கட்டுரையில் அவ்வவற்றுக்கான வேவேறு கலைச்சொற்களையும் குறிப்பிடலாம்.--Kanags \உரையாடுக 07:42, 31 மே 2013 (UTC)Reply

அண்மை சிகிச்சை

தொகு

அண்மை சிகிச்சை பற்றிய கட்டுரையை மேம்படுத்தி உதவுங்கள். அங்குள்ள சிவப்பு இணைப்புகளுக்கு முடிந்தால் கட்டுரைகளை உருவாக்குங்கள். சில சிவப்பு இணைப்புகளுக்கு ஏற்கனவே கட்டுரைகள் வேறு பெயர்களில் உருவாக்கியிருப்பீர்கள். அவற்றை இனங்கண்டு கட்டுரையில் சேருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 02:52, 1 சூன் 2013 (UTC)Reply

அன்புடையீர்,

வழிகாட்டலுக்கு நன்றி.

அருண்தாணுமாலயன்

வணக்கம். உங்கள் கருத்தை எழுதிவிட்டு உங்கள் கையொப்பமிட மேலே உள்ள நீலப்பட்டையில் மூன்றாவதாகவுள்ள எழுதுகோல் முனை போல உள்ளதைச் சொடுக்கியபின் சேமித்தால் பிற பயனர்களிடுவது போல உங்கள் கையொப்பமும் தோன்றும். முயற்சிக்கவும். --Booradleyp1 (பேச்சு) 05:35, 4 சூன் 2013 (UTC)Reply

பரப்பு விரிவுக் குணகம்

தொகு
பேச்சு:பரப்பு விரிவுக் குணகம் பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 05:30, 4 சூன் 2013 (UTC)Reply

வேண்டுகோள்

தொகு

பேச்சு:எக்சு-கதிர்க் குழாய் பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 16:40, 4 சூன் 2013 (UTC)Reply

வணக்கம். நீங்கள் உருவாக்கிய பிரிக்கே கதிர் ஏற்பளவுமானி கட்டுரையை விக்கியாக்கம் செய்திருக்கிறேன். அப்போது ஏதாவது கருத்துப்பிழைகளை நான் ஏற்படுத்தி விடவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, தயவுசெய்து கட்டுரையை மீண்டுமொரு முறை பார்த்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி--Booradleyp1 (பேச்சு) 06:37, 5 சூன் 2013 (UTC).Reply

பேரன்புடையீர்,

கட்டுரையினை மேம்படு செய்தமைக்கு நன்றி.

அன்புடன்,

அருண்தாணுமாலயன்

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:58, 27 சூன் 2013 (UTC)Reply

பேரன்புடையீர்,

விக்கிபீடியர் கூடல் நிகழ்வில் கலந்துகொள்ள ஆர்வம உள்ளவனாக இருக்கிறேன். சென்னையில் இருப்பதால் ,நடைபெற உள்ள இடமும் நாளும் தெரிந்தால் நலம். செப்டம்பரில் இந்திய மருத்துவ இயற்பியலாளர் சங்க மாநாடும் நடக்க இருப்பதால் தியதியைப் பொறுத்து முடிவு செய்ய வேண்டியதாக உள்ளது.தகவ்லுக்கு மிக்க நன்றி.

அன்புடன்,

அருண்தாணுமாலயன்.

வேண்டுகோள்

தொகு

பேச்சு:தல்லாகுளம் பார்த்து சந்தேகத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்.--Booradleyp1 (பேச்சு) 07:47, 1 சூலை 2013 (UTC)Reply

அன்புடையீர்,

தமிழக அரசு வெளியீட்டிலிருந்து எழுதப்பட்டது.குமரிமாவட்டத்திலேயே இருவேறு இடங்கள் இப்பெயரில் உள்ளன.ஒன்று தக்கலையின் அருகில் உள்ளது. நீங்கள் குறிப்பிடுவது இதுவாக இருக்கலாம். மார்த்தாண்டம் அருகில் மற்றொன்று உள்ளது.அஞ்சல் பின் எண் 620802 டினை பார்க்க வேண்டும்.வேலுதம்பி பிறப்பிடமாக தாழைக்குழமும் அதே அரசு வெளியீட்டில் உள்ளது. குழப்பமாக உள்ளது. தெழிவு கிடைக்கும்.

அருண்தாணுமாலயன்.

பதக்கம்

தொகு
  அறிவியல் பதக்கம்
தாங்கள் உருவாக்கும் அறிவியல் தொடர் கட்டுரைகளுக்காக இந்த பதக்கத்தை வழங்குவதில் பெருமையடைகிறேன். அராபத் (பேச்சு) 06:59, 3 சூலை 2013 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


பேரன்புடையீர்,

மிக்க நன்றி.தங்களின் ஊக்குவிப்பிற்கு கடமைப் பட்டிருக்கிறேன்.

அன்புடன்,

அருண்தாணுமாலயன்.

  விருப்பம்

என் வாழ்த்துகளும் ஐயா! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:36, 3 சூலை 2013 (UTC)Reply

அன்புடையீர், மிக்க நன்றி. அருண்தாணுமாலயன்

வேண்டுகோள்

தொகு

வணக்கம்!

தல்லாகுளம் மற்றும்  கள்ளியங்காடு ஆகியன முறையே தலைக்குளம்  களியங்காடு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. கூகுள் தேடலில் அதிகமான எண்ணிக்கையின் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை தங்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.--ஸ்ரீதர் (பேச்சு) 09:34, 8 சூலை 2013 (UTC)Reply

நன்றி. அருண்தாணுமாலயன்.

sir, Iam unablle to type easily both in Tamil and English.Even this request I am not able to type.It could be in the earlier form,ie at the top and not in the box on the left.Similarly cont. M is not functioning. please help. arunthanumalayan

ஒரே கட்டுரைகள், பெயர்

தொகு

தாங்கள் பங்களித்த கட்டுரைகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது.வாழ்த்துக்கள். கட்டுரைகள் எழுத தொடங்கு முன் ஆங்கில விக்கியிலிருந்து தமிழுக்கு இணைப்பு உள்ளதா எனவும், வேறு பெயர்களில் தமிழ் விக்கியில் தேடிவிட்டுத் தொடங்குவது கட்டுரை நீக்கப்படவோ அல்லது உழைப்பு விரையமாவதையோ தடுக்கலாம். எ.கா: ஐதரசன் => நீரியம் .ஐதரசன் பற்றிய கட்டுரை ஏற்கனவே விக்கிபீடியாவில் உண்டு. ஆகையால் இனிமேல் இத்தவறு நடக்காது பார்த்துகொள்வீர்களானால் நலம்.இது தங்கள் பங்களிப்பை அதிகரிக்கும்.முனைப்பான உங்கள் பங்களிப்பிற்கு வாழ்த்துக்கள். -- :) நிஆதவன் ( உரையாட ) 17:15, 18 சூலை 2013 (UTC)Reply

வழிகாட்டலுக்கு நன்றி.அருண்தாணுமாலயன்.

