களியங்காடு

களியங்காடு இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும் ஆகும். [3]

களியங்காடு
—  கிராமம்  —
களியங்காடு
அமைவிடம்: களியங்காடு, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°05′30″N 77°30′58″E / 8.0916998°N 77.5161356°E / 8.0916998; 77.5161356
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இது நாகர்கோவில் -திருவனந்தபுரம் சாலையில் நாகர்கோவிலிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது.இங்கு ஒரு சிவன் கோவிலுள்ளது.இக்கோவிலின் அர்சகரைப் பற்றி குறிப்பிடும் படியான சுவையான செய்தி ஒன்றுண்டு.மார்த்தாண்டவர்மாவின் ஆட்சி காலத்தில்,குடிமரபுத் தலைவர்களாக இருந்த எட்டு வீட்டில் பிள்ளைமார்கள் ,அரசரை கொலை செய்ய சதிசெய்து, அதற்காக ஒரு திட்டம் தீட்டினர்.அப்போது மன்னர் கள்ளியங்காட்டிலுள்ள சிவன் கோவிலில் ஒளிந்து கொண்டார். மன்னரைத் தொடர்ந்து வந்த பிள்ளைமார்கள் ,கோவிலை முற்றுகையிட்டனர். தப்ப வழி இல்லாத நிலையில்,அர்சகர்,தம் உடையில் அரசரைத் தப்பிக்க உதவினார்.பின்பு இதையறிந்த பிள்ளைமார்கள் கோபங்கொண்டு அரச உடையிலிருந்த அர்சகரை வெட்டிச் சாய்த்தனர். இது அர்சகரின் அரசபக்தியைக் காட்டுகிறது.இக் கோவில் இப்போது போதிய பராமரிப்பின்றி இருக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-07-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=களியங்காடு&oldid=3586539" இலிருந்து மீள்விக்கப்பட்டது