வேண்டுகோள்

தொகு

வணக்கம், நீங்கள் எழுதும் பள்ளி அறிவியல் சார்ந்த கட்டுரைகளை வெறுமனே வரைவிலக்கணங்களோடு நிறுத்தி விடாமல், ஓரளவு விரிவு படுத்தி எழுதும் படி கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 07:18, 21 சூலை 2013 (UTC)Reply

விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் வெறுமனே வரைவிலக்கணம் மட்டும் தரும் கலைக்களஞ்சியம் அல்ல. ஓரளவு விரிவாக எழுதப்பட வேண்டும். உங்கள் கட்டுரைகள் பல விளக்கமில்லாமல் ஓரிரு வரிகள் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. அவற்றை விரிவு படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளை முன்மாதிரியாக எடுக்கலாம்.--Kanags \உரையாடுக 10:26, 8 ஆகத்து 2013 (UTC)Reply

பேரன்புடையீர், வணக்கம்.

கலைக்களஞ்சிய அமைப்பில் நீண்டநாட்களுக்கு முன் தொகுக்கப்பட்டவை இவை.எழுதிய தாட்கள் ஒடிந்தும் பொடிந்தும் போகும் நிலையிலுள்ளன.எனது பல கட்டுரைகளை மேப்படுத்தியும் படங்களை இணைத்தும் சீர்செய்துள்ளீர்கள்.மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் நல்லுணர்களுடன ஏற்றுக்கொள்ளப் படுகின்றன.

அன்புடன், அருண்தாணுமாலயன்

படிமம் காப்புரிமை

தொகு

நீங்கள் பதிவேற்றிய Linefocus.jpg என்ற படிமம் காப்புரிமை மீறப்படிருக்கக் கூடிய படிமம் போல் உள்ளது. இப்படிமத்தை பயன்படுத்துவதற்கான முக்கியத்துவம் கட்டுரையில் காணப்படாததால் நியாயமான பயன்பாட்டு விளக்கம் அளிப்பதில் குழப்பமுள்ளது. எனவே படிமங்களை பதிவேற்றும்போது விக்கிப்பீடியாவின் படிமக் கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் பின்பற்றுங்கள். காப்புரிமை மீறப்படிருக்கக் கூடிய படிமங்கள் நீக்கப்படும். --Anton (பேச்சு) 06:11, 11 ஆகத்து 2013 (UTC)Reply

Radioactivity-1.jpg, Centripetal.jpg ஆகியவையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். தேவையான படிமங்கள் பல இங்குள்ளன. --Anton (பேச்சு) 06:35, 11 ஆகத்து 2013 (UTC

அன்புடையீர்,

அருள்கூர்ந்து விதிமீறிய படிமமாக இருப்பின் அகற்றிவிடவும்.

அன்பன் அருண்தாணுமாலயன்

கோட்டுக் குவியம்

தொகு

கோட்டுக் குவியம் கட்டுரையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறேன். சரி பாருங்கள். இதே கட்டுரையில் heel effect பற்றியும் எழுதலாம் என இருக்கிறேன். heel effect ஐ எவ்வாறு தமிழில் எழுதலாம்? உங்களால் முடிந்தால் விரிவு படுத்துங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 12:42, 11 ஆகத்து 2013 (UTC)Reply

நல்லது. குதிகால் விளைவு என முன்பே குறிப்பிட்டுள்ளேன்.அதற்குக் காரணம் எக்சு கதிர்களின் செறிவு மாற்றம் குதிகால் வடிவில் இருப்பது தான்.அண்மைய புத்தகங்களில் படம் உள்ளது.நான் இதுவரையில் படங்களை இணைப்பதில் வெற்றி பெறவில்லை. அருண்தாணுமாலயன்
நன்றி. குதிகால் விளைவு கோட்டுக் குவியத்துடன் சேர்ந்திருப்பதே நல்லது. இரண்டையும் இணைத்து விடுகிறேன். விக்கிமீடியா பொதுவகத்தில் உள்ள படிமங்களை கட்டுரைகளில் நேரடியாக இணைக்கலாம். பொதுவில் இல்லாவிடில், படிமங்களை நாமே உருவாக்க முடியுமா எனப் பார்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 00:58, 12 ஆகத்து 2013 (UTC)Reply

குறை கூற்றளவு

தொகு

குறை கூற்றளவு என்பதற்கிணையான ஆங்கிலச் சொற்றொடரைத் தாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 23:29, 14 ஆகத்து 2013 (UTC)Reply

அன்புடையீர், வணக்கம். குறைகூற்றளவு என்பதற்கு ஆங்கிலத்தில் sublethal dose என்று குறிப்பிடலாம் -அருண்தாணுமாலயன்.

நன்றி. இதனைத் தனிக் கட்டுரையாக இல்லாமல் புற்றுக் கூற்றளவு கட்டுரையுடன் இணைத்திருக்கிறேன். lethal dose என்பது பொதுவான சொல்லா அல்லது tumour lethal dose (புற்றுக் கூற்றளவு) என்பதும் ஒன்றுதானா. median lethal dose என்பது பற்றியும் தனிக் கட்டுரை எழுதலாம்.--Kanags \உரையாடுக 23:24, 15 ஆகத்து 2013 (UTC)Reply

அன்புடையீர்,வணக்கம்.

கூற்றளவின் இருவேறு நிலைகளைக் குறிக்கிறது.தொடர்புடைய கலைச்சொற்களே. கதிர் உயிரியலில் கதிர்வீச்சினை ஏற்றும் அழியாமல் உயிர்த்திருக்கும் பகுதினை ஆராயும் போது(ஏற்பளவு-உயிர்த்திருக்கும் பகுதி-( Dose-Survival fraction ) சராசரி கூற்றளவு (Median lethal dose ) என்பது 1/e-37% உயிர்பினை கொடுக்கும் கதிர் ஏற்பளவினைக் குறிக்கும்.பின்பு விரிவாக எழுதுகிறேன்.

கட்டுரை தேவை

தொகு

வணக்கம், Trace radioisotope பற்றி ஒரு கட்டுரை தேவை. நன்றி.--Kanags \உரையாடுக 08:44, 17 ஆகத்து 2013 (UTC)Reply

வணக்கம், உயிரிகளிடம் கட்டாயம் மிகக்குறைந்த அளவில் இருக்கவேண்டிய தனிமங்கள்,நுண்ணளவு தனிமங்கள்( Trace elements) எனப்படுகின்றன.இத்தனிமங்கள் சில நொதிகள்,இயக்குநீர்கள் மற்றும் ஊட்டச்சத்துகளின் ஆக்கத்திற்கு மிகவும் இன்றியமையாதனவாகும்.இத்தனிமங்களின் குறைபாடு உயிரிகளிடம் பல சிக்கல்களைத் தோற்றுவிக்கும். எடுத்துக்காட்டாக ஐயோடின்,ஃபுளுரைட்,செம்பு, துத்தநாகம்,குறோமியம், செலினியம்,மாங்கசீசு,மாலிப்டினம் போன்ற தனிமங்கள் நுண்ணளவு தனிமங்கள் ஆகும்.இத்தனிமங்கள் கதிரியக்கம் உடையனவாக இருக்க வேண்டியதில்லை. மாறாக 'குறீயீ தனிமங்கள்' (Tracer elements) கதிரியக்கமுடையனவாகும்.வேதிவினைகளில் சாதாரண ஒரு தனிமத்தின் அணுவும் அதன் கதிரியக்க அணுவும் ஒரேமாதிரி செயல் படுகின்றன.சாதாரண அணுவுடன் கதிரியக்க அணுவினை இணைத்து ஒருவருக்குக் கொடுத்து,நுண்மையான கருவிகளின் துணையுடன் அந்த கதிரியக்க அணுக்களின் இடத்தினையோ அல்லது உடலில் எங்கெல்லாம் பரவுகிறது என்பதனையோ நாம் தெரிந்து கொள்ளமுடியும்.இம் முறை குறீயீமுறை( Tracer technique) எனப்படும்.

அன்புடையீர், வணக்கம்.

கதிரியக்க மாசு என்னும் போது,மாசு கதிரியக்கமுடையதாக உள்ளது என்று பொருள். கதிரியக்க ஓரிடத்தான் என்னும் போது ,ஓரிடத்தான் கதிரியக்கமுடையது என்று பொருள். கதிரியக்க உயிரியல் என்பது ,உயிரியல் கதிரியக்கமுடையதா? கதிர் உயிரியல் என்பது கதிர் வீச்சின் காரணமாக உயிரிகளிடம் தோன்றும் விளைவுகளை பற்றி ஆயும் பகுதி.இதுவே சரி என்று கருதுகிறேன்.விளக்கம் வேண்டுகிறேன்

அன்புடன் ,அருண்தாணுமாலயன்.

கட்டுரை நீக்கம்

தொகு

நீங்கள் பங்களித்த (தொடங்கிய) உத்தேச புற்றுநோய் தோன்றும் வீதம் என்னும் கட்டுரை கலைக்களஞ்சிய நடையில் இல்லாததால் நீக்குகிறேன்.--குறும்பன் (பேச்சு) 17:28, 5 செப்டம்பர் 2013 (UTC)

Crude cancer incidence rate என்று கூகுளில் தேடினால் நிறைய பக்கங்கள் வருகின்றன. எனவே, தற்போது உள்ள கட்டுரை வடிவத்தை மேம்படுத்த வாய்ப்புண்டு என்று கருதி மீட்டுள்ளேன். http://www.cancerresearchuk.org/cancer-info/utilities/Glossary/news-crude-rate பக்கத்தில் உள்ளது போன்ற எளிய வரையறையைத் தந்தாலே போதுமானதாக இருக்கும். அல்லது, பொருத்தமான கட்டுரையின் ஒரு பகுதியாக இதனை இட்டு வழிமாற்று தரலாம். அருண்தாணுமால்யன் போன்று விக்கிப்பீடியாவின் நோக்கங்கள் புரிந்து வெகுகாலமாக பங்களித்து வருவோரின் கட்டுரைகளை இப்படிச் சட்டென்று நீக்க வேண்டாமே? முதலில், பேச்சுப் பக்கத்தில் உரையாடி விட்டுப் பிறகு உரிய நடவடிக்கையை எடுக்கலாமே? நன்றி.--இரவி (பேச்சு) 18:23, 5 செப்டம்பர் 2013 (UTC)

பேரன்புடையீர்,வணக்கம். ஐயா திரு. குறும்பன் அவர்களே,என்னால் முடிந்த்தைத் தான் நான் கொடுக்க முடியம். நான் தரமானது என நினைப்பது தங்களுக்கு தரமற்றது என்று தோன்றினால் அதை நீக்க ,விக்கி ஒருவருக்கு உரிமையினை கொடுத்துள்ளது.அது உங்கள் உரிமை. என்கடன் பணிசெய்வதே என்று எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன்.பலரும் என்கட்டுரைகளை திருத்தி மேம்பாடு செய்துள்ளனர்.அவர்களுக்கு என் நன்றி.பயனை எதிர்பாராது பணியினை செய்வதே என் பணி.

அருண்தாணுமாலயன்.

முதற்பக்க அறிமுகம்

தொகு

வணக்கங்க. தங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்திலும் விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்திலும் தர விரும்புகிறோம். தங்களைப் பற்றிய விவரங்களை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/தாணுமாலயன் பக்கத்தில் தந்து உதவ முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி.--இரவி (பேச்சு) 18:31, 5 செப்டம்பர் 2013 (UTC)

பேரன்பையீர்,வணக்கம்,

என்னைப் பற்றிய தகவல்கள் ஏப்ரல் 12, 2013 ல் பயனர் அருண்தாணுமாலயன் என்ற இடத்தில் உள்ளது.என்னால் மாற்றி தர இயலவில்லை. அருள்கூர்ந்து மாற்றி அமைத்தால் கடமைப்பட்டவனாவேன்.மாதக்கடைசியில் தங்களைக் காண ஆவலாக உள்ளேன். அன்புடன்,அருண்தாணுமாலயன்.

யூரோப்பியம்

தொகு

நீங்கள் எழுதிய தொழிற்துறையில் யூரோப்பியம் என்ற கட்டுரையில் உள்ள தகவல்களை யூரோப்பியம் கட்டுரையில் சேர்த்திருக்கிறேன். இத்தகவல்கள் ஒரே கட்டுரையில் இருப்பதே சிறந்ததாகத் தெரிகிறது. நன்றி.--Kanags \உரையாடுக 02:33, 7 செப்டம்பர் 2013 (UTC)

பேரன்புடையீர்,நன்றி.கதிரியலில் யூரோப்பியத்தின் சிறப்பு பயன்பாடு கருதியே தனியாக எழுதினேன்.பெரிய கட்டுரையில் இருப்பதால் தவற விடக் கூடும்.

அன்புடன், அருண்தாணுமாலயன்.

அன்புடையீர், //சாதகமான இப்பண்புகளால் அவை தொழில்துறையில் பயனாகின்றன.// என்ற தகவலைத் தவிர அது எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது போன்ற தகவல் எதுவும் இல்லை. இதனாலேயே யுரோப்பியம் என்ற பொதுவான கட்டுரையில் சேர்த்தேன்.--Kanags \உரையாடுக 07:43, 7 செப்டம்பர் 2013 (UTC)

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு

தொகு


வணக்கம்.நன்றி.அருண்தாணுமாலயன்

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு

தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:02, 18 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்...

தொகு

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:31, 27 செப்டம்பர் 2013 (UTC)

பேரன்புடையீர்,

வணக்கம்.பாராட்டு பெறும் நண்பர்கள் பட்டியலில் என் பெயர் 92 வது இலக்கத்தில் உள்ளது.அங்கு என்னைப் பற்றிய தகவல்கள் உள்ளன.

அன்புடன், அருண்தாணுமாலயன்.

Radiography

தொகு

வணக்கம், Radiography பற்றிய கட்டுரை எழுதியுள்ளீர்களா? தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. இல்லாவிட்டால் கட்டுரை ஒன்று எழுதுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 03:00, 28 செப்டம்பர் 2013 (

அன்புடையீர்,

வணக்கம்.கதிர்படஇயல் பற்றி சற்று விரிவாக எழுதுகிறேன்.கோட்டுப் படங்களைச் சேர்ப்பதிலும் சில அட்டவணைகளை இணைப்பதிலும் என்வரையில் சிக்கல் இருக்கின்றன.

அன்புடன் அருண்தாணுமாலயன்.

வர்க்க மூலத்திற்கான குறியீடு எங்குள்ளது? ஆங்கில எழுத்துக்களுக்கு மேல் கிடைக்கோடு இடுவது எப்படி? உதவுங்கள்.

அன்புடன்,அருண்தாணுமாலயன்

கீழுள்ளவை உங்களுக்குப் பயன்படும் என நினைக்கிறேன். இவற்றைப் பயன்படுத்தும் போது பக்கத்தைச் சேமித்தல் கொஞ்சம் தாமதமாகும்.

 ,  
 ,  

அன்புடையீர், வணக்கம்.

மிகவும் விரிவான தகவல்களைக் கொடுத்திருக்கிறீர்கள்.நன்றி.அனைத்தையும் பார்த்து புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

அன்புடன், அருண்தாணுமாலயன்.

மேலும் தேவைகளுக்குப் பார்க்கவும்: விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/வேதியியல் மற்றும் கணித குறியீடுகளைச் சேர்த்தல் --Booradleyp1 (பேச்சு) 17:58, 8 அக்டோபர் 2013 (UTC)Reply

பதக்கம்

தொகு
  விடாமுயற்சியாளர் பதக்கம்
உங்களின் விடாமுயற்சி நிறைந்த கடின உழைப்பு... தமிழ் விக்கிக்கு பெரும்பேறு; மிக்க நன்றி! - அன்புடன் மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:14, 13 அக்டோபர் 2013 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

பேரன்றுடையீர், வணக்கம். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. அன்புடன், அருண்தாணுமாலயன்.

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், Arunthanumalayan!

 
நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--நந்தகுமார் (பேச்சு) 07:01, 19 அக்டோபர் 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டி

தொகு
வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:51, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

ஈர்ப்பு விசை

தொகு

ஐயா, வணக்கம்! ஈர்ப்பு விசை எனும் கட்டுரை ஏற்கனவே உள்ளது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:23, 29 அக்டோபர் 2013 (UTC)Reply

பேரன்புடையீர்,

பார்வைக்குக் கொணர்ந்தமைக்கு நன்றி.இருக்குமானால் அகற்றிவிடலாம்.

அன்புடன் அருண்தாணுமாலயன்.

பேரன்புடையீர்,

வணக்கம்.எனது முதன்மைத் தடுப்பரண் என்கிற சிறு விளக்கக் கட்டுரை முன்பே இருப்பதால் அகற்றப்பட்டுள்ளது என அறிகிறேன்.ஆனால் தேடினால் அதுபற்றி ஏதுமில்லையே.கதிரியல் தொடர்புடைய அனைத்துத் துறைகளிலும் பயன்படும் ஒரு கலைச்சொல் இதுவாகும்.

அருணுதாணுமாலயன்.

உங்கள் கட்டுரை முதன்மைத் தடுப்பரண் உள்ளது.--Booradleyp1 (பேச்சு) 09:04, 15 நவம்பர் 2013 (UTC)Reply

வேண்டுகோள்

தொகு

கருக் குழாய் ஆய்வு கட்டுரையில் ஆங்கில விக்கியிலிருந்து தகவற் பெட்டி இணைத்துள்ளேன். அதில் படத்தின் கீழுள்ள தகவல் ஆங்கிலத்தில் உள்ளது. அதனைத் தமிழில் மாற்றும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 06:13, 1 திசம்பர் 2013 (UTC)Reply

இங்கு உள்ள படங்களில் ஏதவது கருக் குழாய் ஆய்வு ஆய்வுக் கட்டுரைக்குப் பொருந்துமா என்று பார்த்துச் சொல்லுங்கள்.--Booradleyp1 (பேச்சு) 04:38, 8 திசம்பர் 2013 (UTC)Reply

அன்புடையீர், இரண்டாவது படம் HSG Ashermans சரியாக இருக்கும். அருண்தாணுமாலயன்

மாற்றியிருக்கிறேன். ஆனால் அப்படிமத்தில் adhesions என்று சிவப்பு அடைப்புக்குள் உள்ளதே பரவாயில்லையா? அதிலுள்ள கீழ்க்கண்ட சொற்களுக்குத் தமிழாக்கம் தந்தீர்கள் என்றால் படத்துக்குள் மாற்றித் தரும்படி கேட்க உதவியாக இருக்கும்.--Booradleyp1 (பேச்சு) 12:46, 8 திசம்பர் 2013 (UTC)Reply

  • right tube
  • left tube
  • uterus
  • cervix
  • dye injector

அன்புடையீர், நன்றி.

கருப்பையில் சிலபகுதிகள் ஒட்டிக்கொண்டிருப்பதைக் குறிக்கின்றது.இருக்கலாம். உடலமைப்பியலில் கருப்பையுடன் இரு கருக்குழாய்கள் ,பக்கத்திற்கொன்றாக அமைந்துள்ளது.இவையே முறையே வலது ,இடது குழாய் எனக்குறிக்கப்பட்டுள்ளன.கருவளரும் இடம் கருப்பைற Uterus என்று காட்டப்பட்டுள்ளது.கருப்பையின் வாய் Cervix ஆகும்.ஒப்புமைக் கூட்டும் சாயப்பொருளை கருப்பையில் செலுத்தப் பயன்படும் பீச்சாங்குழல் Syringe போன்றது.இதுவே dye injector என்று காட்டப்பட்டுள்ளது.

  • right tube-வலது குழாய்
  • left tube-இடது குழாய்
  • uterus-கருப்பை
  • cervix-கருப்பை வாய்
  • dye injector-மருந்து பீச்சாங்குழல்
  • adhesions-ஒட்டிக்கொள்ளல்
  • HSG of Uterus with corporal adhesions- கருப்பை ஆய்வில் கருப்பையும் உள்ஒட்டிய பகுதியும்.

இந்தப் பட்டியலின் கடைசி மூன்றுக்கும், அவற்றின் அருகில் தமிழில் மொழிபெயர்த்து எழுதித் தரும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:27, 10 திசம்பர் 2013 (UTC).Reply

வணக்கம். கீழ்க்காணும் சொற்களுக்கு அருகில் அவற்றின் தமிழ்ச் சொற்களைத் தந்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 08:06, 22 திசம்பர் 2013 (UTC)Reply

  • Ovarian Histology - சினைப்பை திசுஆய்வியல்
  • Reduited Follicle -
  • Maturing Follicle -
  • Ovulation -முட்டைவெளிப்படல்
  • Corpus Luteum -
  • Degenearate Corpus Luteum -
  • Body Temperature -உடல் வெப்பநிலை
  • Hormones -இயக்குநீர்கள்
  • Estradiol -(சினைப்பையில் சுரக்கும்)ஓர் இயக்குநீர்-எஸ்ரோஜன்.
  • Lutenizing Harmone -
  • Progesterone -ஓர் இயக்குநீர்
  • Follicle Stimulating Harmone

தெரிந்தவைகளுக்கு தமிழ் சொற்களைக் கொடுத்துள்ளேன்.

  • Follicular Phase -
  • Luteal Phase -
  • Ovulation -
  • Menstruation -மாதவிலக்கு
  • Endometrial Histology -கருப்பை திசு ஆய்வியல்
  • Day of Menstrual Cycle -மாதவிலக்குச் சுழற்சி நாள்

நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:45, 31 திசம்பர் 2013 (UTC)Reply

விக்கி அன்பர்களுக்கு,

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஒரு வருடமாக எனது சிறு கட்டுரைகளை புதுக்கியும் மெருகேற்றியும் படங்களை இணைத்தும் உதவிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் 2014 ஆம் ஆண்டு மேலும் சிறப்புடன் வளரவேண்டும் என விழைகிறேன்.

அருண்தாணுமாலயன்.

  விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 15:45, 31 திசம்பர் 2013 (UTC)Reply

எலும்புக் கட்டி

தொகு

எலும்புக் கட்டி மற்றும் தைமோமா கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள படத்தின் கீழ் ஆங்கிலத்தில் உள்ள விவரத்தை தமிழில் மாற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 15:45, 31 திசம்பர் 2013 (UTC)Reply

நிலநிரைக்கோடு

தொகு

வணக்கம் அய்யா! நீங்கள் சற்றுமுன் ஆரம்பித்த அச்சக்கோடு பற்றி ஏற்கனவே நிலநிரைக்கோடு என்ற கட்டுரை உள்ளது. ஆதலால், உங்களது கட்டுரை நீக்கப்பட்டது. நீங்கள் நிலநிரைக்கோடு கட்டுரையை விரிவாக்கி உதவலாமே! நன்றி! - Vatsan34 (பேச்சு) 06:44, 5 சனவரி 2014 (UTC)Reply

வணக்கம்.பார்வைக்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி. நிலநிரைக்கோடு சிறப்பாக இருக்கும் நிலையில், எனது எனது சிறு குறிப்பை அகற்றியதில் தவறில்லை.

அருண்தாணுமாலயன்.

வேண்டுகோள்...

தொகு

ஐயா, வணக்கம்! தமிழ் விக்கியில் முக்கியக் கட்டுரைகளை நீங்கள் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். அதற்கு எனது நன்றிகள்! பெரும்பாலான கட்டுரைகளில் மேற்கோள்கள் மற்றும் உசாத்துணைகளை இன்னமும் முறைப்படி இணைத்தால், நன்றாக இருக்கும். இதற்காக நேரடியாக உங்களின் வீட்டிற்கே வந்து என்னால் உதவமுடியும். உங்களுக்கு ஏதும் சிரமம் இல்லையெனில் தெரிவிக்கவும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:13, 17 சனவரி 2014 (UTC)Reply

பேரன்புடையீர்,

வணக்கம். பெரும்பாலான எனது கட்டுரைகள் பயிற்சிக்கூடங்களில் பெற்ற தகவல் அடிப்படையில் அமைந்தன.பாபா அணுவாராய்ச்சி மைய விளக்கக் குறிப்பும் அடங்கும். இனிவரும் கட்டுரைகளின் உசாதுணைகளை இணைக்கிறேன்.மிக்க நன்றி.வீட்டிற்கே வந்து உதவ முன்வந்திருக்ககும் உங்களுக்கு என் மனம் கனிந்த நன்றியும் பாராட்டும். எனது தொலைபேசி எண் 22321159 , கைபேசி எண் 9445152591. வரவேற்க காத்திருக்கிறேன்.

அன்புடன், அருண்தாணுமாலயன்.

தமிழில் எழுத

தொகு
 
Screenshot of enabling ULS on Wikipedia

வணக்கம் ஐயா, சில நாட்களாக விக்கியில் தமிழில் உள்ளிட முடியாமல் சில தடங்கல்கள் உள்ளன. இது தற்காலிகமானதே. தமிழில் எழுத உங்கள் விருப்பத் தேர்வுகளில் முதல் பக்கத்தில் உள்ள select the user checkbox before "Enable the Universal Language Selector" as shown in the picture). அதன் பின்னர் வழமை போல எழுதக் கூடியதாக இருக்கும்.--Kanags \உரையாடுக 06:07, 25 சனவரி 2014 (UTC)Reply

அயனியாக்கும் கதிர்களின் உயிரியல் விளைவுகள்

தொகு

வணக்கம் ஐயா, பேச்சு:Lஐத் தயவு செய்து பார்க்க இயலுமா?--சி.செந்தி (உரையாடுக) 07:10, 30 சனவரி 2014 (UTC)Reply

உங்களின் ஆர்வம்மிகுந்த பங்களிப்புகளுக்கு நன்றி; இக்கட்டுரையில் முடிந்த அளவிற்கு உரைநடையினை சேருங்கள். மற்றவர்கள் தம்மால் முடிந்த அளவிற்கு விரிவுபடுத்துவர். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)

பேரன்புடையீர், வணக்கம். இந்த கட்டுரையினை நீங்கள் கோரும் வண்ணம் எழுதுகிறேன். அருண்தாணுமாலயன்.

அயனியாக்கும் கதிர் என்ற தலைப்புக்கு மாற்றியிருக்கிறேன். அயனியாக்கும் கதிர் என்றால் என்ன என்பதைச் சுருக்கமாக (அல்லது முடிந்தால் விரிவாக) ஆரம்பத்தில் எழுதினீர்கள் என்றால் கட்டுரை ஓரளவு நிறைவு பெறும்.--Kanags \உரையாடுக 08:20, 31 சனவரி 2014 (UTC)Reply

கையொப்பம் இடுதல்

தொகு

வணக்கம் ஐயா, தங்கள் உரையாடல்களின் முடிவில் --~~~~ என இடுதல் மூலம் நேரமுத்திரையுடன் கூடிய கையொப்பம் இணைக்கப்படும். தொகுப்புப் பெட்டியில் உள்ள   படத்தைச் சொடுக்குவதன் மூலம் இதனைச் சுலபமாகச் செய்யலாம். எனினும் தங்கள் ஆங்கிலப்பெயரே வரும் என்பதால் விருப்பத்தேர்வுகள் சென்று அங்கே உங்கள் பெயரைத் தமிழில் இடலாம். பின்னர் அதுவே உங்கள் கையொப்பமாகத் திகழும்.--சி.செந்தி (உரையாடுக) 19:05, 31 சனவரி 2014 (UTC)Reply

பேரன்புடையீர்,உங்கள் கருத்துகள் நினைவில் கொள்ளப்படும். அருண்தாணுமாலயன்.--Arunthanumalayan 15:20, 1 பெப்ரவரி 2014 (UTC)

குறுங்கட்டுரைகள்

தொகு

குறுங்கட்டுரைகள் ஆகக் குறைந்தது 3 வரிகளைக் கொண்டு இருக்க வேன்டும். இல்லாவிடின் அவை நீக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். ஆகவே நீங்கள் உருவாக்கிய குறுங்க் கட்டுரைகளை சிறிது விரிவாக்கம் செய்யவும் (எ.கா தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நிதியமைச்சர்கள். ) --Natkeeran (பேச்சு) 17:49, 3 பெப்ரவரி 2014 (UTC)

சாகீர் உசேன் எனும் கட்டுரை ஏற்கனவே உள்ளதால், இக்கட்டுரையினை விரிவுபடுத்த வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:57, 12 பெப்ரவரி 2014 (UTC)

பேரன்புடையீர், வணக்கம். சாகீர் உசேன் கட்டுரையினைக் கண்ணுற்றேன். அதில் இருப்பதைவிட பல புதிய தகவல்கள் தந்துள்ளேன். நிச்சயமாக இதுபோன்ற தலைவர்களைப் பற்றி ஏராளம் எழுதக் கூடும். நானும் முயற்சிக்கிறேன். அதற்காக இக்கட்டுரையினை நீக்குவது முறையல்ல எனக் கருதுகிறேன். அன்புடன் ,அருண்தாணுமாலயன்.--Arunthanumalayan 15:30, 12 பெப்ரவரி 2014 (UTC)

ஐயா, வணக்கம். இது கலைக்களஞ்சியத் தளம் என்பதனால்... ஒருவரைப் பற்றி ஒரு கட்டுரைதானே இருக்க இயலும்! ஒருவரைப் பற்றி இரு கட்டுரைகள் இருந்தால், இங்கு வருகைதரும் பயனர் எதைப் படிப்பார்?

  • ஒரு குறிப்பிட்ட விசயம் குறித்து கட்டுரை இல்லாவிட்டால் புதிதாக கட்டுரை எழுதுவதும், கட்டுரை ஏற்கனவே இருந்தால் அக்கட்டுரையினை விரிவாக்கம் செய்வதும்தானே விக்கி நடைமுறை.
  • ஒரு சிறு எழுத்துப்பிழையினை ஒருவர் சரிசெய்தாலும், அவரின் பங்களிப்பானது கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்தில் பதிவாகிறது. எனவே ஏற்கனவே இருக்கும் ஒரு கட்டுரையினை விரிவாக்கம் செய்வதிலும் நமது அர்ப்பணிப்பு பதிவு செய்யப்படுகிறது.
  • விரிவாக்கத்தை நீங்களே செய்யும்போது உங்களின் பயனர் பெயரில் அது பதிவாகிறது. எனவேதான் ஒவ்வொருமுறையும் உங்களையே செய்யுமாறு வேண்டுகிறேன். அதை முடித்துவிட்டீர்கள் என்றால், பக்க வழிமாற்று செய்ய ஏதுவாகும்! நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:21, 13 பெப்ரவரி 2014 (UTC)

  விருப்பம்--aho;- பேச்சு 03:25, 13 பெப்ரவரி 2014 (UTC)

பேரன்புடையீர், நீங்கள் கூறுவது சரியே. எனது கட்டுரையிலுள்ள தகவல்களை (முதன்மை கட்டுரையில் இல்லாதனவற்றை) அக்கட்டுரையுடன் இணைக்கலாம் இல்லையா? அருண்தாணுமாலயன்.

இரு கட்டுரைகளையும் இணைத்து விடுகிறேன்.--Kanags \உரையாடுக 07:05, 13 பெப்ரவரி 2014 (UTC)

பேரன்புடையீர், மிக்க நன்றி. வணக்கத்துடன் அருண்தாணுமாலயன்.

விக்கியாக்கம் தேவை

தொகு

தொடர்ந்து பங்களித்து வருவதற்கும் அறிவியல் கட்டுரைகளை உருவாக்குவதற்கும் நன்றிகள். எனினும், சில குறைகளைத் தவிர்த்து தரமான கட்டுரைகளை தொகுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏறக்குறைய 1.5 வருடங்கள் பங்களிக்கிறீர்கள். அதனால் நீங்கள் புதுப்பயனர் அல்ல அதனால் தொடர்ந்து மற்றவர்கள் உதவிக் கொண்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது அல்லது பெரிய தொகுப்புக்களைச் செய்ய முடியாது போகலாம். மேலும், நீங்கள் பங்களிக்கும் துறை அறிவு, விருப்பம் கொண்டவர்கள் குறைவாயின் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் தரமற்று தேங்கிக் கொண்டிருக்கும். எ.கா: நாளக் கட்டி - இங்குள்ள குறைகள்:

  • விக்கி உள்ளிணைப்புக்கள் இல்லை
  • பகுப்பு இல்லை
  • சான்று இல்லை
  • பிற மொழி விக்கி இணைப்பு இல்லை
  • கட்டுரையை அழகுபடுத்த தகவல்பெட்டி, படம் போன்றவை இல்லை
  • en:Angioma இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்

நீங்கள் உருவாக்கும் பல கட்டுரைகள் இவ்வாறு அப்படியே விடப்படுகின்றன. நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை மீண்டும் ஒரு முறை மீள் தொகுப்புக்கு உட்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். என் கருத்து விளங்கா விட்டால் வேறு பயனர்களிடம் கேட்டுப்பாருங்கள். நீங்கள் உருவாக்கிய பல கட்டுரைகள் அழிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உங்கள் நேரம் வீணாகாது பயன் உள்ளதாக விக்கிக்கு மாற சற்று கவனம் எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தரமான அறிவியல்சார் கட்டுரைகளை உருவாக்க வாழ்த்துக்கள்! நன்றி. --AntonTalk 02:35, 26 மார்ச் 2014 (UTC)

பேரன்புடையீர்,

மிக்க நன்றி. மருத்துவ துறைசார்ந்த நான் எழுதும் கட்டுரைகள், ஒரு மருத்துவர் எழுதினால் நன்றாக அமையும்.நான் மருத்து இயற்பிய்யலாளர் என்றவகையில் எழுதப்பட்டவை. ஆங்கிலத்தில் நாளக்கட்டியினை பற்றி 200 பக்க பத்தகமே இருக்கக் கூடும்.மருத்துவர் மட்டுமே அவைகளைத் தர இயலும்..உங்களின் கருத்துகள் நன்றியுடன் ஏற்கப்படுகின்றன.

அன்புடன் அருணுதாணுமாலயன்

வணக்கம் ஐயா, நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளில் Anton கூறியது போல சிறு குறைபாடுகள் நிறைய உள்ளன. விக்கிப்பீடியா சிறப்புக் கட்டுரைகளை ஒரு முறை பார்வையிடவும், கட்டுரைகளில் உள்ளிணைப்பு, பகுப்புகள் சான்றுகள், தகவல்பெட்டி, படிமங்கள் போன்றவற்றை இணைக்கலாம். தங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படுமாயின் என் பேச்சுப் பக்கத்தில் தகவல் கொடுங்கள்; விரைந்து உதவ காத்திருக்கிறேன். மேலும் பல கட்டுரைகளை உருவாக்க வாழ்த்துக்கள். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:49, 11 சூன் 2014 (UTC)Reply

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

தொகு
 
அனைவரும் வருக

வணக்கம் Arunthanumalayan!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--ஆதவன் 07:42, 30 திசம்பர் 2014 (UTC)Reply

பேரன்புடையீர்,

வணக்கம்.தங்களின் அழைப்பிற்கு நன்றி. முயற்சிக்கிறேன்.அனைத்து விக்கி நண்பர்களுக்கும் புத்தாண்டு , பொங்கல் வாழ்த்துகள்.

அருண்தாணுமாலயன்.

படிமம் இணைத்தல்

தொகு

[[File:Disque newton.png|160px|right]] A '''Newton disc''', discovered by Isaac Newton, is a disc with segments in [[rainbow]] colours. என ஆங்கிலக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஆங்கிலக் கட்டுரையில் edit அழுத்திப்பார்த்தால் தெரியும். இதை தமிழ் விக்கியில் [[படிமம்:Disque newton.png|thumbnail|நியூட்டன் தட்டு]] என இட்டுள்ளனர். இங்கு படிமம்/file என்பது கோப்பென்பதைக் குறிக்கிறது. Disque newton.png என்பது படிமத்தின் பெயர். thumbnail என்பது நகம் அளவு சிறுபடம் என்பதைக் குறிக்கிறது. இறுதியில் படிமத்தின் பெயர் எவ்வாறு இருக்கவேண்டும் என எழுதல். இறுதியில் [[படிமம்:Disque newton.png|thumbnail|நியூட்டன் தட்டு]] என கட்டுரையில் இட்டால்

 
நியூட்டன் தட்டு

அருகில் உள்ளதுபோல் படம் கட்டுரையில் தோன்றும். வேறு உதவிகள் வேண்டும் எனில் கேளுங்கள். உதவக் காத்திருக்கிறேன். நன்றி --ஆதவன் 16:29, 2 சனவரி 2015 (UTC)Reply

அறிவியல் கட்டுரைகள்

தொகு

வணக்கம், விக்கிப்பீடியாவில் அறிவியல் கட்டுரைகள் எழுதும் போது அவை பாட நூல் போன்று அல்லாமல் கலைக்களஞ்சிய நடையில் எழுதப்பட வேண்டும். வெறுமனே ஒரு இயற்பியல் விதியை எழுதுவது விரும்பத்தக்கதல்ல. அதன் வரலாறு, பயன்பாடுகள் போன்றவை மேற்கோள்களுடன் தரப்பட வேண்டும். பாடநூல்கள் எழுத விக்கிநூலைப் பயன்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 20:22, 8 சனவரி 2015 (UTC)Reply

பேரன்புடையீர், வணக்கம். தங்களின் கருத்து ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இனி வரும் கட்டுரையில் இது போன்று நிகழா வண்ணம் கவனம் செலுத்துகிறேன்.

அன்புடன், அருண்தாணுமாலயன்.

பதிப்புரிமை மீறல்

தொகு

நாளிதழில் வந்த வாக்கியங்களை அவ்வாறே பயன்படுத்த வேண்டாம். இதன் காரணமாகத் தாங்கள் தொடங்கிய ஆராச்சர் என்ற கட்டுரை நீக்கப்பட்டது. கட்டுரையில் தர வேண்டியவற்றை உங்கள் மொழிநடையில் எழுதுங்கள். --மதனாகரன் (பேச்சு) 17:57, 6 சூலை 2015 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

தொகு
 
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:34, 8 சூலை 2015 (UTC)Reply

என் எண்ணங்கள். எத்தனையோ நடிகர்.நடிகைகளின் பெயர்கள்.பல தொடர்புடைய தகவல்கள் நமது விக்கியில் உள்ளன.நான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்று விடுதலைப் பெற படுபட்ட அரசியல் தொண்டர்களைப் பற்றி எழுதியது எனோ அகற்றப்பட்டுள்ளன.தாமரைப்பட்டயம் வழங்கி இந்திய அரசு அவர்களைச் சிறப்புச் செய்துள்ளது.இவர்களைப் பற்றி யார் பதிவு செய்து உலகிற்கு தெரியப்படுத்துவது?

கதிரியக்கம் பற்றிய பலரது கட்டுரைகளிலும் ஆல்ஃபா,பீட்டா,காமா கதிர்கள் என்று எழுதுகிறோம்.எக்சு கதிர்களை மட்டும் ஏன் ஊடுகதிர் என்று குறிப்பிட வேண்டும்.மின்காந்த கதிர்கள் எல்லாம் ஏதோ ஓர் ஊடகத்தில் ஊடுருவிச் செல்லுகின்றன.எக்சு கதிர்கள் மட்டும் ஊடுருவல் பண்பைப் பெற்று இருக்கவில்லை.இராண்சன் எக்சு கதிர் என்றே குறிப்பிட்டுள்ளரர்கள்.அப்படியே அழைப்பது அவருக்கு பெருமை சேர்ப்பதாகவே அமையும்.

இந்தியாவிலுள்ள இரண்டு கோடி தமிழ் மாணவர்கள் பன்நாட்டுக்கலைச் சொற்களையே பயன்படுத்துகிறார்கள்.அவர்களுக்குப் புரியும் நடையில் எழுதுவது நலம்பயக்கும்.

இன்று விக்கி உயிர்புடன் இருப்பதற்குக் காரணம் புலம்பெயர்ந்த தமிழர்கள் தான் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.மலேயா ,சிங்கப்பூர் தமிழர்களின் பங்களிப்பினை எந்தவகையில்ம் குறைத்து மதிப்பிட முடியாது.

அறிவியல் துறைசார்ந்த கட்டுரைகள் இன்னும் அதிக அளவில் எழுதப்பட வேண்டும்.

பணிவுடன்,அருண் தாணுமாலயன்

ஒரே விளைவு-ஏற்பளவு

தொகு

ஒரே விளைவு-ஏற்பளவு என்ற கட்டுரையயை தக்க சான்று இணைத்து, விக்கியிணைப்பு ஏற்படுத்தி விக்கிக்ப்படுத்தி உதவுங்கள். --AntanO 15:00, 25 திசம்பர் 2015 (UTC)Reply


வேண்டுகோள்.நிக்கல்சனின் நீர்ம மானி கட்டுரையில் படம் இணைத்து உதவியமைக்கு நன்றி.படிப்படியாக படம் இணைத்த விதம் பற்றி விளக்கவும். அன்புடன் அருண்தாணுமாலயன்.

Greek mythology - duplicate

தொகு

Hi! Excuse me for writing in English, but I'm from Italy. I'm reordering articles about Greek mythology on Wikidata. I discovered that your article சைக்ளோப்சு is a duplicate of சைக்கிளோப்சு. Would you mind merging them? Thank you, --Epìdosis (பேச்சு) 19:04, 20 சனவரி 2017 (UTC)Reply

அன்புடையீர்,வணக்கம். விக்கி தரவுகளில் கிரேக்க புராணக் கட்டுரைகளை சீராய்வு செய்து தொகுக்கும் உங்கள் முயற்சி வெற்றிபெற என் வாழ்த்துகள்.சைக்ளோப்சு என்பதே சரி என்று கருதுகிறேன். அவைகளை இணைப்பது பற்றி ,எப்படி செய்வது என்று எனக்கு தெரியாது.அது அவசியம் இல்லை என்றே கருதுகிறேன்."கி" எவ்வாறு வந்து? அன்புடன், அருண் தாணுமாலயன்.

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

தொகு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:54, 7 மார்ச் 2017 (UTC)

போட்டியில் பங்குபெறலாம் அல்லவா ஐயா!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:17, 13 மே 2017 (UTC)Reply

மின் ஆற்றல் சிகிச்சை பற்றி

தொகு

வணக்கம் ஐயா,

Electrotherapy  இயன்முறைமருத்துவத்தின் ஒரு சிகிச்சை முறை அது கட்டுப்படுத்தப்பட்ட மின்னாற்றலை உபயோகிப்பதாகும். ஆதலால்  மின் ஆற்றல் சிகிச்சை என பக்கத்தை உருவாக்கினேன். பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.

நன்றி Kaliru (பேச்சு) 15:19, 26 ஏப்ரல் 2018 (UTC)

பேரன்புடையீர், இயன்முறை மருத்தவ மாணவர்களுக்குப் பாடம் நடத்திய ஆசிரியராவும் இருந்துள்ளேன்.மின்மருத்தவம் என்றாலும் மின்னாற்றலைப் பயன்கொள்ளும் மருத்தவப் பிரிவினையே குறிக்கும்.பிழை என்று கூறமாட்டேன்.எனதை கருத்து அது. உங்களைப் போன்ற துறைசார்ந்த பொருளுணர்ந்தவர்கள் அதிகம் எழுத வேண்டும்.வரவேற்கிறேன்,உங்கள் பங்களிப்பினை.உங்கள் உதவியும் எனக்குத் தேவைப்படலாம். அன்புடன், அருண்தாணுமாலயன்.

வரவேற்பு

தொகு

தாங்கள் மீண்டும் விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுத முனைவதற்கு எனது மனமார்ந்த நன்றிகள். நீண்டநாட்கள் கழித்து வாய் புற்றுநோய்கட்டுரை எழுதியுள்ளீர்கள். அதில் |இங்கு குறிப்பிட்டுள்ளவாறு சான்றுகளைச் சேர்த்துள்ளேன். தாங்கள் உருவாக்கும் பிற கட்டுரைகளிலும் சான்றுகளைச் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றிஸ்ரீ (talk) 12:51, 31 ஆகத்து 2019 (UTC)Reply


தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகளை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. கட்டுரையாக்கத்தில் தொடர்ந்து ஈடுபட கேட்டுக்கொள்கிறேன். தமிழில் அறிவியல் கட்டுரைகள் வருவது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். நன்றிகள்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 12:20, 5 அக்டோபர் 2019 (UTC)Reply

திரு. மகாலிங்கம் அவர்களுக்கு,
வணக்கம்.சில வருடங்களாக விக்கியில் அறிவியல் கட்டுரைகளை குறிப்பாக கதிரியல்,கதிர்மருத்துவம்,அணுக்கரு மருத்துவம் போன்ற துறைசார்ந்த கட்டுரைகளை எழுதினாலும் இன்றுவரை என்னளவில் படங்களையோ வரைபடங்களையோ கட்டுரையில் இணைக்க முடியவில்லை.படிப்படியாக எவ்வாறு இணைப்புகளை பதிவேற்றம் செய்வது என்று விளக்க வேண்டுகிறேன்.
@ முதலில் தமிழில் கட்டுரை எழுத வேண்டும்.
@ ஆங்கில விக்கிக்குச் செல்ல வேண்டும்.
@ தேவையானக் கட்டுரையினைத் தேர்வு செய்யவேண்டும்.
@ படம் தேர்வுசெய்ய வேண்டும்.
@ இப்போது இரட்டை அடைப்புக் குறியினுள் படத்தின் பெயர்| வலது அல்லது இடது|படத்தின் அளவு|படம் இடம் பெறும் இடம்|முதலாவற்றைத் தேர்வு        செய்ய வேண்டும்.
@ மறுபடியும் தமிழ் விக்கிக்கு வந்து கட்டுரையில் கிளிக் செய்தால்  போதுமா?
  இந்த முறை தவறு என்றால் இது போல் படிப்படியா செய்ய வேண்டியதை விளக்கினால் மிக்க நன்றி உடையவனாக இருப்பேன்.
  பேரன்புடன்,
  அருண்தாணுமாலயன்

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

தொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
 
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

January 2020

தொகு

  வணக்கம், நீங்கள் மேற்கொண்ட ஒரு மாற்றத்திற்கு, ஒரு நம்பகமான சான்றை இணைக்கவில்லை. எனவே, தற்போது அது நீக்கப்பட்டு, பக்க வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மேற்கோளை இணைத்து, அம்மாற்றத்தை மீண்டும் மேற்கொள்ள விரும்புகின்றீர்களாயின், நீங்கள் அதனை மேற்கொள்ளலாம். நன்றி. AntanO (பேச்சு) 18:17, 3 சனவரி 2020 (UTC)Reply

தயவுசெய்து ஏன்கெனவே உள்ள கட்டுரைகளுக்கு மாற்றும் பெயரில் கட்டுரைகள் உருவாக்க வேண்டாம். நன்றி. --AntanO (பேச்சு) 13:47, 8 பெப்ரவரி 2020 (UTC)

April 2020

தொகு

  தயவு செய்து புத்தாக்க ஆய்வை கட்டுரையில் சேர்க்காதீர்கள். உங்கள் தொகுப்புகளுக்கு நம்பகமான சான்றுகளைச் சேருங்கள். நன்றி. AntanO (பேச்சு) 18:40, 10 ஏப்ரல் 2020 (UTC)

லெஸ்லி செவ்வகம் - இது ஆங்கிலத்தில் எவ்வாறு எழுதப்படுகிறது என அறியத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 23:29, 10 ஏப்ரல் 2020 (UTC)
தயவுசெய்து விக்கிப்பீயாவின் கலைக்களஞ்சியம் போன்று கட்டுரையினை உருவாக்குங்கள். 2012 முதல் பங்களிக்கிறீர்கள். ஆனால் முறையான கட்டுரையினை நீங்கள் உருவாக்குவதில்லை. நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளை மற்றப் பயனர்கள் திருத்த வேண்டும். அவர்கள் திருத்தாவிட்டால் கட்டுரைகளை அப்படியே தகுதியற்ற கட்டுரைகளாக தேங்கிவிடுகின்றன. பலமுறை தெரிவித்தும் நீங்கள் உங்கள் போக்கில் தொகுக்கிறீர்கள். இது ஆரோக்கியமான நிலையல்ல. ஒருவர் தொடர்ச்சியாக உசாத்துணையற்று கட்டுரைகள் உருவாக்கினால், அவரை எச்சரிப்பதற்கும், பின்னர் தடை செய்யவும் இயலும். நன்றி! --AntanO (பேச்சு) 08:11, 3 மே 2020 (UTC)Reply
 

வணக்கம், Arunthanumalayan!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--~AntanO4task (பேச்சு) 20:19, 4 மார்ச் 2021 (UTC)

Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting

தொகு

The Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.

In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by clicking here. Please ping me if you have any questions. Thank you. --User:KCVelaga (WMF), 10:30, 8 மார்ச் 2021 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities

தொகு

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)Reply

re: Candidates meet with South Asia + ESEAP communities

தொகு

Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)Reply

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங

தொகு

அன்புடையீர் Arunthanumalayan,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)Reply

 

You have been a medical translators within Wikipedia. We have recently relaunched our efforts and invite you to join the new process. Let me know if you have questions. Best Doc James (talk · contribs · email) 12:34, 2 August 2023 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Arunthanumalayan&oldid=3770814" இலிருந்து மீள்விக்கப்பட்டது